සිංහල පරිවර්තනය සමග) நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்புவதற்கு முன்னர் சட்டமும், நீதியும், சமத்துவமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
பலமான சட்டக் கட்டமைப்பும், சுயாதீனமான நீதித்துறையும் இல்லாத ஒரு நாட்டில் தற்காலிக பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது. ஆகவே சட்டத்தின் ஆட்சியில்தான் "பொருளாதார நல்வாழ்வின் நுழைவாயில்" இருக்கின்றது.
நேர்மையான நீதித்துறை, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்பு ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈர்க்கும் முக்கிய காரணிகளாகும்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மெளனித்து வருவதாகவும், குற்றவாளிகளுக்கான நியாயமான நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியகியவை அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் பரவலான கருத்தாடல்களும் நிலவ தொடங்கியுள்ளன.
2026 ஆம் ஆண்டானது இலங்க வரலாற்றில் "ஊழல்வாதிகள் மற்றும் திருடர்கள் சிறைக்குச் செல்லும் ஆண்டாக" மாறும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவை பலப்படுத்தப்பட்டு, முக்கியப் புள்ளிகளுக்கு எதிராகப் பல ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட்டிருந்த நீதி விசாரணை நடவடிக்கைககள் அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக தீர்ப்புகளை வழங்கி வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
குற்றமிழைத்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது எதிர்க்கட்சிகளுக்குள் ஒருவித மௌனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய அரசுக்கு இருக்கும் பலமான மக்கள் ஆதரவுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் பலவீனமான விமர்சனங்கள் எடுபடாது என்ற நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், பிரதான எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் தலைமைத்துவப் போட்டி மற்றும் உட்கட்சிப் பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகக் கொள்கைகளுக்கு வலுவான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகளாக திராணியற்று போய் உள்ளார்கள்.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் முடக்கப்பட்டிருந்த முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் விசாரணைகள் மீண்டும் வேகமாக்கப்பட்டுள்ளது. தனி நபரின் அரசியல் பலம், குடும்பப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து ஆகியவை சட்ட அமுலாக்கத்தைத் தடுக்காது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையிலான, NPP அரசு ஊழலுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளதால், அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு தற்காப்பு உத்தியாகவே தற்போதைய விமர்சனங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
அத்தோடு, கொள்கை ரீதியான விமர்சனங்களை விட, மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெற்று அதன் மூலம் தங்களுக்கு எதிரான சட்டச் சிக்கல்களைத் தப்பிப்பதே இவர்களின் முதன்மை நோக்கம் என்று அத்தகைய விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல்,மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும் என்ற நிலையில் முக்கிய எதிர்க்கட்சி புள்ளிகளின் எர்கால வாழ்வும் இருக்கின்றது.
அரசியல் அதிகாரத்துக்காக போலியான விமர்சனங்களை NPP அரசுக்கு எதிராக முன்வைப்பதை விடவும், அதிகார துஸ்பிரயோக வழக்குககளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியிலே எதிர்கட்சி தலைவர்கள் தற்பொழுது தடுமாறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என்பது எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து வருகின்றத தகவல்களும் நிரூபிக்கின்றன.
ஜனாதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் குற்றமிழைத்த அரசியல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக உறுதியளித்துள்ளது. இதனால், கொழும்பு மேல் நீதிமன்றம் 31-07-2026 அன்று முன்னெடுத்த சுயாதீனமான விசாரனையின் முடிவில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பானது மேலும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளடன், தாக்குதல் நடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த மற்றும் அலட்சியமாக செயல்பட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சம் மேழுந்துள்ளதாகவே அரசியல் அவதானிகள் மற்றும் நடுநிலை விமர்சகர்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
நீதி மன்றங்களும், சட்ட அமுலாக்கல் துறையும் அரசியல் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு செயல்படும் போது, ஏழை - பணக்காரர், ஆட்சியாளர் - சாமானியர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி பிறக்கின்றது. பொலிஸ் காவல்துறை அரசியல்வாதிகளின் ஏவற்படையாக மாறாமல், சட்டத்தின்படி மட்டுமே கடமையாற்றுகின்ற பொழுது குற்றங்களை குறைத்து, மக்கள் மத்தியில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
சட்டம் சரியாக நிலை நாட்டப்படும் போது, ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டும். வன்முறைகளற்ற, அமைதியான ஒரு சமூகச் சூழல் உருவாகும் போது, மக்கள் அன்றாடப் பொருளாதார நடவடிக்கைகளில் அச்சமின்றி ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், சர்வதேச முதலீட்டாளர்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன், அங்குள்ள சட்டத்தின் ஆட்சியையும், தங்களின் முதலீடுகளுக்கு இருக்கும் பாதுகாப்புத்தன்மையையுமே முதலில் ஆராய்வார்கள். அத்தோடு, உலகளாவிய நிதி நிறுவனங்கள் ஒரு நாட்டிற்கு நிதியுதவி அல்லது கடன் வழங்கும் போது, "நல் ஆட்சி" (Good Governance) மற்றும் ஊழல் தடுப்பு கட்டமைப்புகளை ஒரு முக்கிய நிபந்தனையாக விதிக்கின்றன.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக மதிக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார்கள். ஏதேனும் வணிகத் தகராறுகள் ஏற்பட்டால், உள்ளூர் நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி, விரைவாக தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை அவசியமாகின்றது. திடீரென மாறும் தன்னிச்சையான சட்டங்கள் முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், நிலையான சட்டக் கட்டமைப்பு சர்வதேசத்தின் நம்பிக்கைகும், பார்வைக்கும் அவசியமாகின்றது.
திடீரென மாறும்தன்னிச்சையான சட்டங்கள் முதலீடுகளை ஆப.தில் ஆழ்த்தும் என்பதால், நிலையான சட்டக்கட்டமைப்பு சர்வதேசத்தின் நம்பிக்கைக்கும், பார்வைக்கும் அவசியாகின்றது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (World Bank) போன்ற அமைப்புகள் ஒரு நாட்டிற்கு கடன் வழங்கும் போது, ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை (Transparency) முதன்மை நிபந்தனையாக விதிக்கின்றன.
ஊழல் நிறைந்த நாடுகளில் தகுதிக்கு முக்கியத்துவம் இருக்காது. இலஞ்சம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதால், முறையான சர்வதேச நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்யத் தயங்குகின்றன. அதனோடு சேர்த்து ஊழல் அதிகமாக உள்ள நாடுகளில் "மறைமுக வர்த்தகச் செலவுகள்" (Hidden costs) அதிகரிப்பதால், தொழிலை இலாபகரமாக நடத்துவது கடினம்.
மேலும், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழல் நிலவும் நாடுகளுக்கே சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். எனவேதான், பலமான சட்டக் கட்டமைப்பும் சுயாதீனமான நீதித்துறையும் இல்லாத ஒரு நாட்டில் தற்காலிக பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், அது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது.
ஆகவே சட்டத்தின் ஆட்சியில்தான் பொருளாதார நல்வாழ்வின் நுழைவாயில் இருக்கின்றது.
ஆகவே, தேசிய மக்கள் சக்தியினுடைய தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக நீதித்துறை, பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு வருவதில் மக்கள் அரசாங்கத்தின் மீது அதீத நம்பிகையுடன் இருக்கின்றார்கள்.
கடந்த கால ஊழல்கள் மற்றும் அரசியல், நிருவாக அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதால், அரசியல் பழிவாங்கல்கள் இன்றி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
அரசியல்வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆகியவை எல்லாம் ஜனநாயக அடிப்படையில் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்கக் கூடாது என்பது பொதுவான மக்கள் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அல்லது குற்றம் சாட்டப்படுபவர்கள் பெரும்பாலும் தம்மீதான வழக்குகள் அரசியல் பழிவாங்கல் நோக்கத்தைக் கொண்டவை என்று வாதிடுவது சாதரமாணவையே.
ஆனால், அவைகளால் எதையும் சாதித்து விட முடியாது என தெரிந்து கொண்ட எதிர்க் கட்சியினர், அரசியல் ரீதியாக மக்களைத் திசை திருப்பவும், தற்போதைய அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் போலிச் செய்திகள் மற்றும் திட்டமிட்ட பிரசாரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள்.
ஜனநாயக அமைப்பில் அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதும், அதிகார சமநிலையைப் பேணுவதும் எதிர்க்கட்சிகளின் முதன்மைப் பணியாகும். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அரசாங்கத்தின் மீது ஆக்கபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.
முறையான கொள்கை திட்டங்கள் இல்லாமை, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளமை, மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படையான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் எதிர்க்கட்சிகள் வலுவான விமர்சனங்களுக்கான தலைப்புக்களைத் தேடி அலைகின்றன.
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மாற்றாக, முறையான மாற்றுக்கொள்கை அல்லது திட்ட வரைபை முன்வைக்க எதிர்க்கட்சிகள் தவறிவருகின்றன என்ற கருத்துக்களுக்கு அப்பால், மக்களின் உண்மையான களப் பிரச்சினைகளை விடுத்து, தற்காலிக அரசியல் இலாபங்களுக்கான தலைப்புகளை மட்டுமே கையில் எடுப்பதால் மக்கள் மத்தியில் அவற்றின் செல்வாக்கு குறைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் அச்சமின்றிப் பேசுவதற்காகவே நாடாளுமன்ற சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்கோ அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் அரசாங்கத்திற்கு எதிராக பரப்புவதையே சிலர் அன்றாட பாராளுமன்ற செயற்பாடுகளாக கையிலெடுத்துள்ளனர்.
ஆகவே ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் கட்டியெழுப்பப் படுவதற்கு முன்னர், சட்டமும் நீதியும், சமத்துவமுமம் நிலை நாட்டப்படுவது அந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவை என்பது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
நேர்மையான நீதித்துறை, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்பு ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈர்க்கும் முக்கிய காரணிகளாகும்.
எனவே, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமானது ஊழல் ஒழிப்பு, அதிகார துஸ்பிரயோக ஆட்சி மாற்றம் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கு சட்டமும், நீதியும் நிலை நாட்டப்படுவதானது அவர்களின் முதன்மையான அடிப்படை கொள்கைகளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அஹமட் இர்ஷாட்.
09-08-2026.
அச்சத்தினால் அடங்கிப்போன எதிரணி அரசியல் புள்ளிகள்.
சட்டம் பலமாக இல்லாவிடின் நாட்டில் அபிவிருத்தி கிடையாது.
බියෙන් යටපත් කරන ලද දේශපාලන කරුණු විරුද්ධ වීම!
නීතිය ශක්තිමත් නැත්නම් රටේ සංවර්ධනයක් නැහැ!
රටේ ආර්ථිකය ගොඩනැගීමට පෙර නීතිය, යුක්තිය සහ සමානාත්මතාවය ස්ථාපිත කළ යුතුය.
ශක්තිමත් නීතිමය රාමුවක් සහ ස්වාධීන අධිකරණයක් නොමැති රටක තාවකාලික ආර්ථික වාසි පවා වැඩි කල් පවතින්නේ නැත. මේ අනුව "ආර්ථික යහපැවැත්මේ දොරටුව" නීතියේ ආධිපත්යය තුළ පවතී.
අවංක අධිකරණයක්, දූෂණයෙන් තොර පරිපාලනයක් සහ ශක්තිමත් නීතිමය රාමුවක් දේශීය හා විදේශීය ආයෝජකයින්ගේ විශ්වාසය දිනා ගන්නා ප්රධාන සාධක වේ.
++++++++++++++++++
ජාතික ජන බලවේගයේ (NPP) රජයට එරෙහිව විපක්ෂයේ පක්ෂවල නිහඬ විවේචන සහ අපරාධකරුවන්ට සාධාරණ නඩු තීන්දුවක් ලැබෙනු ඇතැයි යන බිය වත්මන් දේශපාලන වාතාවරණය තුළ දැඩි කතාබහට ලක්වන මාතෘකාවක් බවට පත්ව ඇත. මේ සම්බන්ධයෙන් සමාජ මාධ්ය තුළ පුළුල් ලෙස සාකච්ඡා වී තිබේ.
2026 ශ්රී ලංකා ඉතිහාසයට "දූෂිතයින් සහ හොරු සිරගෙට යන වසර" ලෙසින් සටහන් වන බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රකාශ කළේය. අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව (CID) සහ දූෂණ මර්දන කොමිෂන් සභාව ශක්තිමත් කර ඇති අතර ප්රධාන කරුණුවලට එරෙහිව දූෂණ නඩු කිහිපයක් විභාග වෙමින් පවතී.
ප්රකට දේශපාලනඥයන්ට එරෙහිව පසුගිය කාලයේ විභාග වූ දූෂණ හා අක්රමිකතා පිළිබඳ නඩු කඩිනම් කර ඇත. වසා දමා ඇති අධිකරණය දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව ස්වාධීනව තීන්දු ප්රකාශ කරමින් සිටින බව දේශපාලන නිරීක්ෂකයෝ පෙන්වා දෙති. වැරදිකරුවන් වූ හිටපු ඇමැතිවරුන්ට සහ නිලධාරීන්ට නඩු පැවරීම විපක්ෂය තුළ යම් ආකාරයක නිහඬතාවයක් ඇති කර තිබේ.
මේ තත්ත්වය තුළ වත්මන් ආණ්ඩුවේ ප්රබල ජනතා සහයෝගය මධ්යයේ විපක්ෂයේ පක්ෂවල දුර්වල විවේචන පිළිගෙන නොමැත. ඒ විතරක් නෙවෙයි නායකත්ව තරඟ, පක්ෂ අභ්යන්තර ප්රශ්න නිසා විපක්ෂයේ ප්රධාන පක්ෂ දෙකඩ වෙනවා. එහෙයින් ආණ්ඩුවේ ආර්ථික හා පරිපාලන ප්රතිපත්තිවලට ප්රබල විකල්ප ඉදිරිපත් කිරීමට විපක්ෂයේ පක්ෂ බල රහිත ය.
පසුගිය කාලයේ දේශපාලන බලපෑම් මත ඇනහිට තිබූ ප්රධාන චෝදනා සහ දූෂණ විමර්ශන යළි කඩිනම් කර ඇත. පුද්ගලයෙකුගේ දේශපාලන ශක්තිය, පවුල් පසුබිම හෝ සමාජ තත්ත්වය නීතිය ක්රියාත්මක කිරීමට බාධාවක් නොවේ. කිසිම දේශපාලන බලපෑම්වලට යට නොවී දූෂණ විරෝධී වැඩපිළිවෙළ ක්රියාත්මක කරනවා.
එක් පාර්ශ්වයක් තර්ක කරන්නේ දූෂණයට එරෙහිව දැඩි නීතිමය ක්රියාමාර්ගයක් ගැන ජනාධිපති ප්රමුඛ NPP ආන්ඩුව ප්රකාශ කිරීමෙන් ගැලවීම සඳහා දැනට පවතින විවේචන ආරක්ෂක උපාය මාර්ගයක් ලෙස භාවිතා කරන බවයි. එපමනක් නොව, එවැනි විවේචන මගින් පෙන්නුම් කරන්නේ ඔවුන්ගේ මූලික අරමුණ දේශපාලන බලය නැවත ලබා ගැනීම සහ එමගින් ඔවුන්ට එරෙහි නීතිමය අභියෝගවලින් මිදීම, ප්රතිපත්තිමය විවේචනවලට වඩා බවයි.
විපක්ෂයේ ප්රධාන කරුණු පැවතීම ද පසුගිය කාලයේ සිදු වූ බව කියන අල්ලස් හා මුල්ය වංචාවලට අදාළ නීතිමය ක්රියාමාර්ගවලින් ආරක්ෂා වීමට ප්රමාණවත් වන තත්ත්වයක ය.
දේශපාලන බලය සඳහා එන්පීපී රජයට එරෙහිව ව්යාජ විවේචන එල්ල කරනවාට වඩා බලය අයුතු ලෙස භාවිත කිරීමේ චෝදනාවලින් බේරීමට විපක්ෂ නායකයින් දරන උත්සාහය තුළ දැන් පසුබෑමකට ලක්ව ඇති බව විපක්ෂ ආධාරකරුවන්ගේ වාර්තා ද පෙන්නුම් කරයි.
පාස්කු ප්රහාරයේ මහ මොළකරුවන් සහ වැරදිකරුවන් වූ දේශපාලනඥයන් නීතිය හමුවට පමුණුවන බවට ජනති අනුර කුමාර දිසානායකගේ රජය ප්රතිඥා දී ඇත. මේ අනුව, ස්වාධීන පරීක්ෂණයක් අවසානයේ 2026-07-31 දින කොළඹ මහාධිකරණය හිටපු පොලිස්පති පූජිත ජයසුන්දරට සහ හිටපු ආරක්ෂක අමාත්යාංශයේ ලේකම් හේමසිරි ප්රනාන්දුට මරණ දඬුවම නියම කළේය.
දේශපාලන නිරීක්ෂකයින් සහ මධ්යස්ථ විචාරකයින් පවසන්නේ මෙම තීන්දුව විපක්ෂ නායකයින් තුළ ද බියක් ඇති කර ඇති අතර, ප්රහාරය සිදුවන අවස්ථාවේ බලයේ සිටි සහ උදාසීන ලෙස ක්රියා කළ ප්රධාන දේශපාලන නායකයින් සහ විපක්ෂ නායකයින් තුළ ඉදිරි නීතිමය ක්රියාමාර්ග පිළිබඳ බියක් ඇති කර ඇති බවයි.
අධිකරණය සහ නීතිය ක්රියාත්මක කරන දෙපාර්තුමේන්තුව දේශපාලන බලපෑමෙන් බැහැරව කටයුතු කරන විට දුප්පත් පොහොසත් භේදයකින් තොරව පාලකයා සාමාන්ය මිනිසා යන භේදයකින් තොරව සැමට සමාන සාධාරණයක් ඉටුවන මාර්ගයක් තිබේ. පොලිසිය දේශපාලකයන්ගේ රූකඩයක් බවට පත් නොවී නීතියට අනුව පමණක් රාජකාරි කරන විට අපරාධ අඩු වී ජනතාව අතර ආරක්ෂාව තහවුරු වේ.
නීතිය නිසි ලෙස ක්රියාත්මක වන විට දූෂණය හා අපරාධ බොහෝ දුරට මැඩපැවැත්විය හැකිය. සාමකාමී අවිහිංසාවාදී සමාජ පරිසරයක් නිර්මාණය වූ විට ජනතාවට නොබියව දෛනික ආර්ථික කටයුතුවල නිරත විය හැකියි.
මෙම අවස්ථාවේ දී, රටක ආයෝජනය කිරීමට පෙර, ජාත්යන්තර ආයෝජකයින් පළමුව නීතියේ ආධිපත්යය සහ ඔවුන්ගේ ආයෝජනවල සුරක්ෂිතභාවය පරීක්ෂා කරති. මීට අමතරව, ගෝලීය මූල්ය ආයතන රටකට මූල්ය හෝ ණය ලබා දීමේදී “යහපාලනය” සහ දූෂණ විරෝධී රාමු වැදගත් කොන්දේසියක් බවට පත් කරයි.
ජාත්යන්තර ආයෝජකයින්ට ඔවුන්ගේ කොන්ත්රාත්තු නීත්යානුකූලව ගරු කරන බව සහතික කිරීමට අවශ්යයි. කිසියම් වාණිජ ආරවුල් ඇති වුවහොත්, ප්රාදේශීය උසාවි අපක්ෂපාතී සහ ඉක්මන් විනිශ්චයන් ලබා දෙනු ඇතැයි විශ්වාස කිරීම අවශ්ය වේ. අත්තනෝමතික නීතිවල හදිසි වෙනස්කම් ආයෝජන අවදානමට ලක් කළ හැකි බැවින් ජාත්යන්තර විශ්වාසය සහ දෘශ්යතාව සඳහා ස්ථාවර නීති රාමුවක් අත්යවශ්ය වේ.
හදිසි සහ අත්තනෝමතික නීති මඟින් ආයෝජන අවදානමට ලක් කළ හැකි බැවින් ජාත්යන්තර විශ්වාසය සහ දෘශ්යතාව සඳහා ස්ථාවර නීතිමය රාමුවක් අත්යවශ්ය වේ.
ජාත්යන්තර මූල්ය අරමුදල (IMF) සහ ලෝක බැංකුව (ලෝක බැංකුව) වැනි සංවිධාන රටකට ණය ලබාදීමේදී දූෂණය සහ විනිවිදභාවය මූලික නිර්ණායක බවට පත් කරයි. දූෂිත රටවල පින වැඩක් නැත. නීත්යානුකූල ජාත්යන්තර සමාගම් එහි ආයෝජනය කිරීමට මැලිකමක් දක්වන්නේ අල්ලස් දෙන්නන්ට මනාප සැලකිලි ලැබෙන බැවිනි. මීට අමතරව, දූෂණය ඉහළ මට්ටමක පවතින රටවල, "සැඟවුණු වියදම්" වැඩි වන අතර, ව්යාපාරයක් ලාභදායී ලෙස පවත්වාගෙන යාම දුෂ්කර වේ.
එසේම, ආරක්ෂිත සහ සාමකාමී පරිසරයක් ඇති රටවලට ජාත්යන්තර සංචාරකයින් පැමිණීමට වැඩි ඉඩක් ඇත. එබැවින් ශක්තිමත් නීතිමය රාමුවක් සහ ස්වාධීන අධිකරණයක් නොමැති රටක තාවකාලික ආර්ථික වාසි වැඩි කල් පවතින්නේ නැත. එබැවින් ආර්ථික යහපැවැත්මේ දොරටුව පවතින්නේ නීතියේ ආධිපත්යය තුළ ය.
එබැවින් ජාතික ජන බලවේගයේ මැතිවරණ පොරොන්දුවලට අනුව අධිකරණය, පොලිස් කොමිසම වැනි ස්වාධීන කොමිෂන් සභාවල ස්වාධීනත්වය තහවුරු වෙමින් පවතින අතර ජනතාව තුළ රජය කෙරෙහි දැඩි විශ්වාසයක් පවතී. පසුගිය කාලයේ සිදු වූ දූෂණවලට හා දේශපාලන හා පරිපාලන බල අපයෝජනයන්ට එරෙහිව නීතිමය ක්රියාමාර්ග තීව්ර වන හෙයින් දේශපාලන පළිගැනීම්වලින් තොරව නීතිය තම යුතුකම ඉටු කරනු ඇතැයි ජනතාව තුළ අපේක්ෂාවක් සහ විශ්වාසයක් පවතී.
දේශපාලකයන්ට එරෙහි දූෂණ, බලය අයුතු ලෙස භාවිත කිරීමේ චෝදනා සහ නීතිමය ක්රියාමාර්ග ප්රජාතන්ත්රවාදී පදනම මත ස්වාධීනව ක්රියාත්මක වීමට පටන් ගෙන තිබේ. වැරදි කරුවන් කවුරුන් වුව ද ඔවුන් නීතිය හමුවට පමුණුවා දේශපාලන බලපෑම්වලින් ගැලවීමට කටයුතු නොකළ යුතු බව පොදු මහජන අපේක්ෂාවකි.
මෙම සන්දර්භය තුළ විපක්ෂය හෝ චූදිතයන් තමන්ට එරෙහි නඩු දේශපාලන පළිගැනීම්වලට පෙලඹී ඇති බවට බොහෝ විට තර්ක කිරීම සාමාන්ය දෙයකි. එහෙත් තමන්ට කිසිවක් ඉටු කර ගත නොහැකි බව දැන දැනම විරුද්ධ පක්ෂ දේශපාලනිකව මිනිසුන්ගේ අවධානය වෙනතකට යොමු කර වත්මන් ආණ්ඩුවේ ප්රතිරූපය විනාශ කිරීමට අසත්ය ප්රවෘත්ති සහ සංවිධානාත්මක ප්රචාර භාවිතා කිරීමට පටන් ගෙන තිබේ.
ප්රජාතන්ත්රවාදී ක්රමයක් තුළ ආණ්ඩුවේ අඩුපාඩු පෙන්වා දී බල තුලනය පවත්වා ගැනීම විපක්ෂයේ මූලික කාර්යයයි. නමුත් පවතින දේශපාලන වාතාවරණය තුළ ආණ්ඩුවට එරෙහිව සාධනීය චෝදනා එල්ල කිරීමට විපක්ෂයේ පක්ෂ දඟලමින් සිටී. විධිමත් ප්රතිපත්ති න්යාය පත්ර නොමැතිකම, ජනතාව අතර බලපෑම නැතිවීම, විනිවිද පෙනෙන ආණ්ඩු ක්රියාකාරකම් හේතුවෙන් විපක්ෂයට දැඩි විවේචන සඳහා මාතෘකා සොයමින් තිබේ.
ආණ්ඩුවේ සැලසුම්වලට විකල්පයක් ලෙස නිසි විකල්ප ප්රතිපත්තියක් හෝ ව්යාපෘති සැලැස්මක් ඉදිරිපත් කිරීමට විරුද්ධ පක්ෂ අපොහොසත් වන බවට පළවන මතවලට අමතරව සැබෑ ජනතා ප්රශ්න නොසලකා හරිමින් තාවකාලික දේශපාලන වාසි තකා මාතෘකා පමණක් ගැනීම නිසා ජනතාව අතර ඔවුන්ගේ බලපෑම අඩුවී ඇතැයි විවේචන එල්ල වේ.
ඒ වගේම මන්ත්රීවරුන්ට සභාව තුළ බය නැතිව කතා කරන්න පුළුවන් විදියට පාර්ලිමේන්තු වරප්රසාද ලබාදීලා තියෙනවා. කෙසේ වෙතත්, ඇතැමුන් මෙම වරප්රසාදය භාවිත කරමින් උසාවි විභාග මගහැරීමට හෝ එදිනෙදා පාර්ලිමේන්තු කටයුතුවල කොටසක් ලෙස රජයට එරෙහිව පදනම් විරහිත චෝදනා පතුරුවා හැරීමට යොමු වී ඇත.
එබැවින් රටක ආර්ථිකය ගොඩනැගීමට පෙර එම රටේ ආර්ථික සංවර්ධනය සඳහා නීතිය යුක්තිය හා සමානාත්මතාවය ස්ථාපිත කිරීම මූලිකම අවශ්යතාවය බව සැලකිය යුතුය. අවංක අධිකරණයක්, දූෂණයෙන් තොර පරිපාලනයක් සහ ශක්තිමත් නීතිමය රාමුවක් දේශීය හා විදේශීය ආයෝජකයින්ගේ විශ්වාසය දිනා ගන්නා ප්රධාන සාධක වේ.
එබැවින් වත්මන් ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය (NPP) රජය දූෂණය පිටුදැකීම, අපවාදාත්මක පාලන ක්රම වෙනස් කිරීම සහ පරිපාලන විනිවිදභාවය, නීතියේ ආධිපත්යය සහ යුක්තිය මූලික ප්රතිපත්ති ලෙසින් කටයුතු කරමින් සිටී.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
09-08-2026.
සිංහල පරිවර්තනය සමග) நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்புவதற்கு முன்னர் சட்டமும், நீதியும், சமத்துவமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 09, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 09, 2026
Rating:

கருத்துகள் இல்லை: