காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பெற்றோர் சமூகத்தால் அதிகாரிகள் கௌரவிப்பு.
(ஊடவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் மாணவர்களின் பெற்றோர்களால் அதிபர் மற்றும் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வு அண்மையில் காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் (CocurricularActivities)
தங்களின் மாணவ செல்வங்களை உற்சாகப்படுத்தி, பல அடைவுகளுக்கு காரண கர்த்தாவாக செயற்பட்டு வரும் வித்தியாலயத்தின் அதிபர் MRM. ரபீக் SLPS, காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர், லெப்டினன் NM.முஹம்மட் ஸாலிஹ் (SLEAS) சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர்,SLHM.இனாமுல்லா, உதவி மாவட்ட ஆணையாளர் NMM. பாயிஸ் ஆகியோர் பெற்றோர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பெற்றோர் சமூகத்தால் அதிகாரிகள் கௌரவிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 14, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 14, 2026
Rating:




கருத்துகள் இல்லை: