டாக்டர் திருமதி ஜலீலா முஸம்மில் எழுதிய “ஒட்டகச்சிவிங்கி பொம்மை” மழலைப்பாடல் நூலின் வெளியீட்டு விழா
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஏறாவூர் அஹமட் பரீட் நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி, கவிதாயினி டாக்டர் திருமதி ஜலீலா முஸம்மில் எழுதிய “ஒட்டகச்சிவிங்கி பொம்மை” மழலைப்பாடல் நூலின் வெளியீட்டு விழா (19) இன்று காலை.10.00 மணிக்கு அஹமட் பரீட் நூலக பொறுப்பாளர் பி.என்.எப்.றிஸாதா தலைமையில் நூலக வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.நழீம் அவர்களும், கௌரவஅதிதிகளாக
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், நகரசபை பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன், கௌரவ உறுப்பினர் என்.எம். சரீனா, சனசமூக உத்தியோகத்தர் ஏ.ஹாறூன், ஆசிரியை என்.எம் ஆரிபா, நூலகர் திருமதி ஹப்சா மஜீத், நூலக விடய உத்தியோகத்தர் ஏ.ஆர். சஞ்சீதா, கலாசார உத்தியோகத்தர் எம்.எம். மக்பூல், நூலக உத்தியோகத்தர்கள், கவிஞர்கள் மற்றும் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை கவிஞர் எஸ்.எம். அமீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் இதுவரை “சிறகு முளைத்த மீன்”, இரண்டு ஹைக்கூன் கவிதை நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டு, இன்று தமது நான்காவது படைப்பாக “ஒட்டகச்சிவிங்கி பொம்மை” எனும் மழலைப்பாடல் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதோடு , இவர் வைத்தியத் துறையை தாண்டி தமது படைப்பாற்றல் மற்றும் எழுத்துத் திறனின் மூலம் ஓய்வு நேரங்களை சிறப்பாக பயன்படுத்தி இவ்வாறான படைப்புகளை உருவாக்குவது எமது ஊருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் என கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள் தனது உரையில் பாராட்டுத் தெரிவித்தார்.
அத்தோடு, வருகை தந்த அதிதிகளுக்கு டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் “ஒட்டகச்சிவிங்கி பொம்மை” நூலை வழங்கியதோடு, பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்காக அழகிய கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
டாக்டர் திருமதி ஜலீலா முஸம்மில் எழுதிய “ஒட்டகச்சிவிங்கி பொம்மை” மழலைப்பாடல் நூலின் வெளியீட்டு விழா
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2025
Rating:








கருத்துகள் இல்லை: