Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அது குறித்து எமக்கு அறியத்தாருங்கள் பிரதமர் தெரிவிப்பு


"2022 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்...
இதன்போது, ஒரே விண்ணப்பதாரருக்கு மாகாணப் பாடசாலைகள், தேசியப் பாடசாலைகள் என்ற அடிப்படையிலும், பல பாடங்களின் அடிப்படையிலும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதனால், தெரிவுச் செயற்பாடு சற்றுச் சிக்கலானதாக உள்ளது. அந்தத் தெரிவுகளுக்கு அமைய, வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு இரண்டாவது கட்டமாக நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த நேர்முகப் பரீட்சைகளின்போது சித்தியடைந்த மாற்றுத்திறனாளிகளை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை தொடர்பில், நேர்முகப் பரீட்சை நடத்துநர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அது குறித்து எமக்கு அறியத்தாருங்கள்.


ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் முன்னெடுப்பதற்கு நாம் உச்சக்கட்டத் தலையீடுகளைச் செய்வோம்."


பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தலையீட்டில், பார்வைக் குறைபாடுடைய பட்டதாரிகளுடன் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அது குறித்து எமக்கு அறியத்தாருங்கள் பிரதமர் தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.