Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி சம்மேளனத்திற்கு மூன்று நாடுகளுக்கான அதிமேதகு தூதுவர்கள் விஜயம்..

நல்லிணக்க பொறி முறையொன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அதிமேதகு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, அதிமேதகு இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க், அதிமேதகு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கும் சம்மேளன பிரதிநிதிகக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் அமர்வொன்று காத்தான்குடி  சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.


சம்மேளன தலைவர் அல்ஹாஜ்.AMM.றஊப், தலைமையில் இடம் பெற்ற இக் கலந்துரையாடல் அமர்வில் சம்மேளனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனது பணிகள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டதுடன்,  பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றினை தீர்த்துக் கொள்வதற்கான வழி முறைகள் மற்றும் உள்ளக பொறி முறையொன்றினை ஏற்படுத்துவது தொடர்பாகவும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.


மேற்படி அமர்வில் சம்மேளன பொதுச் செயலாளர், ஜம்இய்யத்துல் உலமா தலைவர், செயலாளர் மற்றும் சம்மேளன பிரதிநிதிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



   




காத்தான்குடி சம்மேளனத்திற்கு மூன்று நாடுகளுக்கான அதிமேதகு தூதுவர்கள் விஜயம்.. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 07, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.