Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆடையைக் காரணம் காட்டி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்க விடாமல் தாங்கள் தடுக்கப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு


ஆடையைக் காரணம் காட்டி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்க விடாமல் தாங்கள் தடுக்கப்பட்டமைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட முஸ்லிம் பெண் ஊழியர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் இன்று பிற்பகல் 05 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம்-இன் வழிகாட்டலில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிறி சங்கர் மற்றும் டொக்டர் ரஜீந்தர் ஆகியோரை சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர், வைத்தியசாலையில் சந்தித்து, இவ்விவகாரம் தொடர்பில் பேசியதாக, சட்டத்தரணி முஅஸ்ஸம் கூறுகிறார்.

அதன்போது, இந்த விவகாரத்தை வைத்தியசாலை மட்டத்துக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம் என, சட்டத்தரணிகள் கேட்டிருக்கிறார்கள். 

ஆனால், குறித்த வைத்திய அதிகாரிகள் அதற்கு கடைசிவரை இணங்கவில்லை. 

இதனையடுத்தே, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்விடயத்தை முறையிடுவதென சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் தீர்மானித்தார்கள்.

இதேவேளை, அரசியல்யாப்பின் மூலமும் சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபத்தின் அடைப்படையிலும் தமக்கு வழங்கப்பட்ட ஆடை தொடர்பான அடிப்படை உரிகள் மீறப்பட்டமைக்கு எதிராக, எதிர்வரும் சில நாட்களுக்குள் - பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தாக்கல் செய்யவுள்ளனர்.   


ஆடையைக் காரணம் காட்டி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்க விடாமல் தாங்கள் தடுக்கப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.