ஜனாதிபதி தேர்தலில் சஜித் முன்னிலையில்: ஞானசார தேரர் தகவல்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருக்கின்றார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளது எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கோட்டாபய ராஜபக்ச 69 லட்சம் வாக்குகளை பெற்றவேளைகூட சஜித்துக்கு 55 லட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. சஜித்தால் தற்போது நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகின்றனர். அவர் தன்னால் முடிந்தவற்றை வழங்குகின்றார். பஸ் இல்லாத பாடசாலைகளுக்கு பஸ் வழங்கப்படுகின்றது. ஆனால் அதற்கான நிதி மூலம் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பஸ் இல்லாத பாடசாலையொன்றுக்கு அது கிடைக்கின்றதே என சந்தோசப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் இரு வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகின்றேன். ஏனெனில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முக்கிய சில தகவல்களை வெளியிட வேண்டியுள்ளது.” – என்றார்.
.jpg)
கருத்துகள் இல்லை: