Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ) வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்! இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை?


රෝහල් කාර්ය මණ්ඩලයට තාවකාලික ස්ථාන මාරුවක්! සමාජ සමගිය ජාතිවාදී දේශපාලනයේ ගොදුරක්ද?

"வைத்தியசாலையின் கட்டமைப்பில் முறையான சீருடை விதிகள் நடை முறையில் உள்ளன. ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், ஊழியர்கள் மற்றும் அரச தரப்பினர் அதனை சுகாதார அமைச்சிடம் முறைப்பாடாக அளிக்காலாமே தவிர, அதனை இன அல்லது மதப் பிரச்சனையாக மாற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது." 

 "சிறிய விடயங்கள் கூட இன முரண்பாடுகளாக வெடிக்கக் கூடாது என்பதில் அவதானம் செலுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் மற்றும் வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டையும், அமைதியையும் கருத்தில் கொண்டே ஊழியர்ளுக்கான தற்காலிக இடமாற்றம்" 

சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி அண்மையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்டுத்திய ஆறு கட்சிகள் கூட்டணியின் உண்மை முகம் ஒரு மாதம் முடியும் முன்பே மக்கள் மத்தியில் அம்பலமாக்கப்பட்டுள்ளது."

மக்களின் உணர்ச்சிவசப்பட்ட நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஊழல்வாதிகளும், தீவிர இனவாதிகளும் மீண்டும் தங்களை "சமூகத்தின் பாதுகாவலர்களாக" காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த தீவிர போக்குடைய சில முகநூல் பயனாளர்களை திரை மறைவிலிருந்து இயக்கி, சமூக ஊடங்கள் வாயிலாக எல்லை மீறிய வெறுப்பு பரப்புறைகளை திட்டமிட்டு பதிவேற்றி வருகின்றனர். 



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை விவகாரம் மற்றும் அருகில் உள்ள அஸ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கான முடிவு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கவனத்திற்கு கொண்டு வரப்பபட்டதை அடுத்து எடுக்கப்பட்டது.

குறித்த ஆடை சர்ச்சை தொடர்பாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 2026 ஆகஸ்ட் 18ம் திகதி அன்று பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் தற்காலிக தீர்வாக குறித்த ஒன்பது பெண் ஊழியர்களையும் அருகில் உள்ள அஸ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.


சிறிய விடயங்கள் கூட இன முரண்பாடுகளாக வெடிக்கக் கூடாது என்பதில் அவதானம் செலுத்தப்பட்டு, சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புடைய பிரதி அமைச்சர்கள் இந்த நிலமையைச் சுமூகமாகத் தீர்க்கவும், அமைதியைப் பேணவுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் மற்றும் வைத்தியசாலையின் சுமுகமான செயல்பாட்டைக் கருத்திற் கொண்டே புதிதாக நியமணம் பெற்ற பெண் ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் அஸ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடைப் பிரச்சினைக்குத் தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் இருக்க குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நிரந்தரத் தீர்வை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு, வைத்தியசாலை கட்டமைப்பில் முறையான சீருடை விதிகள் நடைமுறையில் உள்ளன. ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், ஊழியர்கள் மற்றும் தரப்பினர் அதனைச் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடாக அளிக்கலாமே தவிர, அதனை இன அல்லது மதப் பிரச்சினையாக மாற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அரசாங்கத்தின் இந்த தற்காலிக முடிவை மையமாக வைத்து எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 159 பெரும்பான்மை  ஆசனங்களுடன் பலத்துடன் இருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், முஸ்லிம் ஊழியர்களின் ஆடை உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டப்பூர்வமான அல்லது நிரந்தரமான தீர்வை வழங்காமல், தற்காலிக இடமாற்றத்தை வழங்கியது பலவீனமான செயல் என விமர்சிக்கின்றனர்.

அரசாங்கம் தமிழ் டயஸ்போராவிற்கும் பயந்துள்ளார்களா? அல்லது தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான ஒரு தற்காலிகமான இடமாற்றத்திற்கான சமரச முடிவை எடுத்துள்ளது என எதிர்த்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஜனாதிபதிக்கும் NPP அரசாங்கத்திற்கும் எதிராக விமர்சனங்களை முன்வைப்பதற்கு வலுவான அரசியல் காரணிகள் இல்லாத நிலையில், இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான சிறுபான்மையின விவகாரங்களை எதிர்த்தரப்பினர் கையில் எடுத்து தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் தேவையற்ற  ஒரு முரண்பாட்டை தோற்றுவித்து அதில் அரசியல் இலாபம் தேடவே அவர்கள் முயற்சிக்கின்றனர் என நடுநிலை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு, தேர்தல் காலங்களில் அல்லது அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவை இழக்கும் போது, தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி வாக்கு வங்கியைக் தக்கவைத்துக் கொள்ளும் பழைய அரசியல் பாணியே இது எனவும் சுட்டிக்காட்டப்படுவதோடு, தேசியம் பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் இவ்விடயத்தை பூதாகரமாக பற்ற வைத்து நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மை உருவாக்குவதே இதற்கு பின்னால் இருந்து செயற்படுபவர்களின் குறுகிய அரசியல் நோக்கமாக உள்ளது.

சிறுபான்மை மக்களிடையே காணப்படும் மத, கலாசார மற்றும் உரிமை சார்ந்த உணர்வுகளை மையப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்துவதும், அதன் மூலம் தங்களின் வீழ்ச்சியடைந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதும் பாரம்பரிய அரசியல்வாதிகளின் வழக்கமான அரசியல்  உத்தியாகவே இருந்து வருகின்றது.

​"அரசாங்கம் பயந்துவிட்டது" அல்லது "சமரசம் செய்துவிட்டது" என்ற விவாதங்களை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம், ஒரு நிர்வாக ரீதியான தற்காலிக தீர்வை, உரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவமாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.

கல்முனைப் பகுதி ஏற்கனவே எல்லை நிர்ணயம், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் காணி விவகாரங்கள் என தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நுட்பமான அரசியல் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இவ்வாறான சூழலில், வைத்தியசாலை சீருடை விவகாரத்தை ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும் மறு தரப்பிற்கு எதிராகவும் சித்தரிப்பது, சாதாரண மக்களுக்கிடையே தேவையற்ற சந்தேகத்தையும் இடை வெளியையும் உருவாக்கும் அபாயம் கொண்டது.

திரை மறைவில் கூட்டாக இணைந்து தீட்டப்படுகின்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவும்,  மக்களால் பறிக்கப்பட்ட அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பல தசாப்தங்களாக ஒன்றாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒரு சில அரசியல்வாதிகளின் குறுகிய கால இலாபங்களுக்காகத் தங்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒருபொழுதும் நடுநிலைவாதிகள் அனுமதிக்கக் கூடாது.

மக்களின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையைப் பயன்படுத்தி, மீண்டும் ஊழல்வாதிகளும், தீவிர இனவாதிகளும் தங்களை "சமூகத்தின் பாதுகாவலர்களாக" சித்தரித்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, சமூக ஊடகங்களை திரை மறைவிலிருந்து கையாளும் தமிழ் -முஸ்லிம் சமூகங்களில் உள்ள முகநூல் தீவிரபோக்காளர்களை  வைத்து எல்லை மீறிய பரப்புரையாளர்களை முகநூல்களில் பதிவேற்றி வருகின்றார்கள். 

இந்த நிலையில், இரு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மிகவும் அவதானத்துடன் தொழிற்பட வேண்டியது அவசியமாகும். சமூக பிளவை ஏற்படுத்தும் தீவிர முகநூல் பயனாளர்களின் உணர்ச்சிகரமான முகநூல் பதிவுகளுக்குப் பலியாகாமல், பிரச்சினைகளை நிதானமாகவும் சட்டப்பூர்வமாகவும் அணுகுவதே இரு சமூகங்களினதும் நீண்டகால ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஜூலை 2026 இல் முஸ்லிம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஆறு கட்சிகள் இணைந்து உருவாக்கிய பொதுவான கூட்டணியானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், இது போன்ற தங்களின் சொந்தப் பிராந்தியத்தில் வாழும் பெண் ஊழியர்களின் அடிப்படைத் தொழில்சார் மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை செய்யவில்லை என்ற அதிருப்தி சிறுபான்மை மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நியாயமான விமர்சனங்களாக எழுந்துள்ளன.

அவர்கள் அமைத்த கூட்டணியானது NPP அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் அதிகாரத்தையும், தேர்தல் இலக்குகளையும் அடைவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதே தவிர, அடிமட்ட மக்களின் கலாச்சார, மத உரிமைகளை உடனடியாகப் பாதுகாப்பதிலும், இன நல்லுரவை ஏற்படுத்துவதிலும் அக்கறை காட்டப் போவதில்லை என்பதே உண்மை.  அவர்களுடைய ஊடக அறிக்கைகளையும் தாண்டி,  கூட்டணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஒரு அரசியல் சித்து விளையாட்டு நாடகம் என்பது கூட்டணி அமைத்து ஒரு மாதம் முடிவடைவதற்கு முன்பே சிறுபான்மை மக்களுக்கு அம்பலமாகிய விடயமாக மாறியுள்ளது.

ஆகவே, ஒரு அரச நிறுவனத்திற்குள் ஏற்படும் நடைமுறை சார்ந்த அல்லது கலாசார சீருடை சார்ந்த பிரச்சினைகளை சட்டம், மனித உரிமை மற்றும் துறைசார் ஒழுங்கு முறைகளுக்கு அமைவாகவே அணுக வேண்டும். அதனை இனவாத அல்லது மதவாத ஆயுதமாக மாற்றி, அரசாங்கத்திற்கும், சமூகங்களுக்கும் இடையே தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்க முனையும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை இனங்கண்டு மக்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு படித்த இளைஞர் சமூகத்திற்கும், நடுநிலை சிந்தனையாளர்களுக்கும் இருக்கின்றது.

எனவே, குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்படும் வதந்திகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரங்களை நிராகரித்து, நிதானத்தை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். சமூக வலைத்தளங்களை கையாளும் மக்கள் உடனடி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல், எதிர்கால சந்ததியினரின் அமைதியான வாழ்வையும், அம்பாறை மாவட்டத்தின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பையும் மனதில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன்பார்ப்பதைத் தவிர்த்து, மத மற்றும் கலாசார உரிமைகளை பரஸ்பரம் மதித்து நடப்பதுடன், சமூக நல்லிணக்கத்தை முதன்மையாகக் கொண்டு இரு சமூகங்களும் செயற்படும் போது மட்டுமே, இவ்வாறான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் ஆரோக்கியமான தீர்வை எட்ட முடியும்.

அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
20-08-2026

(සිංහල පරිවර්තනය සමඟ) வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்! இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை?

රෝහල් කාර්ය මණ්ඩලයට තාවකාලික ස්ථාන මාරුවක්! සමාජ සමගිය ජාතිවාදී දේශපාලනයේ ගොදුරක්ද?

ජනතාවගේ චිත්තවේගීය තත්ත්වය තම වාසියට යොදා ගනිමින් දූෂිත සහ අන්ත ජාතිවාදීන් නැවත වරක් තමන් "සමාජයේ ආරක්ෂකයින්" ලෙස හුවා දැක්වීමට උත්සාහ කරයි. දේශපාලන බලය අල්ලා ගැනීමේ අරමුණින් දෙමළ මුස්ලිම් ප්‍රජාවට අයත් ඇතැම් රැඩිකල් ෆේස්බුක් පරිශීලකයන් තිරය පිටුපස ක්‍රියාත්මක වෙමින් සමාජ මාධ්‍ය හරහා වෛරී ප්‍රචාර සැලසුම් කර උඩුගත කරමින් සිටී.

විධිමත් නිල ඇඳුම් නීති රෝහල් පසුබිම තුළ ක්රියාත්මක වේ. ගැටලු ඇත්නම් එය වාර්ගික හෝ ආගම්වාදී ප්‍රශ්නයක් බවට පත් නොකර සෞඛ්‍ය අමාත්‍යාංශයට පැමිණිලි කළ හැකි බව සේවකයින්ට සහ රජයේ පාර්ශ්වයට අවධාරණය කර ඇත.

සුළු ජාතික ජනතාවගේ අයිතීන් සුරකින බව පවසමින් මුස්ලිම් දෙමළ ජනතාව නියෝජනය කරමින් පසුගියදා ගොඩනැගුණු සය පක්‍ෂ හවුලේ සැබෑ මුහුණුවර මසක් ගතවීමට පෙර මහජනතාව අතර හෙළිදරව් වී තිබේ.

සුළු ප්‍රශ්න පවා වාර්ගික ආරවුලක් ඇති නොවීමට වග බලා ගෙන ඇති අතර, විපතට පත් කාන්තා නිලධාරිනියන්ගේ ආරක්ෂාව, ඔවුන්ගේ අයිතීන් සහ රෝහලේ ක්‍රියාකාරිත්වය සහ සාමය පිළිබඳ සුමටව කටයුතු කරමින් කාර්ය මණ්ඩල තාවකාලික ස්ථාන මාරුවීම් ලබා දී ඇත.
+++++++++++++++

කල්මුණේ උතුර ආදාර් රෝහලේ මුස්ලිම් සෞඛ්‍ය සේවිකාවන් 9 දෙනා තාවකාලිකව අසල පිහිටි අශ්‍රබ් අනුස්මරණ රෝහලට මාරු කිරීමට ගත් තීරණය සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්තා ජයතිස්ස මහතාගේ අවධානයට යොමු විය.

මෙම ඇඳුම් ආරවුල සම්බන්ධයෙන් සෞඛ්‍ය අමාත්‍ය නලින්ද ජයතිස්ස මහතාගේ ප්‍රධානත්වයෙන් 2026 අගෝස්තු 18 වැනි දින පාර්ලිමේන්තු පරිශ්‍රයේදී දෙමළ සහ මුස්ලිම් මන්ත්‍රීවරුන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් ද පැවැත්විණි. ඒ සඳහා තාවකාලික විසඳුමක් ලෙස එම සේවක සේවිකාවන් නවදෙනා අසල පිහිටි අෂ්රබ් අනුස්මරණ රෝහල වෙත තාවකාලිකව මාරු කිරීමට එකඟතාවකට පැමිණ ඇත.

සුළු ප්‍රශ්න පවා වාර්ගික ගැටුම් ඇති නොවීමට වග බලා ගෙන ඇති අතර සෞඛ්‍ය අමාත්‍යාංශය සහ අදාළ නියෝජ්‍ය අමාත්‍යවරුන් තත්ත්වය සුමටව විසඳා සාමය ආරක්ෂා කිරීමට පියවර ගෙන ඇත. එමෙන්ම අෂ්රබ් අනුස්මරණ රෝහලට අලුතින් බඳවාගත් සේවිකාවන් තාවකාලිකව මාරුකර යැවීමට කටයුතු කර ඇත්තේ විපතට පත් සේවක සේවිකාවන්ගේ ආරක්ෂාව, ඔවුන්ගේ අයිතීන් සහ රෝහලේ සුමට ක්‍රියාකාරිත්වය සැලකිල්ලට ගෙනය.

ඉහත කී නිල ඇඳුම් ගැටලුව සඳහා තාවකාලිකව මෙම ස්ථාන මාරුව ලබාදී ඇතත් මින් ඉදිරියට එවැනි ගැටළු ඇති නොවීමට කෙටි කාලීන සහ දිගුකාලීන ස්ථීර විසඳුමක් ලබාදීමට සෞඛ්‍ය අමාත්‍යාංශය තීරණය කර ඇති බවද අමාත්‍යවරයා පෙන්වා දෙයි.

එසේම, රෝහල් පසුබිම තුළ විධිමත් නිල ඇඳුම් නීති ක්රියාත්මක වේ. ගැටලු ඇත්නම් සේවකයන්ට සහ පාර්ශ්වවලට සෞඛ්‍ය අමාත්‍යාංශයට පැමිණිලි කළ හැකි අතර එය ජාති ආගම් ප්‍රශ්නයක් බවට පත් කර නොගත යුතු බවද අවධාරණය කෙරේ.

එහෙත් විපක්ෂයේ මුස්ලිම් මන්ත්‍රීවරුන් සහ දේශපාලන නායකයින් ආණ්ඩුවේ තාවකාලික තීරණය විවේචනය කර ඇත්තේ ආසන 159 ක ප්‍රබල බහුතරයක් හිමි ජාතික ජන බලවේගයේ (NPP) රජය මුස්ලිම් සේවකයින්ගේ ඇඳුම් ඇඳීමේ අයිතිය ආරක්ෂා කිරීම සඳහා නීත්‍යානුකූල හෝ ස්ථිර විසඳුමක් ලබා නොදී තාවකාලික ස්ථාන මාරුවක් ලබා දීමේ දුර්වල පියවරක් බවයි.

දෙමළ ඩයස්පෝරාවටත් ආණ්ඩුව බයද? එසේත් නැතිනම් දෙමළ ජනතාව සහ ඩයස්පෝරා දෙමළ සංවිධාන අප්‍රසාදයට පත් නොවන පරිදි රජය මෙවැනි තාවකාලික ස්ථාන මාරුවක් සඳහා සම්මුතිවාදී තීරණයක් ගෙන ඇති බවට විපක්ෂයේ මුස්ලිම් දේශපාලනඥයින් චෝදනා කරයි.

මධ්‍යස්ථ දේශපාලන විචාරකයින් පෙන්වා දෙන්නේ ජනාධිපතිවරයා සහ එජාප ආණ්ඩුව විවේචනය කිරීමට තරම් ප්‍රබල දේශපාලන සාධක නොමැති තත්ත්වයක් තුළ මෙවැනි සංවේදී සුළු ජාතික ප්‍රශ්න තම අතට ගෙන දෙමළ-මුස්ලිම් ජනතාව අතර අනවශ්‍ය ගැටුමක් ඇතිකරමින් දේශපාලන වාසි ලබාගැනීමට විරුද්ධ පක්ෂ උත්සාහ කරන බවයි.

මීට අමතරව මැතිවරණ වලදී හෝ දේශපාලන වශයෙන් ජනතා සහයෝගය අහිමි වූ විට දෙමළ මුස්ලිම් සබඳතාවයේ විරසකයක් ඇතිකර ඡන්ද බැංකුව රඳවා ගැනීමේ පැරණි දේශපාලන විලාසය මෙය බවත්, මේ ප්‍රශ්නය රට පුරා රෝහල්වල ප්‍රචාරය කර රට තුළ ජාතිවාදී කලබල ඇති කිරීම පිටුපස සිටින අයගේ පටු දේශපාලන අරමුණ බවත් පෙන්වා දෙනවා.

රජයට එරෙහිව අතෘප්තිය ඇති කිරීම සඳහා සුළුතර ජනතාව අතර දක්නට ලැබෙන ආගමික, සංස්කෘතික සහ අයිතිවාසිකම් හැඟීම් කෙරෙහි අවධානය යොමු කිරීම සහ එමඟින් ඔවුන්ගේ පිරිහෙන දේශපාලන බලපෑම යථා තත්ත්වයට පත් කිරීම සාම්ප්‍රදායික දේශපාලනඥයන්ගේ පොදු දේශපාලන උපාය මාර්ගයකි.

ඔවුන් "ආණ්ඩුව බයයි" හෝ "සම්මුතියට පත්වෙලා" යන තර්ක රෝපණය කරමින් පරිපාලනමය නැවතීමක් බලය අහිමි කිරීමක් ලෙස පෙන්වීමට උත්සාහ කරයි.

කල්මුණේ ප්‍රදේශය දැනටමත් සීමා නිර්ණය, ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසය සහ ඉඩම් ප්‍රශ්න සම්බන්ධයෙන් දෙමළ-මුස්ලිම් ප්‍රජාවන් අතර සියුම් දේශපාලන මතභේද පවතින ප්‍රදේශයකි. එවැනි පසුබිමක් තුළ රෝහල් නිල ඇඳුම් ප්‍රශ්නය එක් හිතවාදී සහ විරෝධතා විරෝධී ලෙස නිරූපණය කිරීම සාමාන්‍ය ජනතාව තුළ අනවශ්‍ය සංශයවාදයක් සහ භේදකාරී බවක් ඇති කිරීමේ අවදානමක් ඇත.

තිරය ​​පිටුපස දේශපාලන න්‍යාය පත්‍ර වෙනුවෙන් සහ ජනතාව උදුරාගත් දේශපාලන පැවැත්ම රැකගැනීම සඳහා දශක ගණනාවක් එකට ජීවත්වන දෙමළ සහ මුස්ලිම් ජනතාව දේශපාලනඥයන් කිහිප දෙනෙකුගේ කෙටිකාලීන වාසි තකා තම සබඳතාව බිඳ දැමීමට මධ්‍යස්ථ මතධාරීන්ට කිසිසේත් ඉඩ නොදිය යුතුය.

ජනතාවගේ මෙම චිත්තවේගීය තත්ත්වය ප්‍රයෝජනයට ගනිමින් නැවත වරක් දූෂිත සහ අන්ත ජාතිවාදීන් දේශපාලන බලය අල්ලා ගැනීම සඳහා තමන් "ප්‍රජාවේ ආරක්ෂකයින්" ලෙස හුවා දක්වමින් තිරය පිටුපස සමාජ මාධ්‍ය හසුරුවන දෙමළ-මුස්ලිම් ප්‍රජාවන්හි ෆේස්බුක් අන්තවාදීන් මෙන් දේශසීමා ප්‍රචාරකයින් ෆේස්බුක් වෙත උඩුගත කරති. 

මේ තත්ත්වය තුළ ප්‍රජාවන්, සිවිල් සංවිධාන සහ මාධ්‍ය යන දෙඅංශයේම මහජනතාව ඉතා කල්පනාකාරීව කටයුතු කිරීම අවශ්‍ය වේ. සමාජ බෙදීම් ඇති කරන රැඩිකල් ෆේස් බුක් අන්තවාදීන්ගේ හැගීම්බර ෆේස් බුක් පෝස්ට්වලට හසු නොවී ප්‍රශ්නවලට සන්සුන් හා නීතිමය ප්‍රවේශයක් ප්‍රජාවන් දෙකෙහිම දිගුකාලීන සමගිය හා සාමයට හේතු වනු ඇත.

මේ සියල්ලටම වඩා 2026 ජූලි මාසයේදී මුස්ලිම් දෙමළ ජනතාව නියෝජනය කරන පක්‍ෂ හයක් එක්ව පිහිටුවාගත් පොදු සන්ධානය සුළුතර ජනතාවගේ අයිතීන් සුරකින බව කීවද තම ප්‍රදේශයේම වෙසෙන කාන්තා ශ්‍රමිකයන්ගේ මූලික වෘත්තීය සහ ආගමික අයිතීන් සුරැකීමට බරපතළ දායකත්වයක් ලබාදී නොමැත.

සත්‍යය නම් ඔවුන් ගොඩනැගූ සභාගය දේශපාලන බලය සහ මැතිවරණ ඉලක්ක සපුරා ගැනීම සඳහා NPP රජයට බලපෑම් කිරීම සඳහා පමණක් මිස බිම් මට්ටමේ සංස්කෘතික හා ආගමික අයිතිවාසිකම් වහාම ආරක්ෂා කර වාර්ගික සහජීවනය ඇති කිරීමට නොවන බවයි.  ඔවුන්ගේ මාධ්‍ය වාර්තාවලින් ඔබ්බට සන්ධානය පිහිටුවීමේ අරමුණ සන්ධානය පිහිටුවා මාසයක් ගතවීමටත් පෙර සුළු ජාතික ජනතාවට හෙළිදරව් වූ දේශපාලන ගේම් නාටකයක් බවට පත්ව ඇත.

එබැවින්, රාජ්‍ය ආයතනයක් තුළ ක්‍රියා පටිපාටිමය හෝ සංස්කෘතික ඒකාකාරිත්වය පිළිබඳ ගැටළු නීතිය, මානව හිමිකම් සහ ආංශික විනය යන රාමුව තුළ ප්‍රවේශ විය යුතුය. එය ජාතිවාදී හෝ ආගම්වාදී අවියක් බවට පත් කර රජය සහ ජන කොටස් අතර අනවශ්‍ය ගැටුම් ඇති කිරීමට උත්සාහ කරන විරුද්ධ පක්ෂවල කූට උපාය සෙවීම උගත් තරුණ ප්‍රජාවගේ සහ මධ්‍යස්ථ චින්තකයන්ගේ වගකීමකි.

එබැවින් කෙටි කාලීන දේශපාලන වාසි තකා නිර්මාණය කරන ලද කටකතා සහ හැඟීම්බර ව්‍යාපාර ප්‍රතික්ෂේප කර සංයමයෙන් කටයුතු කිරීම යුගයේ අවශ්‍යතාවයකි. සමාජ වෙබ් අඩවි හසුරුවන පුද්ගලයන් ක්ෂණික හැඟීම්වලට හසු නොවී අනාගත පරපුරේ සාමකාමී ජීවිතය සහ අම්පාර දිස්ත්‍රික්කයේ සුවිශේෂී සමාජ ව්‍යුහය ගැන සිතමින් තීරණ ගත යුතුය.

මෙවැනි සංවේදී ප්‍රශ්නවලට ස්ථිර සහ සෞඛ්‍ය සම්පන්න විසඳුමක් ලබා ගත හැක්කේ ජාතීන් දෙකම එකිනෙකාව සැකයෙන් බැලීමෙන් වැළකී එකිනෙකාගේ ආගමික හා සංස්කෘතික අයිතිවාසිකම්වලට ගරු කරමින් සහ සමාජ සංහිඳියාවට මුල් තැන දුන් විට පමණි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
20-08- 2026.
සිංහල පරිවර්තනය සමඟ) வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்! இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை? Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.