காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு..!
(B.M.பயாஸ்
செய்தியாளர்)
Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.2025)
காலை 7.00 மணியில் இருந்து 10.00 வரை இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி RMIB. ரத்னாயக்க அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி AM. ஜவாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேசத்தில் போதை ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகநல விடயங்களில் பொலிசாருடன் இணைந்து பொலிஸ் உபதேசக்குழு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு..!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: