மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் தேசிய மக்கள் சக்தி (NPP)
"மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்." என்ற வேண்டுகோளை முன்வைத்து கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடக சந்திப்பு இன்று 28.1.2020 காலை கண்டியில் இடம் பெற்றது.
இதில் NFGG தேசிய அமைப்பாளர் நஜா முகம்மத், JVP மத்திய குழு உறுப்பினர் லால் காந்த, NIO வின் கண்டி மாவட்ட உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமரகீர்த்தி உட்பட ஐக்கிய இடதுசாரி முன்னணி மத்திய குழு உறுப்பினர் சட்டதரணி லால் விஜேநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய இடதுசாரி முன்னணி மத்திய குழு உறுப்பினர் சட்டதரணி லால் விஜேநாயக்க கருத்துரை வழங்கினர்.
காட்டு மிருகங்களால் குறிப்பாக குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்றவற்றால் விவசாய உற்பத்திகள் உட்பட நாளந்த வாழ்க்கை கூட மத்திய மலை நாட்டில் குறிப்பாக கண்டியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கமோ, அதிகாரிகளோ இதுவரை கண்டுகொள்ளாத ஒரு விடையமாகவும் இது நீண்டநாள் காணப்படும் ஒரு பாரிய மக்கள் பிரச்சினையாகவும் பலரும் தேசிய மக்கள் சக்தியிடம் முன்வைத்ததன் பின்னணியிலேயே இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சினை குறித்து விஞ்ஞான ரீதியாக ஆய்வுசெய்யப்பட்டு பொறுத்தமான தீரவினைப் பெற்றுக் கொள்ளும் வரை இவ்விடயம் குறித்து மேலும் கவனயீர்ப்பு மற்றும் மக்களை தெளிவூட்டும் நிகழ்வுகளும் அரசாங்க அதிகாரிகள் மீது அழுத்தஙகளை பிரயோகிக்கும் நிகழ்வுகளும் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மலைநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் தேசிய மக்கள் சக்தி (NPP)
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2020
Rating:


கருத்துகள் இல்லை: