பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் M.உமாகாந் அவர்களை கௌரவித்து சேவை நலன் பாராட்டும் நிகழ்வு ஏறாவூர் மண்ணில்.
பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் M.Umakanth - Professor in Medicine, MBBS (Jaf), MD (Col), MRCP (UK), MRCP (Lon), FRCP (Edin), FCCP (SL), FACP (USA), Dip in Diabetes (Liverpool Academy), University Medical Unit THB. அவர்களை கௌரவித்து சேவை நலன் பாராட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விஷேட பொது வைத்திய நிபுணராகவும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியராகவும் கடமையாற்றி ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் நீண்ட காலமாக வைத்திய ஆலோசனைகளை வழங்கி விஷேடமாக Covid-19 காலத்தில் எமது பிரதேச மக்களை Covid-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி எமது பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று புரூனை நாட்டிற்குச் செல்லும் பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் M. Umakanth - Professor அவர்களை கௌரவித்து சேவை நலன் பாராட்டு நிகழ்வு ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கௌரவ தலைவர் MBMA. சக்கூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. SA.துஷ்யந்தன் - (Obs&Gyno) MBBS,MD, பொது வைத்திய நிபுணர் Dr.M.அஹிலன் (VP) MBBS,MD ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கௌரவ பணிப்பாளர்கள், பொது முகாமையாளர், கூட்டுறவு வைத்தியசாலை முகாமையாளர், கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு வைத்தியசாலை பகுதி நேர உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் Dr. M. உமாகாந்த் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் M.உமாகாந் அவர்களை கௌரவித்து சேவை நலன் பாராட்டும் நிகழ்வு ஏறாவூர் மண்ணில்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 05, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 05, 2026
Rating:










கருத்துகள் இல்லை: