Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அரசின் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பான செயலமர்வு.


(ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 18 கிராம சேவகர் பிரிவுக்குமான கிராம அபிவிருத்தி திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று இடம் பெற்றது.


காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிராம அபிவிருத்தி திட்டம் தொடர்பான (VDP - preparation training program) செயலமர்வு இன்று (07/11/2026 சனிக்கிழமை) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.


மேற்படி நிகழ்வில் கிராம சேவகர் பிரிவிற்குமான சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் Community empowerment officer (CEO) பிரஜா சக்தி தலைவர்கள்,
மூலோபாயக் குழு  உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நாடு பூராகவும் பிரஜா சக்தி  ஊடாக அரசின் எதிர்கால அபிவிருத்தி  திட்டம் தொடர்பான விரிவான விளக்கம் இதன் போது வழங்கப்பட்டது.

பிரஜா சக்தியின் "Door to Door" செயற்திட்டம் எதிர்வரும் 21/11/2026 சனிக்கிழமை ஆரம்பிக்க உள்ளதாகவும் 
இதன் போது தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் MAH. ஷிகானா வளவாளராகக் கலந்து கொண்டு பிரஜா சக்தி தொடர்பான அரசின் திட்டங்களை மிகவும் சிறப்பாக கற்பித்தமை குறிப்பிடத்தக்கது.






காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அரசின் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பான செயலமர்வு. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.