காத்தான்குடி புதிய காதி நீதிபதி மெளலவி ரிபாய் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வு
காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற அதிபர் மெளலவி ஏ.சி.எம்.ரிபாய் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு (15) சனிக்கிழமை காலை காத்தான்குடி காதி நீதிமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.
இதன் போது புதிய காதி நீதிபதி ஒய்வு பெற்ற அதிபர் மெளலவி ஏ.சி.எம்.ரிபாய் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு காதி நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவர் மெளலவி ஹாரூன் ரஷாதி செயலாளர் மெளலவி ஜவாஹிர் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் மெளலவி ரமீஸ்
ஜமாலி சம்மேளன திருமண நல்லிணக்க சபையின் செயலாளர் ஏ.எம்.எம்.சாதிக் j.p. முன்னாள் காதி நீதிபதி ஹாலித் ஹாஜியார் மெத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் செயலாளர் உசனார் உட்பட முக்கிஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
துஆப் பிராத்தனையை மெளலவி அமீன் ஹசரத் நடாத்தினார்.
(எம் எஸ் எம் நூர்தீன்)
காத்தான்குடி புதிய காதி நீதிபதி மெளலவி ரிபாய் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2025
Rating:















கருத்துகள் இல்லை: