க.பொ.த. (உ.தர)ப் பரீட்சை - 2025 - தனியார் வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல் - முறைப்பாடு பொலிஸ் அவசர அழைப்பு இல. 119
1968ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைக்கமைவாக 2013.06.21 வெளியிடப்பட்ட 1816 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக,
க.பொ.த. (உ.தர) 2025 பரீட்சை தொடர்பாக 2025.11.04 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம்
பரீட்சை முழுமையாக நிறைவடையும் வரை,
பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புக்களை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும், பாடம் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல், மேற்படி பரீட்சையின் ஊக வினாப்பத்திரங்களை அச்சிடஸ், அவற்றை விநியோகித்தல்.
பரீட்சை வினாத்தாள்களிலுள்ள வினாக்களை தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல், அவற்றை தம்வசம் வைத்திருத்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
யாரேனும் ஒருவரோ, நிறுவனமோ, வேறு தரப்பினரோ இக்கட்டளையை கவனத்திலெடுக்காமல் செயற்படின் அந்நபர் அல்லது அந்நிறுவனம் அல்லது அத்தரப்பினர் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவர்.
பாரேனும் ஒருவரோ, நிறுவனமோ, தரப்பினரோ இக்கட்டளையை மீறி செயற்பட்டால் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொலிஸ் தலைமையகத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கோ பின்வரும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.
பொலிஸ் நிலையம் 0112421111
பொலிஸ் அவசர அழைப்பு இல. 119
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி அழைப்பு இல. 1911
பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை 0112784208/0112784537
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: