பொலிஸ் கடமைகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் முன்னெடுப்பதற்காக 200 புதிய சிங்கிள் கெப் ரக வாகனங்கள் இலங்கை பொலிசுக்கு!
பொலிஸ் கடமைகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் முன்னெடுப்பதற்காக 200 புதிய சிங்கிள் கெப் ரக வாகனங்கள் இலங்கை பொலிசுக்கு!
இலங்கை பொலிசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி, பொலிஸ் நிலையங்களின் கடமைகளைப் பொதுமக்களுக்கு மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் முன்னெடுக்கும் நோக்கில் புதிதாக 200 சிங்கிள் கெப் ரக வாகனங்களைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்காக சுமார் 130 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், இத்திட்டத்தை DIMO நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் DIMO நிறுவனத்தின் முகாமைத்துவத்தினருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது எட்டப்பட்டுள்ளது.
வரி உட்பட ஒரு சிங்கிள் கெப் வாகனத்தின் பெறுமதி சுமார் 56 இலட்சம் ரூபாவாகும். எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்படும் இந்த வாகனங்கள், நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்திற்கொண்டு குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் அவசர பொலிஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் துரிதமாகச் செயற்படுதல், குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
பொலிஸ் கடமைகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் முன்னெடுப்பதற்காக 200 புதிய சிங்கிள் கெப் ரக வாகனங்கள் இலங்கை பொலிசுக்கு!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2026
Rating:




கருத்துகள் இல்லை: