සිංහල පරිවර්තනය සමග) புதிய இலக்குகளுக்கு அடித்தளமாக அமைந்த 2027 வரவு செலவுத் திட்டம்!
முதலீடுகளை
ஊக்குவிப்பதற்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்கள் அடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை!" என்ற இலக்கை நனவாக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்தத் தொலைநோக்கு வரவு செலவுத் திட்டம், வெறும் நிதி அறிக்கை அல்ல; பல தசாப்த காலத் தேக்கநிலைகளிலிருந்து தேசத்தை மீட்டு, ஒரு புதிய இலங்கையை உருவாக்குவதற்கான வரலாற்றுத் திருப்பு முனையாகும்.
அரசாங்கம், அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உழைக்கும்போதே, இந்தப் பொருளாதாரப் பயணம் தனது உண்மையான வெற்றியை எட்டும். ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே, ஒரு நிலையான, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்!
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் 2027ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஒரு சாதாரண நிதி அறிக்கையாக மட்டும் நோக்கப்பட முடியாதது. மாறாக, பல தசாப்தங்களாகப் பொருளாதாரச் சீர்கேடுகள், அரசியல் தவறுகள், ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய பொருளாதாரப் பயணத்தின் முக்கியமான திருப்புமுனையாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
2022ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு, பொருளாதார உறுதிப்படுத்தல் (Stabilization) கட்டத்தை நோக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, பொருளாதார விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு மாற்றத்தை (Expansion and Transformation) இலக்காகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே உள்நாட்டு மற்றும் சர்வதேச புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது.
2026 நவம்பர் 12ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் 81ஆவது வரவு செலவுத் திட்டமானது, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டம் (Extended Fund Facility) 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள பின்னணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்திற்குப் பின்னரும் இலங்கை தனது பொருளாதாரத்தை எவ்வாறு சுயாதீனமாகவும், நிதி ஒழுக்கத்துடனும், நிலையான வளர்ச்சிப் பாதையிலும் முன்னெடுத்துச் செல்லப் போகின்றது என்பதற்கான வழிகாட்டியாகவும் இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு, 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எல்-நினோ (El Nino) காலநிலை மாற்றச் சவால்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளையும் கருத்திற்கொண்டே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்திப் பயணத்தைத் தடைப்படுத்தாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்புணர்வை இது வெளிப்படுத்துகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதிக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.5 சதவீதமாக, அதாவது ரூபா 1.753 டிரில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, ரூபா 890 பில்லியன் பெறுமதியான முதன்மை மிகையை (Primary Surplus) பேணுவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தில் மூலதன மற்றும் பொது முதலீடுகளுக்காக சுமார் ரூபா 2 டிரில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாகும்.
இதன் மூலம், பொருளாதாரத்தை வெறுமனே நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமன்றி, உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரமாக மாற்றுவதற்கான அடித்தளத்தையும் அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கின்றது. 2027ஆம் ஆண்டில் நிலையான 7 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும், ஏற்றுமதியை அதிகரிப்பதும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது புள்ளிவிபரங்களால் மாத்திரம் அளவிடப்படக் கூடாது. அந்த வளர்ச்சியின் பயன் கிராமத்தில் வாழும் விவசாயிக்கும், உழைக்கும் தொழிலாளிக்கும், சிறு வியாபாரிக்கும், மாதாந்தச் சம்பளத்தை நம்பி வாழும் குடும்பத்திற்கும் சென்றடைய வேண்டும். அந்த அடிப்படையில் உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
மேலும் முக்கியமாக, இந்த வரவு செலவுத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான அம்சம் தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை மாதாந்தம் ரூபா 150,000 இலிருந்து ரூபா 162,500 ஆக உயர்த்தியுள்ளமையாகும். அதேவேளை, கூட்டுத்தாபன வரியின் (Corporate Tax) உச்ச வரம்பு 55 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரி மாற்றங்கள் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதுடன், தனியார் முதலீடுகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமையும், ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீதான பெறுமதி சேர் வரி நீக்கம் போன்ற நடவடிக்கைகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான அம்சங்களாகும்.
குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகளின் சுமையை நீண்டகாலமாகத் தாங்கிய குடும்பங்களுக்கு கல்விச் செலவுகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் நிவாரணம் வழங்குவது சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும். ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் சிறுவர்களின் கல்வியில்தான் தங்கியுள்ளது. அந்த வகையில் பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் வெறுமனே நிதிச் சலுகைகளாகப் பார்க்கப்பட முடியாது; அவை எதிர்காலத் தலைமுறையின் மீதான முதலீடுகளாகும்.
உலகப் பொருளாதாரமானது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. இந்த மாற்றத்தை இலங்கை தவறவிட முடியாது என்ற புரிதலுடன், டிஜிட்டல் பொருளாதாரத் துறைக்காக ரூபா 28.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான (AI) சிறப்பு மையத்தை உருவாக்குதல், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 500 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டம் எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியமான முயற்சியாகும்.
இவை அனைத்தும் இலங்கையின் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சர்வதேசச் சந்தையில் போட்டியிடக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கும், நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய முதலீடுகளாகும்.
அதேபோன்று, நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலமும், வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலமும் அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது அரச நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கும் நிர்வாக மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதிக் கட்டமைப்பை ஆய்வு செய்த பேராசிரியர் அதுகோரல, அரசாங்கத்தின் வருமானம், செலவினம் மற்றும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை இலக்குகள் மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளின்றி யதார்த்தமானதாகவும், அடையக்கூடியதாகவும் அமைந்துள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நிலைத்தன்மையைத் தக்கவைக்கும் வகையில் பொதுக் கடன் முகாமைத்துவம் திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி மற்றும் சிறு, நடுத்தரத் தொழில்முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான சட்டச் சீர்திருத்தங்களும் வரவேற்கத்தக்கவை எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தனியார் துறையின் பரிந்துரைகளை உள்வாங்கி பொருளாதார மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான நடவடிக்கையாக 2027 வரவு செலவுத் திட்டத்தை இலங்கை வர்த்தக சம்மேளனமும் வரவேற்றுள்ளது.
குறிப்பாக, கூட்டுத்தாபன வரியின் உச்ச வீதத்தைக் குறைத்தமை, தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை உயர்த்தியமை ஆகியவை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உதவும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் அதேவேளை, பொதுமுதலீடுகளுக்காக சுமார் ரூபா 2 டிரில்லியன் ஒதுக்கியுள்ளமையும், டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டை 54 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையும் நாட்டின் நீண்டகால உற்பத்தித்திறனுக்கான சாதகமான சமிக்ஞைகளாகப் பார்க்கப்படுகின்றன.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, 1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கங்கள் கடந்து வந்த பாதையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டங்களின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, 2027ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தனித்துவமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. ஏனெனில், இது நாட்டின் பொருளாதார மீட்சியை மாத்திரமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரம், சமூக நலன், அபிவிருத்தி மற்றும் சமத்துவமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் நீண்டகாலத் திட்டமாக அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைமைகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மோசடிகள், பொறுப்பற்ற நிர்வாகம் மற்றும் கடன் சுமைகள் ஆகியவற்றின் விளைவுகளைச் சாதாரண மக்களே அதிகமாகச் சுமந்துள்ளனர். எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் வரிசைகளில் நின்ற ஒரு தேசத்தின் வேதனையை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
அந்த இருண்ட அனுபவங்களிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, மீண்டும் அவ்வாறானதொரு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளாத நிலையான தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படையான மாற்றமாகும்.
அந்த மாற்றத்திற்கான அரசியல் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய அடுத்தகட்டத்தில் உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
எனினும், எந்தவொரு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியும் அதன் அறிவிப்புகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. அதில் முன்வைக்கப்படும் இலக்குகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன, ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுகின்றது, அதன் நன்மைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு மாற்றுகின்றன என்பதிலேயே அதன் உண்மையான வெற்றியானது தங்கியுள்ளது.
எனவே, இந்த வரவு செலவுத் திட்டத்தின் இலக்குகளைச் செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, அரச அதிகாரிகள், தனியார் துறை, தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்புள்ளது.
இன்று இலங்கை எதிர்பார்ப்பது வெறுமனே பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிக்கும் ஓர் அரசாங்கத்தை மாத்திரமல்ல. ஊழலற்ற நிர்வாகம், சமத்துவமான வாய்ப்புகள், தரமான கல்வி, வலுவான சுகாதாரக் கட்டமைப்பு, கண்ணியமான வேலைவாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய எதிர்காலம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியல் மாற்றத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில், 2027 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கும் பொருளாதார இலக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் பயன்கள் கொழும்பிலுள்ள உயர்மட்ட மக்களிடமிருந்து தொலைதூரக் கிராமங்களில் வாழும் சாதாரண குடும்பங்கள் வரை சென்றடையும்போது, அது வெறுமனே ஓர் அரசாங்கத்தின் நிதி வெற்றியாக இருக்காது. மாறாக, மாற்றத்தை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கிய மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் கிடைக்கும் வெற்றியாகவே அமையும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் குறுகியகால விமர்சனங்களையும் கடந்து, நாட்டின் நீண்டகால நலனையும், எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்தி இந்த மாற்றப் பயணத்தில் அனைவரும் பங்காளிகளாக வேண்டும். ஏனெனில், ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல; அது ஒட்டுமொத்த மக்களினதும் தேசியப் பொறுப்பாகும்.
வளமான நாடு, அழகான வாழ்க்கை! என்பது வெறும் அரசியல் முழக்கமாக இல்லாமல், ஒவ்வொரு இலங்கையரின் வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் உணரக்கூடிய யதார்த்தமாக மாற வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இலங்கை நகர்வதற்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் முக்கியமான முயற்சியாகவே 2027 வரவு செலவுத் திட்டம் வரலாற்றில் பதிவாக வேண்டும். புதிய இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, பொருளாதார நீதியாகவும், சமூக முன்னேற்றமாகவும், தலைமுறைகளைக் கடந்து நிலைத்திருக்கும் தேசிய வளர்ச்சியாகவும் மாறும் நாளே இந்த மாற்றத்தின் உண்மையான வெற்றியாகும்!
அஹமட் இர்ஷாட்.
22-11-2026.
2027 අයවැය නව ඉලක්ක සඳහා අඩිතාලම දමා ඇත!
ආයෝජන දිරිගැන්වීමේ සහ මධ්යම පන්තියට සහන සැලසීමේ සැලසුම් ඇතුළත් කිරීම සම්බන්ධයෙන් ආර්ථික විද්යාඥයින් එය පැසසුමට ලක් කර ඇත.
"සෞභාග්යමත් දේශයක්, සුන්දර ජීවිතයක්!" යන ඉලක්කය සාක්ෂාත් කර ගැනීමට උත්සාහ කරන ජාතික ජන බලවේගයේ මෙම දූරදර්ශී අයවැය හුදු මූල්ය ප්රකාශයක් නොවේ; එය දශක ගනනාවක එකතැන පල්වෙමින් සිටි ජාතිය මුදාගෙන නව ශ්රී ලංකාවක් ගොඩනැගීමේ ඓතිහාසික සන්ධිස්ථානයකි.
මේ ආර්ථීක ගමනේ සැබෑ සාර්ථකත්වය අත්කර ගත හැක්කේ රජය, රාජ්ය නිලධාරීන්, පෞද්ගලික අංශය සහ සාමාන්ය ජනතාව යන සියලු පාර්ශ්ව එකමුතුවෙන් වැඩ කළහොත් පමණි. ස්ථාවර සහ සමෘද්ධිමත් ජාතියක් ගොඩනැගිය හැක්කේ සමස්ත ජනතාවගේ සාමූහික උත්සාහයෙන් පමණි!
++++++++++++++++++
ශ්රී ලංකාවේ දේශපාලන හා ආර්ථික ඉතිහාසය තුළ ජාතික ජන බලය (NPP) රජයේ 2027 අයවැය සාමාන්ය මූල්ය ප්රකාශයක් ලෙස පමණක් සැලකිය නොහැකිය. ඒ වෙනුවට, එය දශක ගණනාවක් තිස්සේ ආර්ථික පරිහානිය, දේශපාලන අවභාවිතය, දූෂණ වංචා සහ පරිපාලන අසාර්ථකත්වය නිසා පීඩාවට පත් වූ ජාතියක් යළි ගොඩනැගීමේ නව ආර්ථික ගමනක සුවිශේෂී සන්ධිස්ථානයක් ලෙස සැලකිය යුතුය.
2022 දී රට මුහුණ දුන් පෙර නොවූ විරූ ආර්ථික කඩාවැටීමෙන් ගොඩ ඒමට සහ ස්ථායීකරණ අදියර කරා යාමට පසුගිය දෙවසර තුළ අනුගමනය කළ ක්රියාමාර්ගවල මීළඟ අදියර ලෙස සකස් කර ඇති මෙම අයවැය ආර්ථික ප්රසාරණය සහ ව්යුහාත්මක පරිවර්තනය ඉලක්ක කර ඇත. මේ හේතුව නිසා එය දේශීය හා ජාත්යන්තර බුද්ධිමතුන්, ආර්ථික විශේෂඥයින් සහ මූල්ය ආයතන ඇතුළු විවිධ කණ්ඩායම්වල අවධානයට ලක්ව ඇත.
2026 නොවැම්බර් 12 වැනි දින මුදල් අමාත්යවරයා ලෙස ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලද ශ්රී ලංකාවේ 81 වැනි අයවැය 2027 මාර්තු මාසයේදී අවසන් වීමට නියමිත ජාත්යන්තර මූල්ය අරමුදලේ විස්තීරණ අරමුදල් පහසුකම සම්බන්ධයෙන් ඉතා වැදගත් වේ. ජාත්යන්තර මූල්ය අරමුදලේ ආධාර වැඩසටහන අවසන් වූ පසුවත් තිරසාර වර්ධනයේ මාවතක්.
විශේෂයෙන්ම මැදපෙරදිග පවතින යුද තත්ත්වය හේතුවෙන් ගෝලීය වශයෙන් ඉන්ධන මිල ඉහළ යාම, දිට්වා සුළි කුණාටුවෙන් ඩොලර් බිලියන 3.4 ක පමණ ආර්ථික හානියක් සිදුවීම, ඉදිරියේදී මුහුණදීමට සිදුවිය හැකි එල්නිනෝ කාලගුණික විපර්යාස අභියෝග ඇතුළු විවිධ අර්බුද සැලකිල්ලට ගනිමින් මෙම අයවැය සකස් කර ඇත. එවැනි අභියෝගවලට බාධා කිරීමට ඉඩ නොතබා රටේ සංවර්ධන ගමන ඉදිරියට ගෙන යාමේ වගකීම රජය සතු බව එයින් පිළිබිඹු වේ.
මෙම අයවැයේ මූල්ය ව්යුහය සම්බන්ධයෙන් ගත් කල, සමස්ත අයවැය හිඟය දළ දේශීය නිෂ්පාදිතයෙන් (GDP) සියයට 4.5ක් ලෙස ඇස්තමේන්තු කර ඇති අතර එය රු. ට්රිලියන 1.753 කි. ඒ සමගම, රජය විසින් රු. බිලියන 890 කි. මෙය දළ දේශීය නිෂ්පාදිතයෙන් සියයට 2.3ක් නියෝජනය කරයි.
පසුගිය දෙවසර තුළ ආර්ථිකය ස්ථාවර කිරීම සහ මූල්ය විනය පවත්වාගෙන යාම කෙරෙහි අවධානය යොමු කළ ජාතික ජන බලවේගය රජය විසින් රු. එහි තෙවැනි අයවැයෙන් ප්රාග්ධනය සහ රාජ්ය ආයෝජන සඳහා ට්රිලියන 2ක්. මෙය දළ දේශීය නිෂ්පාදිතයෙන් සියයට 5.1ක් නියෝජනය කරයි.
මේ හරහා රජය උත්සාහ කරන්නේ ආර්ථිකය අර්බුදයෙන් ගොඩගැනීමට පමණක් නොව නිෂ්පාදන ආර්ථිකයක් බවට පරිවර්තනය කිරීමේ අඩිතාලම දැමීමයි. 2027 දී සියයට 7 ක තිරසාර ආර්ථික වර්ධනයක් ළඟා කර ගැනීම, අපනයන ඉහළ නැංවීම සහ දේශීය නිෂ්පාදනය ශක්තිමත් කිරීම මෙම අයවැයේ ප්රධාන අරමුණු අතර වේ.
රටක ආර්ථික වර්ධනය සංඛ්යාලේඛනවලින් පමණක් මැනිය යුතු නොවේ. එම වර්ධනයේ ප්රතිලාභ ගමේ ජීවත් වන ගොවියාට, වැඩ කරන කම්කරුවාට, කුඩා වෙළෙන්දාට සහ මාසික වැටුපෙන් යැපෙන පවුලට ළඟා විය යුතුය. එම පදනම මත නිෂ්පාදනය, ආයෝජනය, රැකියා සහ ජනතාවගේ ආර්ථික සහභාගීත්වය ඒකාබද්ධ කිරීමේ උත්සාහයක් ලෙස මෙම අයවැය සකස් කර ඇත.
වඩාත් වැදගත් වන්නේ මෙම අයවැයේ තවත් සුවිශේෂී ලක්ෂණයක් වන්නේ පුද්ගලික ආදායම් බදු නිදහස් කිරීමේ සීමාව රු. 150,000 සිට මසකට රු. 162,500 කි. ඒ සමගම ආයතනික බද්දේ ඉහළ සීමාව සියයට 55 සිට සියයට 45 දක්වා අඩු කර ඇත. එවැනි බදු වෙනස් කිරීම් මධ්යම ආදායම් ලබන්නන්ට යම් සහනයක් ලබා දෙන අතරම පුද්ගලික ආයෝජන සහ ව්යාපාර ක්රියාකාරකම් දිරිගැන්වීමේ අවස්ථා නිර්මාණය කරයි.
රු. රාජ්ය සේවකයන්ගේ වැටුප් වැඩිවීම් සඳහා රුපියල් බිලියන 110 ක් මෙන්ම විශ්රාමිකයන් සඳහා අතිරේක ගෙවීම්, පාසල් අභ්යාස පොත් සහ මුද්රිත පොත් සඳහා එකතු කළ අගය මත බද්ද ඉවත් කිරීම වැනි ක්රියාමාර්ග ද ජනතාවගේ දෛනික ජීවිතයට සෘජුව සම්බන්ධ වූ වැදගත් අංගයන් වේ.
විශේෂයෙන් දිගු කලක් ආර්ථික දුෂ්කරතා දරා සිටින පවුල් සඳහා අධ්යාපන වියදම් සහ අත්යවශ්ය අවශ්යතා සම්බන්ධයෙන් සහන සැලසීම සමාජ වගකීමේ ප්රකාශනයකි. ජාතියක අනාගතය රැඳී ඇත්තේ එහි දරුවන්ගේ අධ්යාපනය මතය. ඒ අර්ථයෙන් පාසල් සිසුන්ගේ අධ්යාපන වියදම් අඩු කිරීමේ ක්රියාමාර්ග හුදු මූල්ය සහන ලෙස දැකිය නොහැක; ඒවා අනාගත පරපුරේ ආයෝජනය.
තාක්ෂණය, කෘතිම බුද්ධිය සහ ඩිජිටල්කරණය යන පදනම මත ගෝලීය ආර්ථිකය වේගයෙන් පරිවර්තනය වෙමින් පවතී. මෙම පරිවර්තනය මග හැරීමට ශ්රී ලංකාවට නොහැකි බව අවබෝධ කරගෙන රු. ඩිජිටල් ආර්ථික අංශයට රුපියල් බිලියන 28.5ක් වෙන්කර තිබෙනවා.
කෘතිම බුද්ධිය (AI) සඳහා විශේෂ මධ්යස්ථානයක් පිහිටුවීම, තාක්ෂණ අංශයේ වර්ධනය ප්රවර්ධනය කිරීම සහ පුනර්ජනනීය බලශක්ති නිෂ්පාදනය පුළුල් කිරීම සඳහා ප්රමුඛත්වය ලබා දී ඇත. විශේෂයෙන්ම මෙගාවොට් 500 ක පාවෙන සූර්ය බලශක්ති ව්යාපෘතිය අනාගත බලශක්ති අවශ්යතා සපුරාලීම සඳහා වූ සුවිශේෂී වැඩපිළිවෙළකි.
මේ සියල්ල ශ්රී ලංකාවේ තරුණ තරුණියන්ට නව රැකියා අවස්ථා ඇති කිරීමටත්, ජාත්යන්තර වෙළෙඳපොළ තුළ තරඟකාරී කුසලතා වර්ධනය කිරීමටත්, රටේ ඵලදායිතාව ඉහළ නැංවීමටත් උපකාරී වන ආයෝජන වේ.
එසේම පාඩු ලබන රාජ්ය ව්යවසාය ප්රතිව්යුහගත කිරීම සහ බදු පරිපාලනය ඩිජිටල්කරණය කිරීම මගින් රාජ්ය ආදායම ඉහළ නැංවීමට රජය සැලසුම් කරයි. මෙයින් බලාපොරොත්තු වන්නේ රාජ්ය ආයතනවල කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම පමණක් නොව, මහජන බදු මුදල් නාස්තිය වැළැක්විය හැකි පරිපාලන පරිවර්තනයකට මග පෑදීමය.
එසේම පාඩු ලබන රාජ්ය ව්යවසායන් ප්රතිව්යුහගත කිරීම සහ බදු පරිපාලනය ඩිජිටල්කරණය කිරීම මගින් රාජ්ය ආදායම ඉහළ නැංවීමට රජය සැලසුම් කරයි. මෙමගින් බලාපොරොත්තු වන්නේ රාජ්ය ව්යවසායවල කාර්යක්ෂමතාව වැඩි දියුණු කිරීම පමණක් නොව, රාජ්ය මුදල් නාස්තිය වැළැක්විය හැකි පරිපාලන ප්රතිසංස්කරණයකට මග පෑදීමයි.
මෙවර අයවැයේ මූල්ය රාමුව විමසා බැලූ මහාචාර්ය අතුකෝරල, රජයේ ආදායම්, වියදම් සහ අයවැය හිඟය ඉලක්ක අතිශයෝක්තියෙන් තොරව යථාර්ථවාදී සහ ළඟා කර ගත හැකි ඒවා ලෙස අගය කර ඇත.
ජාත්යන්තර මූල්ය අරමුදල සමඟ ඇතිකරගත් ගිවිසුම යටතේ ඇතිකරගත් ආර්ථික ස්ථාවරත්වය තිරසාර වන අයුරින් රාජ්ය ණය කළමනාකරණය සැලසුම් කර ඇති බවද ඔහු පෙන්වා දුන්නේය. අධ්යාපනය, සෞඛ්ය, කෘෂිකර්මය, බලශක්ති සහ කුඩා හා මධ්ය පරිමාණ ව්යවසායන් ශක්තිමත් කිරීම අරමුණු කරගත් නීතිමය ප්රතිසංස්කරණ ද සාදරයෙන් පිළිගන්නා බව ඔහු වැඩිදුරටත් ප්රකාශ කළේය.
එමෙන්ම, පෞද්ගලික අංශයේ නිර්දේශ ඇතුළත් කරමින් ආර්ථික පරිවර්තනයක් ඇති කිරීමේ වැදගත් පියවරක් ලෙස ශ්රී ලංකා වාණිජ මණ්ඩලය විසින් 2027 අයවැය ද පිළිගෙන තිබේ.
විශේෂයෙන්ම, ඉහළ ආයතනික බදු අනුපාතය අඩු කිරීම සහ පුද්ගලික ආදායම් බදු නිදහස් සීමාව ඉහළ නැංවීම ආයෝජන දිරිගැන්වීමට සහ මධ්යම පන්තියට සහන සැලසීමට ඉවහල් වන බව ආර්ථික විශ්ලේෂකයින් පෙන්වා දී ඇත.
තවද, රාජ්ය මූල්ය හිඟය දළ දේශීය නිෂ්පාදිතයෙන් සියයට 4.5ක් ලෙස පවත්වා ගනිමින් රු. රාජ්ය ආයෝජනය සඳහා ට්රිලියන 2 ක් සහ ඩිජිටල් ආර්ථික සංවර්ධනය සඳහා වෙන් කළ ප්රතිපාදන සියයට 54 කින් වැඩි කිරීම, රටේ දිගුකාලීන ඵලදායිතාව සඳහා ධනාත්මක සංඥා ලෙස සැලකේ.
මේ සියලු කරුණු සැලකිල්ලට ගෙන, 1948 නිදහසින් පසු ශ්රී ලංකා රජයන් ඉදිරිපත් කළ අයවැය ඉතිහාසය දෙස ආපසු හැරී බලන විට ජාතික ජනබල ආණ්ඩුවේ 2027 අයවැයට සුවිශේෂී වැදගත්කමක් ලැබේ. මක්නිසාද යත් එය සැලසුම් කර ඇත්තේ හුදෙක් රටේ ආර්ථික ප්රකෘතිය සඳහා වූ සැලැස්මක් ලෙස නොව, අනාගත පරපුරේ ජීවනෝපාය, සමාජ සුබසාධනය, සංවර්ධනය සහ සාධාරණ ආර්ථික වර්ධනය ඒකාබද්ධ කරන දිගුකාලීන උපාය මාර්ගයක් ලෙසය.
දශක ගණනාවක් තිස්සේ බලයේ රැඳී සිටි දේශපාලන නායකත්වයන්ගේ නොමග ගිය ආර්ථික ප්රතිපත්ති, දූෂණ වංචා, වගකීම් විරහිත පාලනය සහ ණය බරේ ප්රතිවිපාකවල විශාලතම බර දරා ඇත්තේ සාමාන්ය ජනතාවයි. ඉන්ධන, ගෑස් සහ අත්යවශ්ය භාණ්ඩ සඳහා පෝලිම්වල සිටි ජාතියේ වේදනාව ජනතාවට තවමත් අමතක වී නැත.
එම අඳුරු අත්දැකීම්වලින් රට මුදාගෙන යළි එවැනි ආර්ථික කඩාවැටීමකට මුහුණ නොදෙන ස්ථාවර ජාතියක් ගොඩනැගීම ජනතාව අපේක්ෂා කරන මූලික වෙනසයි.
එම වෙනසේ දේශපාලන වගකීම භාරගත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය ආර්ථිකය ස්ථාවර කර මීළඟ අදියරේදී නිෂ්පාදනය, ආයෝජනය, තාක්ෂණය, රැකියා සහ සමාජ සුබසාධනය අවධාරණය කරමින් මෙවර අයවැය ඉදිරිපත් කර ඇත.
කෙසේ වෙතත්, ඕනෑම අයවැයක සාර්ථකත්වය තීරණය වන්නේ එහි නිවේදනවලින් පමණක් නොවේ. එහි සැබෑ සාර්ථකත්වය රඳා පවතින්නේ එහි දක්වා ඇති ඉලක්ක කෙතරම් දුරට ක්රියාත්මක වන්නේද, වෙන් කරන අරමුදල් කෙතරම් කාර්යක්ෂමව භාවිතා කරන්නේද යන්න සහ එහි ප්රතිලාභ සාමාන්ය ජන ජීවිතය කෙතරම් පරිවර්තනය කරයිද යන්න මතය.
එබැවින් මෙම අයවැයේ අරමුණු ක්රියාත්මක කිරීමේ වගකීම රජයට පමණක් නොව රාජ්ය නිලධාරීන්, පෞද්ගලික අංශය, ව්යවසායකයින්, සාමාන්ය ජනතාව ඇතුළු සියලු පාර්ශ්ව වෙත පැවරී ඇත.
අද ශ්රී ලංකාව අපේක්ෂා කරන්නේ ආර්ථික වර්ධන වේගය වැඩි කරන ආණ්ඩුවක් පමණක් නොවේ. දූෂණයෙන් තොර පාලනයක්, සමාන අවස්ථා, ගුණාත්මක අධ්යාපනයක්, ශක්තිමත් සෞඛ්ය සේවාවක්, ගෞරවනීය රැකියාවක් සහ විශ්වාසයෙන් යුතුව ජීවත් විය හැකි අනාගතයක් සහතික කරන දේශපාලන පරිවර්තනයක් ජනතාව අපේක්ෂා කරයි.
ඒ අනුව 2027 අයවැයෙන් දක්වා ඇති ආර්ථික ඉලක්ක ක්රියාත්මක කර එහි ප්රතිලාභ කොළඹ දුෂ්කර ගම්මානවල වෙසෙන සාමාන්ය පවුල්වලට මෙන්ම වරප්රසාද ලත් පන්තියට ලැබෙන විට එය රජයකට හුදු මූල්යමය සාර්ථකත්වයක් වන්නේj නැත. ඒ වෙනුවට එය වෙනසක් අපේක්ෂාවෙන් ජාතික ජන බලයට ජනවරමක් ලබාදුන් ජනතාවගේ විශ්වාසය හා අපේක්ෂාවන් වෙනුවෙන් ලද ජයග්රහණයක් ලෙසින් පවතිනු ඇත.
දේශපාලන එදිරිවාදිකම් හා කෙටි කාලීන විවේචනවලින් ඔබ්බට ගොස් රටේ දීර්ඝ කාලීන සුබසිද්ධිය සහ අනාගත පරපුරේ ජීවනෝපාය ප්රමුඛ කොට ගනිමින් මේ පරිවර්තන ගමනේ කොටස්කරුවන් බවට සියලු දෙනා පත් විය යුතුය. මන්ද ජාතියක් ගොඩනැගීම රජයක වගකීම පමණක් නොවේ. එය සමස්ත ජනතාවගේ ජාතික වගකීමකි.
"සමෘද්ධිමත් රටක්, ලස්සන ජීවිතයක්!" හුදු දේශපාලන සටන් පාඨයක් ලෙස නොසිට, සෑම ශ්රී ලාංකික නිවසකටම, සෑම ගමකටම, සෑම පවුලකම ජීවිතයට දැනෙන යථාර්ථයක් බවට පත් විය යුතුය.
2027 අයවැය ලේඛනය ශ්රී ලංකාවට එම ඉලක්කය කරා ගමන් කිරීමට අවශ්ය ආර්ථික පදනම නිර්මාණය කරන සුවිශේෂී වැඩපිළිවෙළක් ලෙස ඉතිහාසයේ සටහන් විය යුතුය. නව ශ්රී ලංකාවක් ගොඩනැගීමේ ජනවරම සැබෑ ලෙසම ඉටුවන්නේ එය පරම්පරා ගණනාවක් පුරා පවතින ආර්ථික සාධාරණත්වය, සමාජ ප්රගතිය සහ ජාතික සංවර්ධනය බවට පරිවර්තනය වූ දිනට පමණි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත සඳහා,
22-11-2026.
සිංහල පරිවර්තනය සමග) புதிய இலக்குகளுக்கு அடித்தளமாக அமைந்த 2027 வரவு செலவுத் திட்டம்!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 22, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 22, 2026
Rating:



கருத்துகள் இல்லை: