36 வருட கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற காத்தான்குடி றபா ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு விழா
பல்வேறு பாடசாலைகளில் 36 வருடங்களாக கல்விப் பணியாற்றி தன்னுடைய அறுபதாவது வயதினை பூர்த்தி செய்து ஓய்வு பெற்ற காத்தான்குடி மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் ஆசிரியரும் ஆரம்பக்கல்விப் பிரிவின் பகுதித் தலைவருமான றபா ஆதம்லெப்பை அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா பாடசாலையினுடைய அதிபர் S.I. யஸீர் அறபாத் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக படசாலையில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றார்களினுடைய ஏற்பாட்டிலே இந்நிகழ்வு இடம் பெற்றது.
காத்தான்குடி பிரதேசத்தின் முதலாவது கல்விமானி பட்டதாரியான றபா ஆதம்லெப்பை ஆசிரியர் அவர்கள் கல்விச் சமூகத்திற்கு பெரும் பங்காற்றி பல மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் கல்விப் பணியைத் தாண்டி பாடசாலைகளில் பல்வேறு புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் தொடரான பங்களிப்புகளை மேற்கொண்டு வந்த ஒருவர் எனவும் ஓய்வு பெற்றாலும் பாடசாலையினுடைய தொடரான அபிவிருத்தி பணிகளில் அவர்கள் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் பாடசாலை அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்கள் இந்நிகழ்வில் ஆற்றிய தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
36 வருட கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற காத்தான்குடி றபா ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு விழா
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:








கருத்துகள் இல்லை: