காத்தான்குடியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது பிரதேச தொழிற் சந்தை பிரம்மாண்டமாக நடாத்தப்பட்டது: நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆர்வம்
காத்தான்குடியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது பிரதேச தொழிற் சந்தை பிரம்மாண்டமாக நடாத்தப்பட்டது: நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆர்வம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு மத்தியில் முதலாவது முன்னோடித் திட்டமாக, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் (Department of Manpower and Employment) ஏற்பாட்டிலான விசேட தொழில் சந்தை (Job Fair) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (21) புதன்கிழமை மிகச் சிறப்பாக
நடாத்தப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் நேரடித் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட தொழிற் சந்தை மாநாட்டில், நாட்டின் முன்னணி அரச மற்றும் தனியார் பெருநிறுவனங்கள் பல கலந்துகொண்டு தங்களது நிறுவனக் கட்டமைப்புகளில் தற்போது நிலவும் தொழில் வாய்ப்புகள், தொழில்சார் பயிற்சிகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார வழிகாட்டல்கள் குறித்துப் பங்குபற்றிய இளைஞர், யுவதிகளுக்கு விரிவான விளக்கங்களை வழங்கின. இத்தொழில் சந்தை மூலம் நூற்றுக்கணக்கான உள்ளூர் பட்டதாரிகள் மற்றும் தொழில் தேடும் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு வழிகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா, மனிதவள உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.அஸ்மி தாஜுதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீ. மைக்கல் கொலின், மற்றும் மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரிகள் சிலரான சீ. திருவானந்தராசா, ஏ.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சமகாலத் தொழில் சந்தையின் சவால்கள், தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் (Entrepreneurship) பற்றிய விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டங்களில் முதன்முறையாக இத்தகைய தொழிற் சந்தை ஒன்று காத்தான்குடியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டமை பிராந்திய மட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இதில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு தமக்கான வேலைவாய்ப்பு நேர்முகப் பரீட்சைகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව දිස්ත්රික්කයේ ප්රථම ප්රාදේශීය රැකියා පොළ කාත්තන්කුඩියේදී සාර්ථකව පැවැත්වෙයි: තරුණ තරුණියන් විශාල පිරිසක් එක්වෙති
මඩකලපුව දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම් කාර්යාල ඉතිහාසයේ ප්රථම වතාවට සංවිධානය කරන ලද සුවිශේෂී ප්රාදේශීය රැකියා පොළ (Job Fair) මිනිස්බල හා රැකීරක්ෂා දෙපාර්තමේන්තුවේ මෙහෙයවීමෙන් ඊයේ (21) බදාදා දින කාත්තන්කුඩි ප්රාදේශීය ලේකම් කාර්යාලීය ශ්රවණාගාරයේදී ඉතා සාර්ථක අයුරින් පැවැත්විණි.
කාත්තන්කුඩි ප්රාදේශීය ලේකම් නිහාරා මවුජූද් මහත්මියගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම රැකියා පොළ සඳහා දිවයිනේ ප්රමුඛ පෙළේ රාජ්ය සහ පෞද්ගලික අංශයේ ආයතන රැසක් සහභාගී වූහ. එහිදී එම ආයතන මඟින් තරුණ ප්රජාව වෙත විවෘතව පවතින නව රැකියා අවස්ථා, වෘත්තීය පුහුණු පාඨමාලා සහ ආර්ථික වර්ධන ක්ෂේත්ර පිළිබඳව සහභාගී වූවන් දැනුවත් කිරීම සහ සම්මුඛ පරීක්ෂණ පැවැත්වීම සිදු කෙරුණි.
මෙම අවස්ථාවට කාත්තන්කුඩි ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ නියෝජ්ය ක්රමසම්පාදන අධ්යක්ෂිකා හන්සුල් සිහානා මහත්මිය, මිනිස්බල නිලධාරී එම්.ටී.එම්. අස්මි තාජුඩීන් මහතා, දිස්ත්රික් සම්බන්ධීකාරක වී. මයිකල් කොලින් මහතා මෙන්ම සී. තිරුවානන්දරාජා සහ ඒ. කරුණාකරන් යන මහත්වරුන් ද සහභාගී වෙමින් නූතන රැකියා වෙළෙඳපොළේ පවතින ප්රවණතා සහ ව්යවසායකත්ව අවස්ථා පිළිබඳව වටිනා දේශන පවත්වන ලදී. මඩකලපුව දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයක් තුළ මෙවැනි රැකියා වෙළෙඳපොළක් පැවැත්වුණු පළමු අවස්ථාව මෙය වන අතර, මේ සඳහා ප්රදේශයේ රැකියා විරහිත තරුණ තරුණියන් අතිවිශාල පිරිසක් උනන්දුවෙන් සහභාගී වී සිටියහ.
(එම්.ඒ.සී.එම්.ජෙලීස්)
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
දේශීය පුවත්
First District Regional Job Fair Successfully Conducted at the Kattankudy Divisional Secretariat
Marking a progressive milestone as the first-ever localized employment forum within the divisional secretariats of the Batticaloa District, a premier Regional Job Fair (Employment Market) was held yesterday (21) Wednesday at the Kattankudy Divisional Secretariat, structured under the auspices of the Department of Manpower and Employment.
Presided over by the Kattankudy Divisional Secretary, Mrs. Nihara Maujood, the massive human-resource deployment campaign featured the participation of leading state and elite private sector commercial corporate establishments. Participating bodies offered direct insight, recruitment guidelines, and immediate vocational openings available within their institutional frameworks to the localized job-seeking demographic.
The career advancement session was technically facilitated by the Deputy Director of Planning of the Kattankudy Divisional Secretariat, Mrs. Hanzul Sihana, alongside Manpower Officer M.T.M. Asmi Tajudeen, District Coordinator V. Michael Collin, C. Thiruvanantharasa, and A. Karunakaran, who structurally educated the youth on modern professional dynamics, technological skill-sets, and structural entrepreneurial pathways. This landmark event standing out as the premiere administrative job drive in the region, drew a massive crowd of ambitious local young men and women actively competing for immediate career placements.
(M.A.C.M. Jalees)
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 22, 2026
Rating:


கருத்துகள் இல்லை: