Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது.

நுகேகொடை கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, “சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” நுகேகொடை கூட்டம் குறித்து மனோ கருத்து.

ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம்.அவரவர் விருப்பம் வேறு. உண்மை வேறு. இதை நாம் பகுத்து அறியனும்.

சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது.

என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல்.

கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்!

இந்த கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியா கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு!
மேடையிலும், அப்படி சொல்ல பட வில்லை. ஆனால், <தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான்> என நாமல் சொன்னார்.

இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு!

இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.

(1)2019ல் கோதாவுக்கும், பின் 2024ல் அனுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர்.

எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!

(2)சிறுபான்மை சில்லறைகள் மூடி-கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!

(3)பாராளுமன்ற, எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”!

சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.