(සිංහල පරිවර්තනය සමඟ) போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது! நம்பிக்கை தரும் அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்.
போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது! நம்பிக்கை தரும் அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்.
இடதுசாரி அரசியல் கொள்கையைக் கொண்ட அரசாங்கங்கள் மூலமே நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாதிக்க முடியும் என்ற அரசியல் விவாதங்கள் உலகளவில் விவாதிக்கப்படுகிறது.
මත්ද්රව්ය ජාවාරමෙන් ශ්රී ලංකාව කිසිදා කොලොම්බියාවක් නොවනු ඇත!
ආණ්ඩුවේ මත්ද්රව්ය විරෝධී ක්රියාකාරකම් බලාපොරොත්තු සහගතයි.
''சிறைச்சாலைகளை மூடுவது சட்டத்தை தளர்த்துவது அல்ல,மாறாக ஒழுக்கமும் நெறியும் மிக்க புதிய தலைமுறையை கல்வியின்மூலம் உருவாக்குவதாகும்."
கடந்த 9 மாத காலப்பகுதியில் மட்டும் நாடு தமுவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 239384 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 995பாரிய போதைப்பொருள் கடத்தல் காரர்கள் அடங்குவதோடு,அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொலம்பியா போன்று "நார்கோ-அரசியல்" (Narco-politics) மற்றும் நிழல் உலக சாம்ராஜ்யமாக உருவாவதைத் தடுக்க, ஜனாதிபதி தலைமையிலான NPP அரசாங்கம் கடுமையான சட்ட அமுலாக்கங்களையும் கூட்டு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
+++++++++++++++++++++
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டை ஆசியாவின் போதைப்பொருள் மையமாக மாறுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. லத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா போன்று இலங்கை மாறிவிடக் கூடாது என்பதில் தற்போதைய அரசு உறுதியான சட்ட மற்றும் கள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கையை ஒரு சர்வதேச போதைப்பொருள் போக்குவரத்து மையமாக (Transit Hub) பயன்படுத்துவதைத் தடுப்பதிலும், உள்நாட்டில் இளைஞர்களைப் பாதுகாப்பதிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடுமையான பொலிஸ் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
முந்தைய காலங்களில் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவோடு இயங்கிய போதைப்பொருள் வலைப்பின்னல்களை முற்றாக ஒழிப்பதே தங்களின் நோக்கம் என NPP அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதனடிப்படயில், இலங்கையில் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்ற "நார்கோ-அரசியல்" (Narco-politics) மற்றும் நிழல் உலக சாம்ராஜ்யமாக உருவாவதைத் தடுக்க, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய NPP அரசாங்கம் கடுமையான சட்ட அமுலாக்கங்களையும் கூட்டு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவை வெறும் பிரகடனங்களால் மட்டும் சாத்தியமாகாது. அவை உறுதியான சட்ட அமலாக்கம் மற்றும் அரசியல் நேர்மை மீதே முழுமையாகத் தங்கியுள்ளது. கொள்கை விளக்கங்களை விட நடைமுறைச் செயல்களே இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடுகள் ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான நாடுகளாக மாறுவதற்குக் காரணம், அவர்களிடம் வெறும் கொள்கைகள் மட்டுமல்ல; மாறாக, சட்டத்தை யாருக்கும் அஞ்சாமல் நடு நிலையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் உறுதியான அரசியல் விருப்பமே (Political will) ஆகும்.
அந்த வகையில், இடதுசாரி அரசியல் கொள்கையைக் கொண்ட அரசாங்கங்கள் மூலமே நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாதிக்க முடியும் என்ற பல்வேறுபட்ட கருத்துக்கள் உலக வரலாற்றிலும் அரசியல் விவாதங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரிக் கொள்கைகள் பொதுவாக சமூகக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கத்தில் அரசின் நேரடிப் பங்களிப்பை வலியுறுத்துகின்றன. இது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிகம் உதவுகின்றது.
வறுமை மற்றும் சமூகத் தேவைகளுக்கான சமத்துவமின்மையே குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் என்று இடதுசாரி கொள்கைத்துவம் கருதுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்யும்போது குற்றங்கள் இயல்பாகவே குறையும் என்பது இடதுசாரி கொள்கைத் தத்துவமாகும்.
இலஞ்ச ஊழல்களைத் தடுக்க அதிகாரத்துவத்தையும், பெரு நிறுவனங்களின் தன்னிச்சையான போக்கையும் அரசு தனது கடுமையான கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பது மிக முக்கியமான விடயமாக நம்பப்படுகிறது. அந்த வகையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டின் பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை சீரமைக்க பெருநிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டைக் குறைப்பதையும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதையும் தனது முதவாவதான கொள்கைசார் அணுகுமுறையாகக் கொண்டுள்ளது.
இடதுசாரி மற்றும் மக்கள் நலன்சார்ந்த (Populist) பின்னணியைக் கொண்ட தற்போதைய NPP அரசாங்கம், நுகர்வோர் பாதுகாப்பு, சந்தைப்போட்டி மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை சர்வதேச பார்வையில் அதிகமான சாதக விளைவுகளை அரசாங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த காலங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் சட்டத்திலிருந்து தப்பிய நிலை மாறி, தற்போது அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நம்புகின்றனர். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான பழைய விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் துணிச்சலைக் காட்டுவதாகக் கருதுகின்றனர்.
மேலும், NPP அரசாங்கம் காவல்துறை மற்றும் நீதித்துறையை அரசியல் அழுத்தங்களின்றிச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கிறது என்ற கருத்து மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பது அரசியல் ரீதியான ஒரு அவதானிப்பாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாடு நாட்டின் நிர்வாக முறை மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
முன்னாள் இராணுவத் தலைவர்கள், பொலிஸ்மா அதிபர்கள் , அமைச்சுக்களின் செயலாளர்கள், கடந்த கால ஜனாதிபதிகள், அமைச்சர்கள் என எவ்வித தராதரமும் பாராமல் சட்டத்தை மீறியோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் துணிவும், தைரியமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், அவருடைய NPP அரசாங்கத்திற்கும் இருக்கின்றது என்பது உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மேலோங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகளை மூடும் ஒரு இளம் தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்று JVPயின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். அதாவது குற்றவாளிகளை தண்டிப்பதை விட, குற்றங்கள் நிகழாத ஒரு சமூகப் பின்னணியை உருவாக்குவதே நாட்டுக்கு தேவையான இலக்காக இருக்க வேண்டும். வறுமை, கல்வியறிவின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகள் குற்றங்களை செய்வதற்கு வழிவகுக்கும் காரணிகளாக உள்ளது.
சிறைச்சாலைகளை மூடுவது என்பது சட்டத்தை தளர்த்துவது அல்ல, மாறாக ஒழுக்கமும் நெறியும் மிக்க ஒரு புதிய தலைமுறையை கல்வியின் மூலம் உருவாக்குவதாகும். வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், மனித நேயம் மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்புகளை வளர்க்கும் கல்வி முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை இது காட்டுகிறது.
இடதுசாரி கொள்கைத் திட்டமிடலில் இது ஒரு குறுகிய கால அரசியல் முழக்கம் அல்ல, மாறாக பல தசாப்த கால சமூக மாற்றத்திற்கான ஒரு நீண்ட கால திட்டமாகும். இவ்வாறான ஒரு கொள்கை பிரகடனம், இலங்கையை சர்வதேச மட்டத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான ஒரு நாடாக மாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பார்வையை பிரதிபலிக்கிறது.
கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களின் சோசலிச அரசியல் கொள்கைகள் மூலம் கல்வி மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளாக உள்ளன. அத்தோடு, இரண்டு நாடுகளுமே மார்க்சிச -லெனினிச ஒற்றைக் கட்சி ஆட்சியைப் பின்பற்றுகின்றன.
இரண்டு நாடுகளுமே தங்களது குடிமக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த செலவிலோ வழங்குகின்றன. கியூபா தனது உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச மருத்துவ உதவிகளுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ள நாடுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது.
வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே கடுமையான அரசாங்கக் கண்காணிப்பு காரணமாக தெருக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் பல அண்டை நாடுகளை விடக் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆகவே, வலுவான அரசியல் கொள்கைகள், இலக்கை நோக்கிய சீர்திருத்தங்கள் மூலம் கல்வி மற்றும் சமூக நலன்களில் இந்த நாடுகள் பெரும் சாதனையாளர்களாக பார்க்கப்படுகின்றன. ஊழல் மற்றும் போதைப்பொருள் போன்ற சமூகச் சீர்கேடுகள் "க்ளீன்" (CLEAN) செய்யப்பட்டுள்ள நாடுகளாகவும் சர்வதேச அளவில் பேசப்படுகின்றது.
அந்த வகையில் எமது நாட்டிலும் NPP அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 9 மாத காலப்பகுதியில் மட்டும் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 239,384 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 995 பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடங்குவதோடு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக 378 பேருக்கு எதிராக சொத்து விபர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் 10 தொன்னுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் (Ice), கொக்கெய்ன் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் தங்கியிருந்து போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த 58-இற்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் (பாகிஸ்தான், இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகள்) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் முற்றாக நீக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடத்தலில் தொடர்புடைய எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல்வாதிகளை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இலங்கை அமைந்துள்ள கடல்சார் அமைவிடம் காரணமாக, ஆசியாவின் முக்கிய கடத்தல் பாதையாக இலங்கை மாறுவதைத் தடுக்க, இந்தியாவின் முழுமையான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆதரவையும் தற்போதைய அரசாங்கம் கோரியுள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சட்ட அமுலாக்கத் துறையை குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதே தங்களின் முதல் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளின் துணிச்சலான சேவையையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவர்களின் உத்வேகத்தை வளர்க்கும் முகமாக அண்மையில் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் சன்மானங்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கவும் ஜனாதிபதியும் அரசும் தவறவில்லை.
ஆகவே, லத்தீன் அமெரிக்க கொலம்பியா நாடானது பல தசாப்தங்களாக போதைப்பொருள் மாஃபியாக்களின் (Drug Cartels) பிடியிலும், அவர்களின் பண பலத்தினாலும் ஆட்டங் கண்டுள்ளது என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். கொலம்பியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி (President) நாற்காலியைத் தீர்மானிப்பதில் கூட போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலையீடு இருந்தமை பலமுறை அம்பலமாகியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டின் நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளைத் தங்களது பண பலத்தாலும், துப்பாக்கி முனையிலும் கட்டுப்படுத்தினர். தங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிபர் வேட்பாளர்கள், நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களை அவர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்தனர். இதனால், உண்மையான மக்களின் விருப்பத்தின் பேரில் நேர்மையான ஆட்சிகள் அமைவது அங்கு மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்தது.
இதன் காரணமாகவே, கொலம்பிய அரசியல் வரலாற்றை ஆய்வாளர்கள் பெரும்பாலும் ."நார்கோ-ஜனநாயகம்"
(Narco-democracy) அல்லது போதைப்பொருள் மாஃபியாக்களால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் என்றே குறிப்பிடுகின்றனர்.
அதை போல இலங்கையும் அதன் அமைவிடம் காரணமாக போதைப்பொருள் கடத்தல் காரர்களின் கைகளில் அகப்பட்டு இன்னொரு கொலம்பியா நாடாக மாறும் அபாயத்திலிருந்து தடுக்கப்படும் விடயத்தில், அதிர்ஸ்ட்டவசமாக இந்த நாடு ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கைகளில் இருப்பது இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாரமாகும்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், ஊழலை ஒழிக்கவும் அவர் முன்னெடுக்கும் தீர்க்கமான நகர்வுகள் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அதே இடத்தில், இந்த நாட்டை இன்னொரு லத்தீன் அமெரிக்க கொலம்பியாவாக மாறுவதில் இருந்தும் தடுகின்ற முயற்ச்சியாக இருக்கின்றது என்பாதே உண்மை.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய
12-08-2026.
මත්ද්රව්ය ජාවාරමෙන් ශ්රී ලංකාව කිසිදා කොලොම්බියාවක් නොවනු ඇත!
ආණ්ඩුවේ මත්ද්රව්ය විරෝධී ක්රියාකාරකම් බලාපොරොත්තු සහගතයි.
වාමාංශික දේශපාලන මූලධර්ම සහිත ආණ්ඩුවලට රටේ ආරක්ෂාව, මහජන සාමය සහ දූෂණය පිටුදැකීම සම්පූර්ණයෙන්ම පාලනය කළ හැකි බවට දේශපාලන විවාද ලොව පුරා විවාදයට ලක්වෙමින් තිබේ.
"සිරගෙවල් වැසීම යනු නීතිය ලිහිල් කිරීම නොව අධ්යාපනය තුළින් සදාචාරය සහ ආචාර ධර්ම පිළිබඳ නව පරපුරක් බිහිකිරීමයි."
පසුගිය මාස 9 තුළ පමණක් රටපුරා සිදුකළ වැටලීම්වලින් සැකකරුවන් 239384ක් අත්අඩංගුවට ගෙන ඇත. මහා පරිමාණ මත්ද්රව්ය ජාවාරම්කරුවන් 995 දෙනෙකු ඊට ඇතුළත් වන අතර ඔවුන්ට එරෙහිව නීතිමය පියවර ගෙන ඇත.
ශ්රී ලංකාව කොලොම්බියාව වැනි "මත්ද්රව්ය-දේශපාලනයක්" සහ සෙවනැලි ලෝක අධිරාජ්යයක් බවට පත්වීම වැලැක්වීම සඳහා ජනාධිපතිවරයා ප්රමුඛ NPP රජය දැඩි නීතිය ක්රියාත්මක කිරීම සහ සාමූහික ක්රියාමාර්ග ආක්රමණශීලී ලෙස ප්රවර්ධනය කරයි.
ශ්රී ලංකා ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගය (NPP) රජය රට ආසියාවේ මත්ද්රව්ය කේන්ද්රස්ථානය බවට පත්වීම වැලැක්වීමට දැඩි ක්රියාමාර්ග ගනිමින් සිටී. ලතින් ඇමරිකාවේ කොලොම්බියාව මෙන් ශ්රී ලංකාව පත් නොවීමට වත්මන් රජය ස්ථිර නීතිමය සහ ක්ෂේත්ර ක්රියාමාර්ග ගෙන ඇත.
ශ්රී ලංකාව ජාත්යන්තර මත්ද්රව්ය සංක්රමණ කේන්ද්රස්ථානයක් ලෙස යොදා ගැනීම වැළැක්වීමට සහ තරුණ තරුණියන් නිවසේ ආරක්ෂාව සඳහා දැඩි පොලිස් සහ නීතිමය ක්රියාමාර්ග ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ රජය අඛණ්ඩව ක්රියාත්මක කරයි.
පසුගිය කාලයේ දේශපාලන සහ ආරක්ෂක අංශවල සහයෝගය ඇතිව ක්රියාත්මක වූ මත්ද්රව්ය ජාලයන් තුරන් කිරීම ඔවුන්ගේ අරමුණ බව NPP රජය පැහැදිලි කර ඇත. ඒ අනුව ශ්රී ලංකාව ලතින් අමෙරිකානු රටවලට සමාන "මත්ද්රව්ය දේශපාලනයක්" සහ සෙවනැලි ලෝක අධිරාජ්යයක් බවට පත්වීම වැලැක්වීම සඳහා දැඩි නීතිය ක්රියාත්මක කිරීම සහ සාමූහික ක්රියාමාර්ග ගැනීම ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්රමුඛ වත්මන් NPP රජය ආක්රමණශීලී ලෙස ප්රවර්ධනය කරයි.
රටේ ආරක්ෂාව දූෂණය පිටුදැකීම හුදු ප්රකාශවලින් කළ නොහැකියි. ඔවුන් සම්පූර්ණයෙන්ම රඳා පවතින්නේ ශක්තිමත් නීතිය බලාත්මක කිරීම සහ දේශපාලන නිවැරදිභාවය මත ය. ප්රතිපත්ති විග්රහයන්ට වඩා ප්රායෝගික ක්රියා මෙහිදී වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි.
සිංගප්පූරුව, ඩෙන්මාර්කය වැනි රටවල් දූෂණයෙන් තොර සහ ආරක්ෂිත රටවල් බවට පත්වීමට හේතුව ඔවුන්ට ප්රතිපත්ති තිබීම පමණක් නොවේ; ඊට පටහැනිව, නොබියව හා තදින් නීතිය ක්රියාත්මක කළේ පාලකයන්ගේ දේශපාලන කැමැත්තයි.
ඒ ආකාරයට වාමාංශික දේශපාලන මූලධර්ම සහිත ආණ්ඩුවලට රටේ ආරක්ෂාව, මහජන සාමය, දූෂණය පිටුදැකීම සම්පූර්ණයෙන් පාලනය කළ හැකි බවට විවිධ අදහස් ලෝක ඉතිහාසයේත් දේශපාලන වාද විවාදවලත් ඉදිරිපත් වී තිබෙනවා.
වාමාංශික මතවාදයන් සාමාන්යයෙන් අවධාරණය කරන්නේ සමාජ පාලනය සහ නීතිය ක්රියාත්මක කිරීමේදී රාජ්යයේ සෘජු මැදිහත්වීමයි. මත්ද්රව්ය ජාවාරම් සහ සංවිධානාත්මක අපරාධ මැඩලීමට එය බෙහෙවින් උපකාරී වේ.
වාම දෘෂ්ටිවාදය අපරාධවලට මූලික හේතුව ලෙස සලකන්නේ දුප්පත්කම සහ සමාජ අවශ්යතාවල අසමානතාවයයි. රජය අධ්යාපනය, සෞඛ්යය, රැකියාව තහවුරු කරන විට අපරාධ නිරායාසයෙන්ම අඩු වන බව වාමාංශික දර්ශනයයි.
නිලධාරි තන්ත්රය දැඩි සෝදිසියෙන් සිටීම සහ මහා සමාගම්වල අත්තනෝමතික හැසිරීම අල්ලස් වංචා වැළැක්වීමට වැදගත්ම දෙය බව විශ්වාස කෙරේ. ඒ අනුව, ශ්රී ලංකාවේ වත්මන් ජාතික ජන බලය (NPP) රජය සිය මූලික ප්රතිපත්තිමය ප්රවේශය වන්නේ රටේ ආර්ථික හා පරිපාලන ව්යුහය සංස්ථාපිත ඒකාධිකාරී පාලනය අඩු කර නීතියේ ආධිපත්යය ස්ථාපිත කිරීම මගින් ප්රතිසංස්කරණය කිරීමයි.
වාමාංශික සහ ජනතාවාදී පසුබිමක් ඇති වත්මන් එන්පීපී රජය පාරිභෝගික ආරක්ෂාව, වෙළඳපල තරඟකාරිත්වය සහ දූෂණයෙන් තොර පාලනයක් ඇති කිරීම කෙරෙහි දැඩි අවධානයක් යොමු කර ඇති අතර එමඟින් රජයට ජාත්යන්තරය ඉදිරියේ ධනාත්මක ප්රතිඵල රැසක් ලැබී ඇත.
අතීතයේ දී බලගතු පුද්ගලයන් නීතියෙන් ඈත් වී දැන් නීතිය සැමට එකසේ ක්රියාත්මක වන බව විශ්වාස කරති. ප්රකට දේශපාලනඥයන්ට සහ ඉහළ නිලධාරීන්ට එරෙහිව පැරණි පරීක්ෂණ නැවත ආරම්භ කිරීම ආණ්ඩුවේ නිර්භීතකම පෙන්වීමක් ලෙස සැලකේ.
එමෙන්ම දේශපාලන බලපෑම්වලින් තොරව පොලිසියට සහ අධිකරණයට ස්වාධීනව කටයුතු කිරීමට NPP රජය ඉඩ ලබා දෙනවා යන මතය ජනතාව අතරට පැමිණ ඇති බව දේශපාලන නිරීක්ෂණයක් බවට පත්වී තිබේ. මෙම ස්ථාවරය රටේ පාලන ක්රමය කෙරෙහි ජනතාවගේ විශ්වාසය වැඩි කිරීමට හේතු වී තිබේ.
හිටපු හමුදා ප්රධානීන්, පොලිස් ප්රධානීන්, අමාත්යාංශ ලේකම්වරුන්, හිටපු ජනාධිපතිවරුන්, ඇමැතිවරුන් වැනි ප්රමිතීන් නොසලකා නීතිය කඩ කරන පුද්ගලයන්ට එරෙහිව ක්රියාමාර්ග ගැනීමට ජනාධිපති අනුර කුමාර දිසානායකට සහ ඔහුගේ NPP රජයට එඩිතරභාවය සහ ධෛර්යය ඇති බව දේශීය හා ජාත්යන්තර වශයෙන් ප්රචලිත වී ඇත.
මීට මාස කිහිපයකට පෙර ජනතා විමුක්ති පෙරමුණේ ප්රධාන ලේකම් ඩිල්වින් සිල්වා කියා සිටියේ බන්ධනාගාර වසා දමන තරුණ පරපුරක් නිර්මාණය කළ යුතු බවයි. එනම් අපරාධකරුවන්ට දඬුවම් කරනවාට වඩා රටේ අවශ්ය ඉලක්කය විය යුත්තේ අපරාධ සිදු නොවන සමාජ පසුබිමක් නිර්මාණය කිරීමයි. දුප්පත්කම, නූගත්කම සහ ආර්ථික අසමානතාවය අපරාධවලට තුඩු දෙන සාධක වේ.
බන්ධනාගාර වැසීම යනු නීතිය ලිහිල් කිරීම නොව අධ්යාපනය තුළින් සදාචාරය සහ ආචාර ධර්ම පිළිබඳ නව පරපුරක් බිහිකිරීමයි. හුදු උගතුන්ට වඩා මානුෂික සහ නීතිගරුක ගුණාංග පෝෂණය කරන අධ්යාපන ක්රමයකට ප්රමුඛත්වය දෙන බව මෙයින් පෙනේ.
මෙය වාමාංශික ප්රතිපත්ති සැලසුම්කරණයේ කෙටි කාලීන දේශපාලන සටන් පාඨයක් නොව දශක ගණනාවක් පුරා සිදු වූ සමාජ වෙනසක් සඳහා වූ දීර්ඝ කාලීන සැලැස්මකි. එවැනි ප්රතිපත්ති ප්රකාශයකින් පිළිබිඹු වන්නේ ශ්රී ලංකාව ජාත්යන්තර මට්ටමින් සාමකාමී සහ සුරක්ෂිත රටක් බවට පත්කිරීමේ ජාතික ජන බලයේ දේශපාලන දැක්මයි.
කියුබාව සහ වියට්නාමය ඔවුන්ගේ සමාජවාදී දේශපාලන ප්රතිපත්ති හරහා අධ්යාපනයේ සහ සමාජ සමානාත්මතාවයේ ප්රගතියක් ලබා ඇත. එසේම රටවල් දෙකම මාක්ස් ලෙනින්වාදී ඒකපක්ෂ පාලනයක් අනුගමනය කරයි.
රටවල් දෙකම තම පුරවැසියන්ට උසස් අධ්යාපනය සඳහා නොමිලේ හෝ ඉතා අඩු වියදම් ප්රාථමික පහසුකම් සපයයි. ලෝක මට්ටමේ නොමිලේ වෛද්ය යටිතල පහසුකම් සහ ජාත්යන්තර වෛද්ය ආධාර සඳහා ගෝලීය වශයෙන් කීර්තිමත් රටවල් අතර කියුබාව ප්රමුඛ ස්ථානයක් ගනී.
වියට්නාමයේ මත්ද්රව්ය ජාවාරමට මරණීය දණ්ඩනය දක්වා දැඩි දඩුවම් ලැබේ. රජයේ දැඩි නිරීක්ෂණ හේතුවෙන්, වීදි අපරාධ සහ මත්ද්රව්ය ජාවාරම් බොහෝ අසල්වැසි රටවලට වඩා බෙහෙවින් අඩු ය.
මේ අනුව, මෙම රටවල් ශක්තිමත් දේශපාලන ප්රතිපත්ති, ඉලක්කගත ප්රතිසංස්කරණ හරහා අධ්යාපනය සහ සමාජ සුබසාධනය අතින් ඉහළ ජයග්රහණ ලබා ගත් රටවල් ලෙස සැලකේ. දූෂණය, මත්ද්රව්ය වැනි සමාජ ව්යසනයන් "පිරිසිදු" වූ රටවල් ගැනද ජාත්යන්තරයේ කතා බහට ලක්වෙමින් තිබේ.
ඒ ආකාරයට අපේ රටේ NPP රජය බලයට පත් වූ දා සිට පසුගිය මාස 9 තුළ පමණක් රටපුරා සිදුකළ වැටලීම්වලින් සැකකරුවන් 239,384ක් අත්අඩංගුවට ගෙන ඇත. මහා පරිමාණ මත්ද්රව්ය ජාවාරම්කරුවන් 995 දෙනෙකු ඊට ඇතුළත් වන අතර ඔවුන්ට එරෙහිව නීතිමය පියවර ගෙන ඇත.
මත්ද්රව්ය ජාවාරමෙන් අයථා ලෙස ඉපැයීම් සම්බන්ධයෙන් පුද්ගලයින් 378 දෙනෙකුට එරෙහිව වත්කම් පරීක්ෂණ ආරම්භ කර ඇති අතර වත්මන් පාලනය යටතේ හෙරොයින්, අයිස්, කොකේන් සහ පෙති ටොන් 10කට වැඩි ප්රමාණයක් අත්අඩංගුවට ගෙන තිබේ.
විදේශයන්හි මත්ද්රව්ය ජාල ක්රියාත්මක කළ ප්රධාන අපරාධකරුවන් 58කට අධික පිරිසක් අත්අඩංගුවට ගෙන ජාත්යන්තර රටවල (පකිස්ථානය, ඉන්දුනීසියාව, නේපාලය වැනි රටවල) සහාය ඇතිව ශ්රී ලංකාවට පිටුවහල් කර ඇත.
වත්මන් රජය මත්ද්රව්ය ජාවාරම්කරුවන්ට ලබාදී තිබූ දේශපාලන රැකවරණය සම්පූර්ණයෙන්ම ඉවත් කර ඇති බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා පැවසීය. පැහැරගැනීම්වලට සම්බන්ධ විපක්ෂය සහ අනෙකුත් දේශපාලනඥයන් ඉලක්ක කර අත්අඩංගුවට ගැනීම් වේගවත් කර ඇත.
ශ්රී ලංකාවේ සමුද්රීය පිහිටීම හේතුවෙන් ශ්රී ලංකාව ආසියාවට ප්රධාන ජාවාරම් මාර්ගයක් වීම වැලැක්වීම සඳහා වත්මන් රජය ද ඉන්දියාවේ පූර්ණ ආරක්ෂාව සහ බුද්ධි අංශ සහාය ලබාගෙන ඇත. මත්ද්රව්ය ජාවාරමට සම්බන්ධ පොලිස් නිලධාරීන්ට ද ජනාධිපතිවරයා දැඩි අවවාද කර තිබේ. නීතිය ක්රියාත්මක කිරීමේ දෙපාර්තමේන්තුව අපරාධකරුවන්ගේ ග්රහණයෙන් මුදා ගැනීම ඔවුන්ගේ පළමු ඉලක්කය බවද ඔහු සඳහන් කළේය.
එපමණක් නොව, මත්ද්රව්ය උවදුරෙන් රට රැකගැනීමේ මෙහෙයුම්වල නිරත නිලධාරීන්ගේ අභීත සේවයට සහ කැපවීමට ගරු කිරීමටත්, ඔවුන්ගේ අභිප්රාය ඉහළ නැංවීමටත් පසුගියදා පොලිසියට සහ ආරක්ෂක අංශවලට සම්මාන හා ත්යාග පිරිනමමින් ජනාධිපතිතුමා ඇතුළු රජය අසමත් වූයේ නැත.
මේ අනුව ලතින් අමෙරිකානු රාජ්යයක් වන කොලොම්බියාව දශක ගණනාවක් තිස්සේ මත්ද්රව්ය ජාවාරම්කරුවන්ගේ ග්රහණයට සහ ඔවුන්ගේ මුදල් ග්රහණයට ලක්ව ඇති බව ඓතිහාසිකව සනාථ වේ. කොලොම්බියාවේ ඉහළම නිලය වන ජනාධිපතිවරයාගේ තීරණය තුළ පවා මත්ද්රව්ය කල්ලිවල සම්බන්ධය කිහිප වතාවක්ම හෙළිදරව් විය.
මත්ද්රව්ය ජාවාරම්කරුවන් රටේ අධිකරණය, පොලිසිය, දේශපාලනඥයන් පාලනය කළේ ඔවුන්ගේ මුදලින් සහ තුවක්කුවෙන්. ඔවුන් තමන්ට එරෙහිව ක්රියා කළ ජනාධිපති අපේක්ෂකයන්, විනිසුරුවරුන්, ඇමැතිවරුන් ප්රසිද්ධියේ ඝාතනය කළා. මේ අනුව සැබෑ මිනිසුන්ගේ කැමැත්ත මත පදනම් වූ අවංක ආණ්ඩු එහි ඉතා දුර්ලභ විය.
මේ නිසා, කොලොම්බියානු දේශපාලන ඉතිහාසයේ විශ්ලේෂකයින් බොහෝ විට "නාර්කෝ-ප්රජාතන්ත්රවාදය" වෙත යොමු කරයි.
(Narco-democracy) හෙවත් මත්ද්රව්ය මාෆියාවන් විසින් පාලනය කරන රජයකි.
එලෙසම ශ්රී ලංකාව ද එහි පිහිටීම නිසා මත්ද්රව්ය ජාවාරම්කරුවන්ගේ ග්රහණයට හසුවී තවත් කොලොම්බියානු රටක් බවට පත්වීම වැළකේ. වාසනාවකට මෙන් මේ රට තිබෙන්නේ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජන බල ආණ්ඩුව අතේය.
ශ්රී ලංකාවේ ස්වාධිපත්යය ආරක්ෂා කිරීම, නීතියේ ආධිපත්යය ස්ථාපිත කිරීම, දූෂණය පිටුදැකීම සඳහා ඔහු ගත් තීරණාත්මක ක්රියාමාර්ග මහජන විශ්වාසය ඇති කරද්දී රට තවත් ලතින් ඇමෙරිකානු කොලොම්බියාවක් වීම වැලැක්වීමේ උත්සාහයක් ද තිබෙන බව සැබෑය.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
12-08-2026.
(සිංහල පරිවර්තනය සමඟ) போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது! நம்பிக்கை தரும் அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 12, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 12, 2026
Rating:



கருத்துகள் இல்லை: