உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நாகூர் ஹனிபா நூல் வெளியீடு
வெள்ளாப்புவெளி நண்பர்குழு ஏற்பாட்டில் இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவாக (1025-2025) நன்னூல் பதிப்பகம் பதிப்பித்துள்ள உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 3.45 முதல் கொழும்பு-10 அல்ஹிதாயா கல்லூரி பஹார்தீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாவலர் நல்லதம்பி சாகிபின் புத்திரர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலி அவர்கள் முதன்மைப் பங்கேற்பாளராகக் கலந்துகொள்வார்.
கௌரவப் பங்கேற்பாளர்களாக பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா, கலாநிதி பி.ஏ.ஹூஸைன்மியா,அல்ஹாஜ் எம்.சி.பஹார்தீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.மணலி அப்துல்காதர் நூல் தொகுப்பாளருரையை வழங்குவார்.
மேமன் கவி தொடரக்கவுரையாற்றுவார். செய்தியாசிரியர் எம்.சி.நஜூமுதீன் நிகழ்வை ஒருங்கிணைப்பார். நிகழ்வில் முல்லை முஸ்ரிபா வெளியீட்டுரையை வழங்குவார்.
நாதக்குரலினிமை நாகூர் ஈ.எம்.ஹனிபா என்கிற நூற்றாண்டிசையைக் கொண்டாட அனைவரையும் வெள்ளாப்புவெளி நண்பர்குழு அழைக்கிறது
உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நாகூர் ஹனிபா நூல் வெளியீடு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:


கருத்துகள் இல்லை: