Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள்

தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாயத் திட்டத்திற்கமைய, "பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (23) மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நெரஞ்சன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், மக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்களின் பொறுப்புணர்வு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
 
மேலும் குறும்படங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.
 
இதன்போது துறை சார்ந்த அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 
பாடசாலை மாணவர்களுக்கு தனியான பிரிவொன்று காணப்படுவதுடன், தமது பாடசாலையின் பிரதானிகள் ஊடாக ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆக்கங்களைக் கையேற்றல் 2025.10.07 ஆம் திகதியன்று முடிவடைய இருந்ததுடன், அந்தத் திகதியை 2025.11.14 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 24, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.