டெலன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் 1000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் அங்குரார்பண வைபவம் காத்தான்குடியில்
(செய்தியாளர்,றுஸ்த் நௌபர்)
காத்தான்குடி டெலன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் 1000 விசேட தேவையுடைய மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்களை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
காத்தான்குடி டெலன் சமூக சேவை அமைப்பின் நிறுவுனர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை பராமரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீனின் வழிகாட்டுதலில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜூதின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் 167ஏ கிராம சேகவர் நஜீமா ஜறூப், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், நிதி உதவியாளர்கள், டெலன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர் பயணாளிகள் என பலரும் பங்கேற்றனர்.
இதன் போது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்களுக்கான பணக் கூப்பன்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட தேவையுடையவர்களுக்கான மருத்துவ உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
டெலன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் 1000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் அங்குரார்பண வைபவம் காத்தான்குடியில்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2025
Rating:

கருத்துகள் இல்லை: