யாழ் சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பம்
தேவையான அனைத்து அனுமதிகளும் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன –நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கும் நடவடிக்கைகளும் நிறைவு
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் சான்றிதழ்களும் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மைதானத்தின் அடுத்தகட்ட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான ஒப்பந்தங்களை வழங்கும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மைதானத்தின் தற்போதைய நிலைமை மற்றும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று (08) மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் இடத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2026
Rating:

கருத்துகள் இல்லை: