2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான (உள்நாட்டு மொழிகள்) பரீட்சை நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பில்...
2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் பெற்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கான (உள்நாட்டு மொழிகள்) பரீட்சையை 2026 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணையை www.moj.gov.lk என்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்படி பரீட்சைக்காக ஆண்டு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன், 2026.08.31 ஆம் திகதி வரை சிங்களம்/ஆங்கிலம் மற்றும் சிங்களம்/தமிழ் ஆகிய மொழிப் பாடங்களுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்காக இப்பரீட்சை நடாத்தப்படும்.
ஊடகப் பிரிவு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு.
2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான (உள்நாட்டு மொழிகள்) பரீட்சை நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பில்...
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: