ஆடை விவகாரம்: கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
(பாறூக் ஷிஹான்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் ஊழியர்களின் நியமனத்தை அடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சையான சூழ்நிலையில் குறித்த வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இன்று (17) திங்கட்கிழமை காலை முன்னெடுத்துள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சிற்றூழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆடை விவகாரம்: கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:

கருத்துகள் இல்லை: