Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை மிகவும் நேர்மையாகவும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் – ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு.


பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை மிகவும் நேர்மையாகவும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் – ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு.



வெளிநாட்டு ஊடகங்களில் இலங்கையில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பங்கள் குறித்தும், ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவை (A.I) பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஊடகவியலாளர்களிடையே அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் செயலமர்வு 2026.11.19 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதான வளவாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டமாணி எப்.யூ. வுட்லர் அவர்கள், தற்போது வெறுமனே மக்களின் கவனத்தை ஈர்ப்பதையும் போட்டித்தன்மையையும் நோக்கமாகக் கொண்டு சில சமூக ஊடகப் பக்கங்களும் சில இலத்திரனியல் ஊடகங்களும் ஊடக ஒழுக்க விதிமுறைகளுக்கு முரணான வகையில் செய்திகள் மற்றும் போலிச் செய்திகளைப் பொதுமக்கள் மத்தியில் பரப்புவதால் ஏற்படும் குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.


இச் செயலமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட பிரான்ஸ் செய்தி நிறுவனமான Agence France-Presse (AFP) நிறுவனத்தின் இலங்கைக்கான கொழும்பு அலுவலகப் பிரதானி (Bureau Chief) அமல் ஜயசிங்க அவர்கள், தவறான தகவல்கள் சர்வதேச சமூகத்தினரிடையே பரப்பப்படுவதால் இலங்கையின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.


அத்துடன், இந்த நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளரும் டிஜிட்டல் ஊடகத்துறை நிபுணருமான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ அவர்கள், செயற்கை நுண்ணறிவை (A.I) பயன்படுத்துவதன் மூலம் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இலகுவாக முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.


இச் செயலமர்வில் பொலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரிகள், இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல சுயாதீன ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.



වගකිව යුතු ජනමාධ්‍යවේදීන් තොරතුරු සමාජගතකිරීමේ කාර්යය වඩාත් සුපිළිපන් ලෙස ඉටුකිරීමට කටයුතු කළ යුතුයි - මාධ්‍යවේදීන් දැනුවත් කළ වැඩමුළුවක්


විදෙස් මාධ්‍ය තුළ මෙරට ආන්දෝලනාත්මක සිද්ධීන් පිළිබඳව නිරවද්‍ය නොවන තොරතුරු වාර්තාකළ අවස්ථා පිළිබඳව මෙන්ම මාධ්‍යකරණයේදී කෘතිම බුද්ධිය (A.I) භාවිතයට ගැනීමේ හැකියාව පිළීබඳව අත්දැකීම් සහ අදහස් මාධ්‍යවේදීන් අතර හුවමාරුකරගැනීම සඳහා රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව විසින් සංවිධානය කළ එක් දින වැඩමුළුවක් 2026.11.19 වන දින රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේදී පැවැත්වුනි.


පොලිස් මාධ්‍ය කොට්ඨාසයේ අධ්‍යක්ෂ, පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක නීතිවේදී එෆ්.යූ වුට්ලර් මහතා මෙම අවස්ථාව සඳහා ප්‍රධාන සම්පත් දායකයෙකු ලෙස සහභාගී වෙමින් වර්තමානයේදී හුදෙක් ආකර්ශනය සහ තරඟකාරීත්වය වෙනුවෙන් ඇතැම් සමාජ මාධ්‍ය පිටු සහ ඇතැම් විද්‍යුත් මාධ්‍ය, මාධ්‍ය ආචාර ධර්මවලට පටහැනි අයුරින් පුවත්/ව්‍යාජ පුවත් සමාජගතකිරීමෙන් ඇතිවන කෙටි කාලීන සහ දීර්ඝ කාලීන ගැටළු සම්බන්ධව මාධ්‍යවේදීන් වෙත කරුණු පැහැදිලි කළේය.


මෙම වැඩමුළුවට දේශකයෙකු ලෙසින් සහභාගී වූ ප්‍රංශ පුවත් සේවයක් වන Agence France-Presse (AFP) ආයතනයේ ශ්‍රී ලංකාවේ කොළඹ කාර්යාංශ ප්‍රධානී (Bureau Chief) අමල් ජයසිංහ මහතා විසින් අසත්‍ය තොරතුරු ජාත්‍යන්තර ප්‍රජාව අතර ප්‍රචාරය වීමෙන් මෙරට සංචාරක ක්ෂේත්‍රය ඇතුළු ක්ෂේත්‍ර ගණනාවක අභිවෘද්ධියට සිදුවන බලපෑම සම්බන්ධයෙන් කරුණු රැසක් ඉදිරිපත්කළ අතර දේශකයෙකු ලෙස මෙම අවස්ථාවට සහභාගී වූ ශ්‍රී ලාංකික පර්යේෂකයකු මෙන්ම ඩිජිටල් මාධ්‍ය විශේෂඥයකු වන ආචාර්ය සංජන හත්තොටුව  මහතා විසින් කෘතිම බුද්ධිය (A.I) භාවිතයෙන් මාධ්‍යවේදීන්ගේ කාර්යභාරය වඩාත් පහසුවෙන් වර්තමානයේදී  සිදුකරගැනීමේ හැකියාව පිළිබඳ දැනුම පැමිණ සිටි මාධ්‍යවේදීන් වෙත සවිස්තරව පැහැදිලි කරන ලදී.




පොලිස් මාධ්‍ය කොට්ඨාසයේ නිලධරයන් සහ නාවුක හමුදාවේ මාධ්‍ය ඒ්කකයේ නිලධරයන් ඇතුළු ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදීන්, ස්වාධීන මාධ්‍යවේදීන් කිහිපදෙනෙකු මෙම වැඩමුළුව සඳහා සහභාගී වී සිටියහ.

 Police Media.


பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை மிகவும் நேர்மையாகவும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் – ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.