"அறிவுச் சுரங்கம்" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் அதி கூடிய புள்ளிகளினால் வெற்றி...
ANCHOR - COLOMBO COMMODITIES இன் பூரண அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்தும் அறிவுச் சுரங்கம் போட்டிகளின் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளின் ஒலிப்பதிவு (06.03.2024 புதன்கிழமை) காத்தான்குடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
நான்கு பாடசாலைகள் பங்குபற்றிய இப் போட்டிகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் ஆரம்பம் முதலே சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் எதிர்த்துப் போட்டியிட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவிகளை 47 மேலதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு முதலாம் இடத்தைப் பிடித்ததுடன்
கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த போட்டித் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரி-64 புள்ளி ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவிகள்- 17 புள்ளிகள். காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பில் FRM.Munshif தலைமையில் MRM. Usamanusaith, MNM.Shafir
ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்தி வரும் அறிவுச் சுரங்கம் போட்டியின் ஒலிப்பதிவு வரலாற்றில் போட்டி ஒன்றில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்ற பெருமையை எமது காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் M. அஹமட் முனவ்வர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ்வொலிப்பதிவு நிகழ்வில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் ANCHOR - COLOMBO COMMODITIES நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தொழிநுட்ப உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் எமது பாடசாலையின் உயர்தர விஞ்ஞான,கணித பிரிவு பகுதித்தலைவர் ஜனாப். இஸ்ஸடீன் ஆசிரியர் இம்மாணவர்களை பயிற்றுவித்து வழிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்வையாளர்களுக்கென கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களே விரைந்து சரியான விடை கூறி பரிசினையும் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
"அறிவுச் சுரங்கம்" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் அதி கூடிய புள்ளிகளினால் வெற்றி...
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2024
Rating:
















கருத்துகள் இல்லை: