நீதித்துறையிலும் பிடுங்கப்படும் களைகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை சுத்தப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுக்குறியதும் ஆகும்.
நாட்டின் இலஞ்ச ஊழலை ஒழித்தல்
பாதாள உலகம் குழுக்களை கட்டுப்படுத்தல்
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்தல்
சட்டரீதியற்ற ஆயுதப் பாவனையை இல்லாது
ஒழித்தல்
போதை பாவனையையும் பரவலாக்கத்தையும் இல்லாத ஒழித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது
மேற் சொன்ன தொடர் நடவடிக்கைகளில் அடுத்த அங்கமாக நீதித்துறையை சுத்தப்படுத்தும் மிகப்பெரும் கைங்கரியத்தையும் அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேல் நீதிமன்ற நீதிபதி உட்பட 20 நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் முக்கிய மூன்று கூறுகளில் நீதி துறையும் ஒரு ஒன்றாகும்.
நீதித்துறை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற போதே அரசாங்கத்தின் ஏனைய துறைகளான சட்டத்துறையும்
நிர்வாக நிறைவேற்று துறையும் சிறப்புற இயங்கும்.
நாட்டுக்கான சட்டங்களை உருவாக்கும் பணியை சட்டத்துறையும்
அவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டத்தை முறையாக நிர்வாகம் செய்வதை நிறைவேற்றுத் துறையும்
இரண்டு துறைகளும் சீராக சிறப்பாக இயங்குவதை கண்காணித்து கட்டுப்படுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கும் உரிய கடமைகளாக அமைகின்றன.
இம்மூன்று துறையும் சீராக சிறப்பாக செயற்படும் போது தான் ஒரு நாட்டில் ஜனநாயகமும் நல்லாட்சியும் உறுதிப்படுத்தப்படும்.
கடந்த காலங்களில் நாட்டின் சீரழிவுக்கு மிக முக்கிய காரணமாக நீதித்துறையில் நிலவிய குறைபாடுகளே மிகப் பிரதானமாக அமைந்தன.
இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியும் நாட்டை முற்றாக கொள்ளையடித்து திட்டமிட்ட அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாடு பாரிய கடனுக்குள் உட்படுவதற்கான அனைத்தையும் செய்தது மஹிந்த குடும்பம்.
இந்த மஹிந்த குடும்பம் ஆட்சிக்கு வராமல் தடுக்கக்கூடிய முழு தகமையும் பொறுப்பும் அப்போதைய நீதித்துறைக்கு இருந்த போதும் நீதித்துறையின் நிலவிய குறைபாட்டினால் பிழையான ஒருவரான மகிழ்ந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆகினார்.
2004 சுனாமி இன் போது ஹெல்பிங் அம்பாந்தோட்ட (Helping Ammbanthodda )
என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அப்போதைய பிரதம நீதி அரசராக இருந்த சரத் என் சில்வா மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றும் வகையில் மஹிந்த ஊழலில் ஈடுபடவில்லை என்ற அடிப்படையில் தீர்ப்பை வழங்கினார்.
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ அப்போது ஊழலில் ஈடுபட்டிருந்தார் என்பது பரவலாக பேசப்பட்டு விடயம்
ஆனால் தீர்ப்பினை நீதி நெறிமுறைகளுக்கு மாற்றமாக பிரதம நீதி அரசர் பக்க சார்பாக வழங்கி மஹிந்தவை காப்பாற்றி இருந்தார்.
அப்போது நீதி அடிப்படையில் நேர்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க முடியாது போயிருக்கும்.
பின்னிய நாட்களில் அப்போதைய பிரதம நீதி அரசர் சரத் என் சில்வா "நான் மகிந்தவை காப்பாற்றும் வகையில் பிழையாக தீர்ப்பை வழங்கி விட்டேன் என்று கை சேதப்பட்டிருந்தார்.
பாருங்கள் அன்று நீதித்துறை வழங்கிய பிழையான தீர்ப்பால் பிழையான ஒருவர் நாட்டின் தலைவராகி நாட்டு மக்களை படுகுழியில் தள்ளிய வரலாறு இந்த நாட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
எனவேதான் நீதித்துறை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டில் அனைத்து துறைகளும் சீரும் சிறப்பாக செயற்படும்.
இதையே பிரித்தானிய அரசியல் அறிஞர்
ஏ வி டைசி சட்ட ஆட்சி கோட்பாட்டின் ஊடாக தெளிவுபடுத்துகிறார்.
சட்டத்தின் முன்னிலையில் சகலரும் சமம் அவன் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் எல்லோரும் சட்டத்தின் முன் சமம் .
அவர்கள் அனைவருக்கும் சமமான நீதியே வழங்கப்படுவதுடன் குற்றங்களுக்கு பொருத்தமான சரியான தண்டனை வழங்கப்படுவதையும் நீதி இயற்கை நீதியின் அடிப்படையில் ஒப்புரவாக வழங்கப்பட வேண்டும் என சட்ட ஆட்சிக் கோட்பாடு தெளிவுபடுத்துகிறது.
இன்று நீதிபதிகள் தொடர்பில் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் 20 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது இலங்கையின் வரலாற்றில் முன் ஒருபோதும் நடக்காத ஒரு மிகப்பெரும் வேலையை ஜனாதிபதி அனுகுமார தலைமையிலான அரசாங்கம் செய்திருக்கிறது.
இத்தகைய செயற்பாடுகளே நாட்டில் நீதி நியாயத்தை நிலைநாட்டி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தி நல்லாட்சியை மக்களுக்கு வழங்கும்.
அன்புடன்
யு.எல்.எம்.என் முபீன்.
நீதித்துறையிலும் பிடுங்கப்படும் களைகள்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: