Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறுவர் பாதுகாப்பும் ஊடக அறிக்கையிடலும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் (NCPA) புதிய தேசிய வழிகாட்டடல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.


(எம்.ஐ.அப்துல் நஸாா்)

ஊடகங்களில் சிறுவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை வெளியிடும்போது அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் (NCPA) புதிய தேசிய வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. 


அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் சிறுவர்கள் இடம்பெறும்போது அவர்களின் நலன்களைப் முதன்மைப்படுத்துவதும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.


இந்த வழிகாட்டியானது நான்கு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முதலாவதாக.....

சிறுவர்களின் உச்சக்கட்ட நலன், உண்மைத்தன்மை, கண்ணியம், தனியுரிமை மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ சம்மதம் போன்ற பொதுவான நெறிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


இரண்டாவதாக.....

துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட அல்லது சாட்சிகளாக உள்ள சிறுவர்களைப் பற்றிய செய்தியிடல் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.


மூன்றாவதாக...

சிறுவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் குறித்த பொறுப்புமிக்க செய்தியிடல் பற்றியும், நான்காவதாக, ஊடகப் போட்டிகள், விளம்பரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறுவர்களை இணைத்துக்கொள்வது குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பாதிக்கப்பட்ட அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், முகவரிகள் அல்லது பாடசாலை விபரங்கள் போன்ற அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதற்கு முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், சிறுவர்களின் தற்கொலைச் சம்பவங்களைப் அறிக்கையிடும்போது, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட முறைகள், இடங்கள் அல்லது உருக்கமான காட்சிகளைச் சித்தரிப்பதைத் தவிர்க்குமாறும், தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வை முன்னிலைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் பங்கேற்கும்போது அவர்களின் கல்வி, ஓய்வு மற்றும் மனநலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது முறையான விழிப்புணர்வுடன் உண்மைத்தன்மையைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர்கள், சமூக ஊடகப் படைப்பாளிகள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களையோ அல்லது புகைப்படங்களையோ பகிர்ந்துகொள்ளும்போது இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
சிறுவர் பாதுகாப்பும் ஊடக அறிக்கையிடலும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் (NCPA) புதிய தேசிய வழிகாட்டடல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.