Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய மக்கள் சக்தியின் பிரஜசக்தி' தேசிய வறுமை ஒழிப்பு இயக்கம் கிராமிய அபிவிருத்தி திட்டத்தினைப் புதுப்பித்தல் - 2027 மக்கள் சந்திப்பு இன்று இடம் பெற்றது.


(ஊடவியலாளர் 
ஏ.எல்.டீன் பைரூஸ்)

தேசிய மக்கள் சக்தியின் பிரஜசக்தி' தேசிய வறுமை ஒழிப்பு இயக்கம் கிராமிய அபிவிருத்தி திட்டத்தினைப் புதுப்பித்தல் - 2027மக்கள் சந்திப்பு இன்று இடம் பெற்றது.


தேசிய மக்கள் சக்தியின் பிரஜசக்தி' தேசிய வறுமை ஒழிப்பு இயக்கம் கிராமிய அபிவிருத்தி திட்டத்தினைப் புதுப்பித்தல் - 2027 மக்கள் சந்திப்பு 167/B  கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பல் நோக்கு கட்டிடத்தில் இன்று 14/11/2026  சனிக்கிழமை காலை இடம் பெற்றது.


கிராமிய அபிவிருத்தி திட்டம் (VDP- Plane) தயாரிப்பதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க பிரதேச செயலாளர் (DS) மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் (DDP) ஆகியோரின்  வழிகாட்டலுடன்  176/B கிராம சேவகர் பிரிவின் பிரஜா சக்தி தலைவர் அல்ஹாபிழ்.MCM.மன்சூர் தலைமையில் பிரிவின் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் A.L.கலீல்தீன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது...


இதன் போது பிரிவின் கிராம உத்தியோகஸ்தர் பாத்திமா மபாசா சுல்பிகர் அலி, சமூர்த்தி உத்தியோகஸ்தர், பிரஜா சக்தி உறுப்பினர்கள்,பாடசாலையின் அதிபர்கள், பள்ளிவாயல் தலைவர்,உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



176/B கிராம சேவகர் பிரிவின் பிரஜா சக்தி தலைவர் அல்ஹாபிழ். MCM.மன்சூர் உரையாற்றுகையில் எதிர்வரும் காலங்கள் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி திட்டங்கள், கிராமிய அபிவிருத்தி என அனைத்தும்
பிரஜசக்தி' எனும் தேசிய வறுமை ஒழிப்பு இயக்கம் ஊடாகவே இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும்  எதிர்வரும் 21/11/2026 சனிக்கிழமை நாடு பூராவும் இடம் பெறவுள்ள "Door to Door" (skills programme) சம்பந்தமாக காத்தான்குடி பிரதேச செயலகம் திறன் அபிவிருத்தி  உத்தியோகத்தர் Mr.K.சுரேந்திரன் அவர்களால் இது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.


இறுதியாக கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் 2027 க்கான  முன்மொழிவுகள் எடுக்கப்பட்டனஎன்பதும் குறிப்பிடத்தக்கது.



தேசிய மக்கள் சக்தியின் பிரஜசக்தி' தேசிய வறுமை ஒழிப்பு இயக்கம் கிராமிய அபிவிருத்தி திட்டத்தினைப் புதுப்பித்தல் - 2027 மக்கள் சந்திப்பு இன்று இடம் பெற்றது. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.