Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

‘ஊடக விருது 2025’ – நிகழ்வில் விருது வென்ற அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


‘ஊடக விருது 2025’ – நிகழ்வில் விருது  வென்ற அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கம் (The Editors' Guild of Sri Lanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) இணைந்து நடத்திய 27ஆவது ‘ஊடக விருது 2025’ (Journalism Awards for Excellence 2025) விருது வழங்கும் விழாவில், விருதுகளையும் தகைமைச் சிறப்பு விருதுகளையும் வென்றெடுத்த எமது அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்களின் எதிர்கால ஊடகப் பணி மேலும் சிறக்கவும், ஊடகத்துறையில் உயர்ந்த இலக்குகளை அடையவும் எமது நல்வாழ்த்துகள். அத்துடன், எமது ஏனைய அங்கத்தவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு எதிர்காலத்தில் இத்தகைய சிறந்த அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற வாழ்த்துகிறோம்.

🏆 சிறந்த செய்தி இணையத்தளம் - தமிழ் (தகைமைச் சிறப்பு இணை விருது) ரிஸ்வான் சேகு முகைதீன் - தினகரன்

🏆சிறந்த சுகாதார மற்றும் மருத்துவச் செய்தி அறிக்கையிடல் (தமிழ்) பாத்திமா ஹுஸ்னா – தினக்குரல்  

🏆சிறந்த பத்தியெழுத்தாளர் – தமிழ் (தகைமைச் சிறப்பு விருது)- ஏ.எம். ரிப்தி அலி – விடிவெள்ளி 

🏆 சமூகப் பிரச்சினைகள் பற்றிய அறிக்கையிடலுக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருது (தகைமைச் சிறப்பு விருது)-உமர் லெப்பை நூருல் ஹுதா – தமிழன்  

🏆 🏆ஆங்கில ஊடகத்திற்கான உபாலி விஜேவர்தன ஆண்டின் சிறந்த   கட்டுரையாளர்  விருது மற்றும் டென்சில் பீரிஸ் ஆண்டின் சிறந்த இளம் ஊடகவியலாளர் விருது- கே. ஏ. எம். ஷபீர் – சண்டே ஒப்சேவர்
‘ஊடக விருது 2025’ – நிகழ்வில் விருது வென்ற அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.