செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது.
அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.
சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன.
தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 10, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 10, 2025
Rating:
.jpeg)
கருத்துகள் இல்லை: