Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ) தவறுகளையும், ஊழல்களையும், நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது.


(பிரஜா சக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட்)

(සිංහල පරිවර්තනය සමඟ) தவறுகளையும், ஊழல்களையும், நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது.
වැරදි, දූෂණ, අවංක දේශපාලනය ජනතාව අතරට ගෙන යාමේ වගකීම තරුණ පරපුර අතේ.
 අහමඩ් ඉර්ෂාඩ්.


இளைஞர்கள் புதிய சிந்தனைகளையும், நவீன கண்டுபிடிப்புகளையும் உருவாக்குவதற்கு முதன்மை சமூகமாக உள்ளார்கள். டிஜிட்டல் தொழில் நுட்பங்களை எளிதில் கற்றுக்கொண்டு நாட்டை நவீனமயமாக்குவது அவர்களின் கைகளிலே தங்கியுள்ளது. பழைய, தேவையற்ற நடைமுறைகளை மாற்றி சமுதாயத்திற்குப் புதிய பாதையைக் காட்டுபவர்களும் அவர்களே. 


அத்தோடு, தவறுகளையும், ஊழல்களையும் நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர்களின் கைகளிலே உள்ளது என ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஓட்டமாவடி B/2 பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


"திறனை வளர்ப்போம், தலைமைத்துவத்தை உருவாக்குவோம், எதிர்காலத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் வாழ்க்கைத்திறன் விருத்தி குறுங்கால கற்கைநெறியை நிறைவு செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்‌.ஹனீபா தலைமையில் பயிற்சி நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை (11-08-2026) இடம் பெற்றது.


அதில் பயிற்சியை முடித்த 70 இளைஞர் யுவதிகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் அந் நிகழ்வில் உரையாற்றிய அஹமட் இர்ஷாட், ஒரு நாட்டின் உண்மையான பலமும் அதன் எதிர்காலமும் அந்த நாட்டின் இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும், உழைக்கும் வயதில் இருக்கும் இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரச் சொத்தாகவும் பார்க்கப்படுகிறார்கள். புதிய தொழில்களைத் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உழைப்பும், வினைத்திறனும் அவர்களிடம் பலமாக இருக்கின்றது. விவசாயம், தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பெரியாதாக உள்ளது.


சமத்துவமின்மை மற்றும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றவர்களும் அவர்களாகவே இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தும் சிறந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களாக உருவாகுவார்கள் என்ற எதிர்பாப்பும் ஆளுமைகளும் அவர்கள் மத்தியில் இருந்தே வெளிச்சத்துக்கு வருகின்றது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முன்னிற்கிறார்கள்.


இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேவையானவற்றினை சரியான முறையில் செய்து கொடுக்க தயாராகவே இருக்கின்றது. தற்காலத்திற்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பைப் பெறத் தேவையான தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் மற்றும் தீய பழக்கவழக்கங்களில் இருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாப்ப என்பவற்றில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. 


அத்தோடு, ஒரு நாட்டின் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதற்குப் பயன்படுத்துவதிலும் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

தவறுகளையும் ஊழல்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தயக்கமின்றி உலகறியச் செய்வதோடு, நேர்மையான அரசியலையும் அதனுடன் பின்னிப்பிணைந்த புதிய கலாச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பானது இளைஞர்களின் டிஜிட்டல் சிந்தனையிலும், நேர்மையான செயல்பாட்டிலுமே தங்கியுள்ளது என அஹமட் இர்ஷாடின் உரையில் மேலும் தெறிவிக்கப்பட்டது.

அத்தோடு, குறித்த நிகழ்வில், கற்கை‌நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த இளைஞர்‌ யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எஸ்.எம்.ஹலால்தீன் கலந்து கொண்டதுடன், விஷேட அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.பாறூக் அவர்களும்  சிறப்பதிதியாக தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் (மதனி),
ஏனைய அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதா பிராஜா சக்தி தவிசாளர்களான அஹமட் இர்சாத், ஐ.எம்.முபாஸ், எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

தவறுகளையும், ஊழல்களையும், நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது.

වැරදි, දූෂණ, අවංක දේශපාලනය ජනතාව අතරට ගෙන යාමේ වගකීම තරුණ පරපුර අතේ.

பிரஜா சக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட்.
ප්‍රජා ශක්ති තවිසලර් අහමඩ් ඉර්ෂාඩ්.
+++±+++++++++++++++++++++++++

නව අදහස් සහ නවීන නවෝත්පාදන උත්පාදනය කිරීමේ මූලික ප්‍රජාව වන්නේ තරුණයින්ය. ඩිජිටල් තාක්ෂණය පහසුවෙන් ඉගෙන ගෙන රට නවීකරණය කිරීම ඔවුන්ගේ අතේ ය. ඒ අය තමයි පරණ අනවශ්‍ය පුරුදු වෙනස් කරලා සමාජයට අලුත් මාවතක් පෙන්වන්නේ. 

ඒ හැර වැරදි, දූෂණ, අවංක දේශපාලනය ජනතාව අතරට ගෙන යාමේ වගකීම තරුණ තරුණියන් අතේ පවතින බව ඔට්ටමාවාඩි බී/2 ප්‍රජාශක්ති තවිසර් අහමඩ් ඉර්ෂාඩ් මහතා ඉහත කී පුහුණු පාඨමාලාව අවසන් කළ සිසුන්ට සහතික පත් ප්‍රදානය කිරීමේ උත්සවයට එක්වූහ.

කුසලතා වර්ධනය කරමු නායකත්වය නිර්මාණය කරමු අනාගතය ජය ගනිමු යන තේමාව යටතේ කෙටිකාලීන ජීවන නිපුණතා සංවර්ධන පාඨමාලාව හැදෑරූ තරුණ තරුණියන් සඳහා සහතිකපත් ප්‍රදානය කිරීමේ උත්සවය ඔටමාවඩි තරුණ පුහුණු මධ්‍යස්ථානයේ නිලධාරී ඒ.එම්. හනීපා පසුගිය අඟහරුවාදා (11-08-2026)

පුහුණුව අවසන් කළ තරුණියන් 70 දෙනකුට ආරාධිතයන් අතින් සහතික පත් ප්‍රදානය කෙරුණු අතර උත්සවය අමතමින් අහමඩ් ඉර්ෂාඩ් මහතා පැවසුවේ රටක සැබෑ ශක්තිය සහ අනාගතය රැඳී ඇත්තේ එම රටේ තරුණ තරුණියන් අත බවයි.

ඒ වගේම වැඩ කරන වයසේ තරුණයන් රටේ ලොකුම ආර්ථික සම්පත ලෙස සලකනවා. නව ව්‍යාපාර ආරම්භ කිරීමට සහ බොහෝ දෙනෙකුට රැකියා උත්පාදනය කිරීමට ඔවුන්ට හැකියාව ඇත. කෘෂිකාර්මික, කර්මාන්ත සහ සේවා අංශවල තරුණයින්ගේ දායකත්වය අතිමහත්ය.

අසමානතාවයට අසාධාරණයට එරෙහිව හඬ නඟන්නේද ඔවුන්මය. අනාගතයේ රටට නායකත්වය දෙන විශිෂ්ට දේශපාලන හා සමාජ නායකයන් ලෙසින් බිහිවන අපේක්ෂාවන් සහ පෞරුෂයන් ඔවුන් අතරින් මතුවෙමින් තිබේ. ඔවුන් ස්වභාවික සම්පත් ආරක්ෂා කිරීම සහ දැනුවත් කිරීම සඳහා පෙරමුණ ගනී.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය තරුණ තරුණියන්ගේ අරමුණු ඉටුකර ගැනීම සඳහා අවශ්‍ය ඕනෑම දෙයක් කිරීමට සූදානම්. නූතනයට ගැළපෙන පරිදි ලෝක මට්ටමේ අධ්‍යාපනයක් ලබාදිය යුතුයි. රැකියා ලබා ගැනීමට වෘත්තීය පුහුණුව ලබාදිය යුතුයි. මත්ද්‍රව්‍ය සහ දුරාචාරවලින් තරුණ ප්‍රජාව ආරක්ෂා කර ගැනීමට රජයේ දැඩි අවධානය යොමුව තිබෙනවා. 

ඒ වගේම රටක දූෂණයෙන් තොර පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් ඇති කිරීමටත් ඒ සඳහා නවීන ඩිජිටල් තාක්ෂණය යොදා ගැනීමටත් තරුණයන්ගේ කාර්යභාරය ඉතා වැදගත්.

අවංක දේශපාලනය සහ ඒ හා බද්ධ වූ නව සංස්කෘතිය ජනතාව අතරට ගෙන යාමේ වගකීම තරුණ පරපුරේ ඩිජිටල් චින්තනය සහ අවංක ක්‍රියාකලාපය මත රඳා පවතින අතර සමාජ මාධ්‍ය හරහා සිදුවන වැරදි සහ දූෂණයන් නොපැකිලිව දැන ගැනීමට සැලැස්වීම මත බව අහමඩ් ඉර්ෂාඩ්ගේ කතාවෙන් වැඩිදුරටත් අවධාරණය විය.
සිංහල පරිවර්තනය සමඟ) தவறுகளையும், ஊழல்களையும், நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.