(සිංහල පරිවර්තනය සමඟ)நீதித்துறை மறுசீரமைப்பும் ஜனாதிபதி அநுரவின் துணிச்சலான நிலைப்பாடும்!
අධිකරණ ප්රතිසංස්කරණය සහ ජනාධිපති අනුරගේ නිර්භීත ස්ථාවරය!
நாட்டில்முறையான மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை செய்யும் போது தடைகளூம் அபாயங்களும் ஏற்படுவது இயல்பு என்றும், அதற்காக தனது பதவியே இழக்க நேரிட்டாலும் கவலையில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை கண்டு அஞ்சாத ஒரு தலைமைத்துவமே தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் என்ற நாட்டு மக்களின் ஏகோபித்த முடிவோடு, இந்த அர்ப்பணிப்பும், தைரியமும், புதிய அரசியல் விழிர்ப்புணர்வும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காகத் தான் எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், அதற்காகத் தனது ஜனாதிபதிப் பதவி போனாலும் கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரனிகளுடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் அரசியல்வாதிகள் போட்டிபோடும் ஒரு சூழலில், நான் நாற்காலிகளில் அமர்வதற்காக வந்தவன் அல்ல, "பதவி போனால் போகட்டும்" என்ற ஜனாதிபதியின் இந்த வெளிப்படையான கருத்து, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவர் மீதான அரசியல் நன்மதிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ள மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கருத்தாகவும் மாறியுள்ளது.
நாட்டில் முறையான அரசியல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யும்போது தடைகளும் அபாயங்களும் ஏற்படுவது இயல்பு என்றும், அதற்காகத் தனது பதவியையே இழக்க நேரிட்டாலும் கவலையில்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு "ஓர் அபாயத்தை (தடைகள்) எதிர்கொள்ளாமல் எதனையும் மாற்றியமைக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளமை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 12,2026 அன்று, நீதிபதிகளின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கூறிய விடயத்தினை தெரிவித்திருந்தார்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளமை சம்பந்தமாகவே குறித்த சந்திப்பு இடம் பெற்றிருந்தது.
நாட்டில் முறையான அரசியல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யும் போது தடைகளும் அபாயங்களும் ஏற்படுவது இயல்பு என்றும், அதற்காகத் தனது பதவியையே இழக்க நேரிட்டாலும் கவலையில்லை என்றும் அவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயமானது இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் அப்பால் ஊழலற்ற எதிர்கால இலங்கை தேசத்தை கட்டியெழுப்புகின்ற நிலையான கொள்கை பிரகடனத்தை மீண்டும் இந்த நாட்டினுடைய மக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு எந்தவொரு தனி நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டது அல்ல. இது ஒட்டுமொத்த நீதித்துறையின் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் பொது மக்களின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.
உண்மையான அரசியல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது, அதற்கு எதிராகப் பல்வேறு சவால்களும் முட்டுக்கட்டைகளும் எழுவது தவிர்க்க முடியாதது ஆகும்.
அவ்வாறான தடைகளுக்கு அஞ்சி பின்வாங்காமல், தனது பதவியைப் பற்றியோ அல்லது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல் முன்னோக்கிச் செல்வேன் என்ற ஜனாதிபதியின் துணிச்சலான அறிவிப்பானது மேல்த்தட்டு தொடக்கம் கிராமம்புற மக்கள் வரை அதிகம் வைரலான விடயமாக பேசப்படுகின்றது.
தற்காலிக அரசியல் இலாபங்களை விட நாட்டின் நீண்டகால நன்மையே முக்கியம் என்பதோடு, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதை விட, கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதே முதன்மை நோக்கம் என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளதாக புத்திஜீவிகளின் விமர்சனங்கள் அமைந்துள்ளன.
மேலும், பல தசாப்தங்களாக நாட்டில் வேரூன்றியுள்ள ஊழல் மற்றும் முறைகேடான கட்டமைப்புக்களை உடைத்தெறியும் நேரடிப் பிரகடனமாக இது உள்ளதுடன், தனிநபர் அரசியல் நலன்களைத் தாண்டி, வெளிப்படையான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக இது அமையும் என்ற சர்வதேசத்தின் பார்வையானது இலங்கையின் பக்கம் அதிகரிக்கும் என அரசியல் வல்லுணர்களின் கருத்துக்கள் உள்ளன.
சவால்களைக் கண்டு அஞ்சாத ஒரு தலைமைத்துவமே தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக அமையும் என்ற நாட்டு மக்களின் ஏகோபித்த முடிவோடு, இந்த அர்ப்பணிப்பும், தைரியமும், புதிய அரசியல் விழிப்புணர்வும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது.
ஆனால், திட்டங்களை அறிவிப்பது எளிதானது என்றாலும், அவற்றை நாட்டின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் திறம்பட அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதே ஒரு வலுவான தலைமைத்துவத்திற்கு உண்மையான சவாலாக இருக்கும் என்ற யதார்த்த தத்துவத்துக்கு அமைவாக ஜனாதிபதியின் உறுதிமிக்கதான கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரங்களையோ அல்லது அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிற அதிகாரங்களையோ அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்புக்கு வெளியில் தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை அவர் நாட்டில் ஏற்படுத்த நினைக்கும் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்படை தன்மையாக உள்ளது.
அத்தோடு, நான் இங்கிருந்து செல்லத் தயாராக இருக்கும் ஒரு மனிதன். இந்த பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் நான் வரவில்லை.
நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், அதற்குரிய அபாயங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்மை கடந்தகால ஊழல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள விடயமாகவும் மாறியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பன மிக முக்கியமான விவாதப் பொருள்களாகவே இருந்து வந்துள்ளன. அதனால், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அமைவாக தன்னிச்சையான அரசியல் தலையீடுகளில் இருந்து நீதித்துறை விடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.
அதனடிப்படையில், காலங்களில் இடம் பெற்ற முக்கிய நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ள அதே இடத்தில் இன்னுமொரு புதிய மக்கள் அலையை ஏற்படுத்தியுள்ளதாகவே கணிப்புக்கள் கூறுகின்றன.
ஆகவே, வழக்கமான பாரம்பரிய அரசியல் அமைப்புகளுக்குப் பதிலாக, அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட புதிய சிந்தனைகள் மற்றும் தலைமைகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
தனிப்பட்ட அரசியல் வாதிகளையும் தாண்டி, அரசு இயந்திரம் நேர்மையாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையும் அதிகரித்துள்ளது. இது தேர்தல் முடிவுகளிலும், வாக்களிக்கும் முறைமையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மாறுபட்ட இளைஞர்களின் எழுச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
அஹமட் இர்ஷாட்.
17-06-2026.
நீதித்துறை மறுசீரமைப்பும் ஜனாதிபதி அநுரவின் துணிச்சலான நிலைப்பாடும்!
අධිකරණ ප්රතිසංස්කරණය සහ ජනාධිපති අනුරගේ නිර්භීත ස්ථාවරය!
රට තුළ විධිමත් හා ව්යුහාත්මක වෙනස්කම් සිදුකිරීමේදී බාධා හා අවදානම් ඇතිවීම සාමාන්ය දෙයක් බවත් ඒ වෙනුවෙන් තමාට තනතුර අහිමි වුවද කමක් නැති බවත් අනුරකුමාර්තෝසනායක ජනාධිපතිවරයා දැඩිව ප්රකාශ කළේය.
අභියෝගවලට බිය නොවන නායකත්වයක් වත්මන් ආර්ථික දේශපාලන අර්බුදවලට විසඳුම බවට රටේ ජනතාව ඒකමතිකව තීරණය කිරීමත් සමඟ ජනතාව තුළ මේ කැපවීම, ධෛර්යය, නව දේශපාලන අවබෝධය, බලාපොරොත්තුව ශක්තිමත් වී තිබෙනවා.
+++++++++++++++++++
පාස්කු ඉරිදා ත්රස්ත ප්රහාරයට අදාළ පරීක්ෂණ සඳහා ඕනෑම අවදානමකට මුහුණ දීමට තමන් සූදානම් බවත් තම ජනාධිපති ධූරය අහිමි වුවද කමක් නැති බවත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා පසුගියදා නීතීඥවරුන් හමුවූ අවස්ථාවේදී ප්රකාශ කළේය.
දේශපාලඥයන් බලයට, තනතුරුවලට තරග කරන වටපිටාවක මා මෙහි සිටින්නේ පුටුවල වාඩිවීමට නොව “කාර්යාලය ගියොත් යන්න දෙන්න” යන ජනාධිපතිවරයාගේ මෙම විවෘත මතය සමාජ මාධ්ය තුළත් මහජනතාව තුළත් ඔහු කෙරෙහි දේශපාලන හිතවත්කම තීව්ර කරන මතයක් බවට පත්වී විශාල බලපෑමක් එල්ල කර ඇත.
රට තුළ නිසි දේශපාලන හා ව්යුහාත්මක වෙනස්කම් සිදුකිරීමේදී බාධා සහ අවදානම් ඇතිවීම සාමාන්ය දෙයක් බවත් ඒ වෙනුවෙන් තම තනතුර අහිමි වුවද කමක් නැති බවත් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා දැඩිව ප්රකාශ කළේය. එසේම "අවදානමකට (බාධක) මුහුණ නොදී කිසිවක් වෙනස් කළ නොහැක" යන්න දේශීය වශයෙන් පමණක් නොව ජාත්යන්තර වශයෙන්ද විශාල කතා බහක් බවට පත්ව ඇත.
2026 අගෝස්තු 12 වැනි දින ශ්රී ලංකා ජනාධිපති ලේකම් කාර්යාලයේ දී, විනිසුරුවරුන්ගේ අනිවාර්ය විශ්රාම වයස වැඩි කිරීමේ 22 වැනි ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන යෝජනාවට විරුද්ධ වන ශ්රී ලංකා නීතීඥ සංගමයේ (BASL) නියෝජිතයන් සමඟ පැවති හමුවකදී ජනාධිපති අනුරකුමාර දිසානායක මහතා ඉහත ප්රකාශය කළේය.
මහාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම යන වයස අවුරුදු 65 සිට 67 දක්වාත් අභියාචනාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වයස අවුරුදු 63 සිට 65 දක්වාත් වැඩි කිරීමට යෝජිත 22 වැනි ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනයට අදාළව මෙම රැස්වීම පැවැත්විණි.
රට තුළ නිසි දේශපාලන හා ව්යුහාත්මක වෙනස්කම් සිදු කිරීමේදී බාධා හා අවදානම්වලට මුහුණ දීම සාමාන්ය දෙයක් බවත් ඒ වෙනුවෙන් තම තනතුර අහිමි වුවද කමක් නැති බවත් ඔහු තරයේ ප්රකාශ කළේය. ඔහු මේ රටේ ජනතාව කෙරෙහි තබා ඇති විශ්වාසය හා සෙනෙහස සහ දූෂණයෙන් තොර අනාගත ශ්රී ලාංකීය ජාතියක් ගොඩනැගීමේ ස්ථාවර ප්රතිපත්ති ප්රකාශය මෙයින් යළිත් වරක් මෙරට ජනතාවට සිහිපත් කර දී තිබේ.
විනිසුරුවන්ගේ විශ්රාම යන වයස දීර්ඝ කිරීමේ තීරණය කිසියම් පුද්ගලයකු හෝ කණ්ඩායමක් ඉලක්ක කර ගත් එකක් නොවේ. මෙය සමස්ත අධිකරණ පද්ධතියේ ව්යුහය ප්රතිසංවිධානය කිරීමට සහ සාමාන්ය ජනතාවගේ යහපත සඳහා ගත් තීරණයක් බව ජනාධිපතිතුමාට විශ්වාසයි.
සැබෑ දේශපාලන හා ව්යුහාත්මක වෙනසක් සිදුකිරීමේදී ඊට එරෙහිව විවිධ අභියෝග සහ බාධක මතුවීම වැළැක්විය නොහැක. තමාගේ තනතුර හෝ දේශපාලන අනාගතය ගැන නොසිතා එවැනි බාධාවලින් පසුබසින්නේ නැති බවත්, ඉදිරියට නොයන බවටත් ජනාධිපතිවරයා කළ නිර්භීත ප්රකාශය ප්රභූ සිට ග්රාමීය ජනතාව දක්වා පැතිර ගොස් තිබේ.
තාවකාලික දේශපාලන වාසිවලට වඩා රටේ දිගුකාලීන ප්රයෝජනය වැදගත් බවත් බලය රැක ගැනීමට වඩා පොරොන්දු ඉටු කිරීම මූලික අරමුණ බවත් බුද්ධිමතුන්ගේ විවේචනවලින් පැහැදිලි වී තිබේ.
එපමණක් නොව එය දශක ගණනාවක් තිස්සේ රට තුළ මුල් බැසගෙන ඇති දූෂණ හා නීති විරෝධී ව්යුහයන් බිඳ දැමීමේ සෘජු ප්රකාශයක් වන අතර එය පුද්ගල දේශපාලන අවශ්යතාවලින් ඔබ්බට විනිවිද පෙනෙන ජාතියක් ගොඩනැගීමේ පදනම බවට ශ්රී ලංකාව කෙරෙහි ජාත්යන්තර දැක්ම වැඩි වනු ඇති බව දේශපාලන විද්වතුන්ගේ අදහසයි.
අභියෝගවලට බිය නොවන නායකත්වයක් වත්මන් ආර්ථික දේශපාලන අර්බුදයට විසඳුම බවට ජනතාව ඒකමතිකව තීරණය කිරීමත් සමඟ ජනතාව තුළ මේ කැපවීම, ධෛර්යය, නව දේශපාලන අවබෝධය, බලාපොරොත්තුව ශක්තිමත් වී තිබෙනවා.
එහෙත් සැලසුම් ප්රකාශ කිරීම පහසු වුවත් ශක්තිමත් නායකත්වයක සැබෑ අභියෝගය වන්නේ රටේ පවතින පාලන ව්යුහය තුළ ඒවා ඵලදායි ලෙස ක්රියාත්මක කිරීමේ ප්රායෝගික ගැටලු විසඳා ගැනීම බව ජනාධිපතිවරයාගේ ප්රකාශයට සමාජ මාධ්ය තුළ හොඳ ප්රතිචාර ලැබී තිබේ.
විධායක බලතල හෝ රජයට ලබා දී ඇති වෙනත් බලතල ව්යවස්ථා රාමුවෙන් බැහැරව භාවිත නොකරන බවට ජනාධිපතිවරයා සහතික වීම ඔහු රට තුළ ස්ථාපිත කිරීමට අදහස් කරන පිරිසිදු දේශපාලන සංස්කෘතියේ පැහැදිලි සලකුණකි.
ඒ වගේම මම ඉදිරියට යාමට සූදානම් මිනිසෙක්. මම මේ තනතුරුවල රැඳී සිටීමට අදහස් නොකරමි. “වෙනසක් කරන්න නම් ඊට අනුරූප අවදානම්වලට මුහුණ දෙන්න අපි සූදානම් විය යුතුයි” ඔහුගේ ප්රකාශය ද පසුගිය කාලයේ දූෂිතයන්ගේ බඩේ සියඹලා දිය කළ දෙයක් බවට පත්ව තිබේ.
නිදහසින් පසු ශ්රී ලංකාවේ දේශපාලන හා අධිකරණ ඉතිහාසය තුළ නීතියේ ආධිපත්යය සහ අධිකරණයේ ස්වාධීනත්වය පිළිබඳ විවාදයේ වැදගත් මාතෘකා වී ඇත. එබැවින් නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානය යන ප්රතිපත්තියට අනුව අත්තනෝමතික දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් අධිකරණය නිදහස් විය යුතුය යන්න මහජනතාවගේ දීර්ඝකාලීන අපේක්ෂාවයි.
ඒ අනුව ප්රධාන මූල්ය වංචා, බලය අයුතු ලෙස භාවිත කිරීම සහ දේශපාලන පළිගැනීම් පිළිබඳ පරීක්ෂණ යළි කඩිනම් කර ඇත. එබැවින් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ දූෂණ විරෝධී සහ නීතියේ ආධිපත්යය පිළිබඳ වැඩපිළිවෙළ ජනතාව තුළ විශ්වාසය වැඩි කරවන තවත් නව ජන රැල්ලක් එම ස්ථානයේම නිර්මාණය කර ඇති බව අනාවැකි යෝජනා කරයි.
එබැවින් සාම්ප්රදායික සම්ප්රදායික දේශපාලන ක්රම වෙනුවට දූෂණ විරෝධී ප්රතිපත්තියක් ඇති නව අදහස් සහ නායකත්වයන් සඳහා ජනතාව අතර වැඩි සහයෝගයක් පවතී. එක් එක් දේශපාලනඥයින්ට එහා ගිය රාජ්ය යාන්ත්රණය අවංකව ක්රියාත්මක විය යුතුය යන සිතුවිල්ලද වැඩි වී තිබේ. එය මැතිවරණ ප්රතිඵල සහ ඡන්ද රටාවේ විශාල වෙනස්කම් ඇති කරන විවිධ තරුණ නැගිටීමක් ලෙස සැලකේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත,
17-06-2026.
(සිංහල පරිවර්තනය සමඟ)நீதித்துறை மறுசீரமைப்பும் ஜனாதிபதி அநுரவின் துணிச்சலான நிலைப்பாடும்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 17, 2026
Rating:



கருத்துகள் இல்லை: