காத்தான்குடி கோட்டம் ஓய்வு பெற்ற ஆசிரியரினால் தான் கடமையாற்றிய பாடசாலை சமூகதித்திற்கு குடிநீர் ஏற்பாடு.....
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு இப் பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்ஹாஜ். A. மஹ்ரூப் அவர்களினால் மாணவர்களின் நலன்கருதி குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இப் பாடசாலையில் 19 வருடங்கள் சேவையாற்றி இவ்வருடம் ஓய்வு பெற்றுச் சென்ற தரம் ஐந்து மாணவர்களுக்கு கற்பித்து வந்த சிரேஷ்ட ஆசிரியரான அல்ஹாஜ். A. மஹ்ரூப் ஆசிரியர் அவர்கள் தாமாக முன்வந்து மாணவர்களின் நலன் கருதி தனது சொந்த செலவில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
இக்குடிநீர் வசதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. அல்ஹாஜ். A. மஹ்ரூப் ஆசிரியர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக் குடிநீர் வசதிகளை திறந்து வைவத்தார். இந் நிகழ்வில் அதிபர் உட்டபட ஆசிரியர்கள் மாணவர்கள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாசிரியருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு சார்பாகவும் நன்றிகள் உரித்தாகட்டும்.
ஊடகப் பிரிவு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி
காத்தான்குடி கோட்டம் ஓய்வு பெற்ற ஆசிரியரினால் தான் கடமையாற்றிய பாடசாலை சமூகதித்திற்கு குடிநீர் ஏற்பாடு.....
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 14, 2025
Rating:

கருத்துகள் இல்லை: