தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு
நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சினால் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 4.7 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதி ஒதுக்கீட்டிற்கூடாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 3 வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், உதவிப் பிரதேச செயலாளர் சில்மியா ஆகியோரின் பங்கு பற்றலோடு காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடலுக்கான அமைப்பாளருமான தோழர் பிர்தௌஸ் (நளீமி) தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளரும், கடற்றொழில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான தோழர் எஸ்.எம்.ஏ.நஸீர் ஆகியோரினால் அடையாளங் காணப்பட்டிருந்தன.
அந்தவகையில் காத்தான்குடி பரீட் நகரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இயங்கி வரும் மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் உள்ளக அபிவிருத்திக்காக 1.2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியத்துறையினை நாடும் மக்களுக்கு சிறப்பான சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இம்மத்திய மருந்தகத்தின் வசதிகளை எதிர்காலத்தில் மேம்படுத்துவது தொடர்பிலும் வைத்திய அதிகாரி எம்.எம்.ஜலால்தீன் மற்றும் மருந்தாளர் திரு.பிரபா ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தி குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: