உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் ஜும் ஆ தொழுகை மீள ஆரம்பம்.
(எம். பஹத் ஜுனைட்)
வவுனதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் 2008 க்குப் பின்னரான மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் ஜும் ஆ தொழுகை இடம்பெற்ற போதிலும் 2019 இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலை காரணமாக மீண்டும் மக்களின் குடிபெயர்வு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்ட ஜும் ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை (21) மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இடம் பெற்ற ஜும் ஆ பிரசங்கம் மற்றும் தொழுகையை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா காத்தான்குடி கிளைத் தலைவர் அஷ்ஷேய்க் ஹாறூன் (ரஷாதி) நிகழ்த்தியதுடன் ஆயத்திய மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.இக்பால், ஜம் இய்யதுல் உலமா உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிராமத்து பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் ஜும் ஆ தொழுகை மீள ஆரம்பம்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2025
Rating:











கருத்துகள் இல்லை: