ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வளமான நாடு - அழகான வாழ்க்கை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டுப் பகிர்வு, உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும் சமூகங்களுக்கு இடையிலான சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, பெறுமதிமிக்க கலாசாரம் மற்றும் உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இணைந்தே தெரிவு செய்ய முடியும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் அந்த மரபுரிமைகளின் மீதே வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவுபடுத்தினார். சூரிய பெயர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சடங்கு முறைகள், பிறரையும் இயற்கையையும் கௌரவிக்கும் ஒரு புதிய மனிதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தப் பண்புகள் அந்தச் சில நாட்களுக்கு மாத்திரமன்றி, முழு வருடமும் எமது நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வருடம் முகங்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புறச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாடென்ற வகையில் ஒன்றாக இணைந்து இந்தச் சவால்களை வெற்றிகொள்ள புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும் கூட்டுப்பண்பு அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්; ජනාධිපති අනුර කුමාර දිසානායකගෙන් අලුත් අවුරුදු පණිවිඩයක්
භෞතිකව සහ ආධ්යාත්මිකව අලුත් වීමේ අපේක්ෂාව සංකේතවත් කරන සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්ද නිමිත්තෙන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සිය සුබපැතුම් පණිවිඩය නිකුත් කර තිබේ. පාරම්පරික සම්ප්රදාය සුරකිමින් චාරිත්රවලට සහ ආගමික කටයුතුවලට මුල්තැන දෙමින් සාමුහිකව කටයුතු කිරීම මඟින් අපේ රටේ අනන්යතාව සහ ප්රජාවන් අතර පවතින සමාජ-සංස්කෘතික බැඳීම ලොවට විදහා දක්වන බව ජනාධිපතිවරයා පවසයි.
රටේ අනාගත සංවර්ධන මාවත මෙරට අගනා සංස්කෘතිය සහ ඓතිහාසික උරුමය සමඟ බැඳී පවතින බවත්, රජයේ සියලු සංවර්ධන සැලසුම් එම පදනම මත ශක්තිමත්ව සකස් කර ඇති බවත් ඔහු සඳහන් කළේය. පසුගිය වසරේ මුහුණ පෑ ස්වභාවික ව්යසන සහ මැදපෙරදිග යුද්ධයෙන් එල්ල වී ඇති අභියෝග ජයග්රහණය කිරීමට රජය මේ වන විට සැලසුම් සහගත වැඩපිළිවෙළක් ක්රියාත්මක කරමින් සිටින බව ඔහු වැඩිදුරටත් පැවසීය. අලුත් අවුරුද්දේ චාරිත්රවලින් ප්රකට වන සාමුහිකත්වයේ ගුණාංග මුළු වසර පුරාම අපගේ චර්යාවෙන් නිරූපණය විය යුතු යැයි පැවසූ ජනාධිපතිවරයා, 'පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්' සැමට උරුම කර දීමට සහෝදරත්වයෙන් අත්වැල් බැඳගන්නැයි සියලු දෙනාට ආරාධනා කළේය.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
A Thriving Nation – A Beautiful Life; President Anura Kumara Dissanayake Issues Detailed New Year Message
President Anura Kumara Dissanayake has released an extensive message for the Sinhala and Tamil New Year, emphasizing it as the nation's foremost cultural festival representing physical and spiritual renewal. He noted that observing traditions collectively at a common auspicious time reflects Sri Lanka’s unique identity and the deep-rooted socio-cultural bonds shared among its diverse communities.
The President firmly stated that the nation’s path to development must be shaped in harmony with its distinguished historical heritage, confirming that all future government plans are built upon these traditional foundations. He highlighted that the rituals associated with the solar transition nurture compassionate individuals who value togetherness and respect nature—virtues that should guide conduct throughout the entire year. Addressing recent natural disasters and the external challenges from the Middle East conflict, he reassured the public that well-managed programmes are already in motion to overcome these hurdles. He concluded by inviting all citizens to unite in solidarity to achieve the vision of "A Thriving Nation – A Beautiful Life."
KR TV Network
KR TV Lankan Voice
Local News
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 14, 2026
Rating:
கருத்துகள் இல்லை: