நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 238 கிலோகிராம் கஞ்சா மற்றும் 216,000 போதை மாத்திரைகள் எரித்து அழிப்பு.
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 238 கிலோகிராம் கஞ்சா மற்றும் 216,000 போதை மாத்திரைகள் எரித்து அழிப்பு.
சிலாபம் கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் நிறைவடைந்த வழக்கொன்றுடன் தொடர்புடைய 238 கிலோகிராம் கஞ்சா மற்றும் அப்பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 216,000 தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் ஆகியன 2026.11.06 ஆம் திகதி காலை புத்தளம், வனாத்தவில்லுவ லக்டோவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள எரியூட்டும் உலை மூலம் எரித்து அழிக்கப்பட்டன.
இந்த அழிப்பு நடவடிக்கை சிலாபம் இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் ஐ.பி.ஐ. விமல வீரசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிலாபம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 238 கிலோகிராம் கஞ்சா மற்றும் 216,000 போதை மாத்திரைகள் எரித்து அழிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2026
Rating:



கருத்துகள் இல்லை: