எனக்கு தரப்பட்ட பொறுப்பினை அமானிதமாகவும், என்னால் முடியுமான வரை செயற்படுத்தியுள்ளேன் பிரதேச கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனக்கு தரப்பட்ட பிரதேச கல்விப் பணிப்பாளர் என்ற
பொறுப்பினை அமானிதமாகவும், என்னால் முடியுமான வரை செயற்படுத்தியுள்ளேன் என காத்தான்குடிக்கான பதில் பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம்(SLEAS) தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகப்பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 மாதங்களாக எனக்கு தரப்பட்டிருந்த காத்தான்குடி கோட்ட கல்விப்பணிப்பாளர் பணியிலிருந்து விடுகை பெறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என நம்புகின்றேன்.
(இன்ஷாஅழ்ழாஹ்) இப்தவிக்கு 2 அதிபர்கள் விருப்பத்துடன் இருப்பதால் நான் எனது நிரந்தர பதவியான உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு மீளச் செல்லும் நிலையேற்பட்டுளளது.
நான் காத்தான்குடி கோட்ட கல்விப்பணிப்பாளராக
இருந்த காலத்தில் எனது காத்தான்குடி கோட்டத்தின் பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் கல்வி அபிவிருத்தியில் என்னால் முடியுமான வரை செயற்பட்டுள்ளேன். பல ஒழுங்கு படுத்தல்களை மேற் கொண்டேன். நிறையவே கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்களை மாணவர் அடைவை உயர்த்துவதற்காக மேற்கொண்டேன். அழ்ழாஹ்வின் உயர்ந்த அருளை பெறுவதற்காக நான் தூங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய மற்ற நேரமெல்லாம் எனது கோட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக என்னால் முடியுமான வரை
பாடுபட்டேன். இந்த மாதம் கடுமையான நெருக்கீடுகளை எதிர்கொண்டேன். இருப்பினும் இந்தக் கல்வி சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மன திடத்துடன் சவால்களை எதிர் கொண்டேன். மேலும் கல்வியில் சம்பந்தமில்லாத விடயமொன்றிற்காகவும், எனக்கு சம்பந்தமில்லாத விடயமொன்றிற்காகவும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன் இந்த நிமிடம் வரை, (அழ்ழாஹ் போதுமானவன்) இருப்பினும் ஏழை மாணவர்களின் கல்விக்காக எனது அர்ப்பணிப்பை இதுவரை மேற்கொண்டேன். (அல்ஹம்துலில்லாஹ்)
நான் பிரதேச கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நீங்குதல் சம்பந்தமாக ஒரு துளியேனும் கவலை கொள்ளவில்லை, இருப்பினும் காத்தான்குடி கல்வி நிலைமை மேலும் சவாலை எதிர் கொள்ளும் என்பதில் ஐயமில்லை, நான் அல் ஹிறா மகா வித்தியாலய அதிபராக இருந்த போது மிக சிரமத்துடன் அப் பாடசாலையை
கட்டியெழுப்பினேன். எனக்கு இப் பணியின்போது உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
காத்தான்குடியின் கல்வி நடவடிக்கைகள் முன்னேற்றமடைய பிரா்த்திக்கின்றேன்.
AGM.ஹக்கீம் (SLEAS)
எனக்கு தரப்பட்ட பொறுப்பினை அமானிதமாகவும், என்னால் முடியுமான வரை செயற்படுத்தியுள்ளேன் பிரதேச கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2020
Rating:

கருத்துகள் இல்லை: