காத்தான்குடியில் உஸ்ரா ஸயீதா மகிழ்ச்சியான குடும்பம் 12வது தொகுதி பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
காத்தான்குடி அஸ்ஸுன்னா கலை, கலாசார நிலையம் மற்றும் காத்தான்குடி குபா ஜும்ஆ பள்ளிவாயல் இணைந்து நடாத்திய
*”உஸ்ரா ஸயீதா மகிழ்ச்சியான குடும்பம்”*
பாடநெறியினைப் பூர்த்தி செய்த 12வது தொகுதி பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தினம் (2025.11.21ம் திகதி) வெள்ளிக்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-05, குபா ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடும்ப தர்பிய்யா நிகழ்வின் பேர்து நடைபெற்றது.
நிகழ்வின் பிரதான உரையினை காத்தான்குடி அஸ்ஸுன்னா கலை, கலாசார நிலையத்தின் உப செயலாளர் அஷ்ஷெய்க். M.H.M. ஜிப்ரி (மதனி) BA அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இதன்போது பாடநெறியைப் பூர்த்தி செய்த 21 பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி அஸ்ஸுன்னா கலை, கலாசார நிலையம் மற்றும் குபா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள் உட்பட உலமாக்கள், பொதுமக்கள், பெண்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
காத்தான்குடியில் உஸ்ரா ஸயீதா மகிழ்ச்சியான குடும்பம் 12வது தொகுதி பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:




கருத்துகள் இல்லை: