Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் 16,000 மாணவர்களுக்காக 55 புதிய விடுதி திட்டம்

பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடு முழுவதும்

உள்ள அரச பல்கலைக்கழகங்களில் 55புதிய விடுதிகளை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உயர்கல்வி பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இத்திட்டம் 3 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்காகவும் நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய முன்னேற்றங்கள் பின்வருமாறு:

  1. கிழக்குப் பல்கலைக்கழகம்
கிடைக்கபெற்ற மொத்த திட்டங்களின் எண்ணிக்கை : ஐந்து புதிய விடுதிகளுக்கான திட்டங்கள் .
விடுதி வகை : Model A ( மாணவர்கள் 400) வகையிலான மூன்று விடுதிகள் மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையிலான இரண்டு விடுதிகள்.
வசதிகள் கிடைக்கப்பெறும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை : 1,600 பல்கலைக்கழக மாணவர்கள்
தற்போதைய முன்னேற்றம் : ஒரு விடுதி அமைப்பதற்கான விலை கோரப்பட்டுள்ளது (Bids) 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதுடன், போதும் தகைமை பெற்றுள்ள நிறுவனத்தை தெரிவுசெய்யும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
2. யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.

கிடைக்கப்பெறும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை: 02 விடுதித் திட்டம்.
விடுதியின் வகை Model A ( 400 மாணவர்கள்) வகையிலான 01 மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையிலான 01 விடுதி 01.
வசதிகளை பெற்றுக்கொள்ளும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 600.
தற்போதைய முன்னேற்றம்: ஒரு விடுகத நிர்மாணிப்பதற்கு பெறுகை விலை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தினால் அந்த யோசனை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3. சப்ரகமுவ பல்கலைக்கழகம்.

கிடைக்கப்பெறும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை: 07 விடுதித் திட்டம்.
விடுதியின் வகை: Model A (மாணவர்கள் 400) வகையான 04 விடுதிகள் மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையில் 03 விடுதிகள்.
வசதிகளை பெற்றுக்கொள்ளும் மொத்த பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 2,200.
இப்போதைய முன்னேற்றம்: ஒரு விடுதியை நிர்மாணிப்பதற்காக பெறுகை விலை கோரல் 2026 மே 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் 16,000 மாணவர்களுக்காக 55 புதிய விடுதி திட்டம் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.