Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நம் மீது வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வி அடைய இடமளிக்கப்பட மாட்டாது மலையகத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு


"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கை அறிக்கையை யதார்த்தமாக்குவதற்கான பயணம்.


"வளமான நாடு-அழகான வாழ்க்கை" கொள்கை அறிக்கையை யதார்த்தமாக்குவதற்காக, ஹட்டன் பிரகடனத்திற்கு இணங்க, மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமையை உறுதி செய்யும் நோக்கத்தில், இந்து - லங்கா IV ஆம் கட்டத்தின் 10000 வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.



இந்தத் திட்டத்திற்கும், இந்நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார மற்றும் சமூக வாழ்வை வழங்குவதற்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும், இந்தியப் பிரதமர், இந்திய மக்கள் மற்றும் இந்தப் பணியை வழிநடத்தும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.


சுமார் 202 ஆண்டுகளாக இந்த பூமியுடன் போராடி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்து வரும் மலையக சமூகம், இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கடந்த பொதுத் தேர்தலில் தங்கள் உறவினர் மற்றும் அண்டை வீட்டாரை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நம் மீது வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வி அடைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை உறுதிசெய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.




நம் மீது வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வி அடைய இடமளிக்கப்பட மாட்டாது மலையகத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.