காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாிசளிப்பு நிகழ்வொன்று சனிக்கிழமை (15) மஞ்சந்தொடுவாய் அல்-பஜ்ர் பள்ளிவாயலில் நடைபெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.எஸ்.எம். நூா்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைரூஸ் கலந்துகொண்டு பாிசில்களை வழங்கி வைத்தாா்.
காத்தான்குடி மீடியா போரத்தின் கள விஜயம் தொடா்பான தகவல்களை தேசிய ரீதியாகவும் உள்ளூா் மட்டத்திலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறிக்கையிட்ட ஊடகவியலாளா்களுக்கு "சிறந்த அறிக்கையிடலுக்கான பாிசு" வழங்கப்பட்டது.
இப்பாிசுகள் எம்.ஜே.எம்.பஹத், எம்.ஐ.அப்துல் நஸாா், எம்.எஸ்.எம்.ஸஜி மற்றும் பீ.எம்.பயாஸ் ஆகியோருக்கு நிகழ்வின் பிரதம அதிதி எம்.பீ.எம்.பைரூஸினால் வழங்கி வைக்கப்பட்டதோடு களவிஜயத்தில் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பாரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி பாிசளிப்பு நிகழ்வில் போரத்தின் பொருளாளா் எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, உப தலைவா் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான், போரத்தின் சமூக நலன்புரி பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.டீன் பைரூஸ், எம்.ரீ.எம்.யூனுஸ், போரத்தின் தகவல் பணிப்பாளர் எம்.எஸ்.சஜித் அஹமட், போரத்தி்ன் உறுப்பினா்களான ஏ.என்.ஏ.நாஸிர், எம்.எம்.எம்.அஸீம் ஆகியோர் பங்குபற்றினா்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பூர்வீக கிராமமான உன்னிச்சை இருநூறுவில் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனை, யானைகளின் தொல்லை மற்றும் கவனிப்பாரற்ற நிர்க்கதி நிலை போன்ற காரணங்களால், தமது பூர்வீக காணிகளை விற்பனை செய்துவிடு அங்கிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, மேற்படி பூர்வீக கிராமத்தை பாதுகாத்தல், அங்குள்ள மக்களின் பாதுகாப்பான இருப்பினை உறுதிப்படுத்தலுக்காகவும் குறித்த விடயங்களை ஊடகமயப்படுத்தும் நோக்கில் அறிக்கையிடுவதற்காகவும் மேற்படி கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிந்தது.
இக்களப் பயணத்தில் காத்தன்குடி மீடியா போரத்தின் ஆயுட்காலத் தலைவர் எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி), செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸார், பொருளாளர் எம்.எப்.எம். பஸால் ஜிப்ரி, உப தலைவர் எம்.எஸ்.எம்.ஸஜி, உப செயலாளர் ஏ.எல். அதீப் அஹமட். சமூக நலன்புரி பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.டீன் பைரூஸ், தகவல் பணிப்பாளர் எம்.எஸ்.சஜித் அஹமட், ஊடக இணைப்பாளர் எம்.ஜே.எம்.பஹத், போரத்தின் நிருவாக சபை உறுப்பினர்களான மௌலவி என்.எம்.எம்.நௌபர் (பலாஹி), பீ.எம்.பயாஸ், எம்.எம்.எம்.அஸீம் மற்றும் ஊடகவியலாளர் என்.எம்.எம்.பாயிஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: