Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) மாலைகளின் எண்ணிக்கையா, மக்கள் மனங்களை வெல்லும் பண்பாடா? - அக்கரைப்பற்று மத்திய கல்லூரி 80 ஆவது ஆண்டு விழாவும் புதிய அரசியல் மாற்றமும்!



கல்விசார் மேடைகளில் அரசியல் அந்தஸ்தையும் மாலைகளின் எண்ணிக்கையையும் தேடும் பழைய கலாச்சாரம், தற்கால புதிய அரசியல் மாற்றத்திற்கு முன்னால் பின்னடைவைச் சந்திக்கிறது. அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80 ஆவது ஆண்டு விழா சொல்லும் அரசியல் மற்றும் சமூகப் பாடம்!

ஆடம்பர வரவேற்புகளையும் அதிகாரப் போட்டிகளையும் தாண்டி, மக்களை மதிக்கும் பணிவும் அரசியல் நாகரிகமுமே ஒரு தலைவனின் உண்மையான உயரத்தைத் தீர்மானிக்கின்றன. பணபலத்தைவிடக் கல்வியும் பண்பாடும் மனிதனை உயர்த்தும் என்ற உன்னத உண்மையை இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலச் சந்ததிக்குச் சுட்டிக்காட்டுகின்றன.


அரசியலில் மாற்றம் என்பது ஆட்சியாளர்கள் மாறுவதோ, அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவதோ மட்டுமல்ல. மக்களை அணுகும் விதம், பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்படும் பண்பாடு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம், கல்விக்கும் சமூகத்திற்கும் வழங்கப்படும் மரியாதை என அனைத்திலும் மாற்றம் ஏற்படும்போதுதான் உண்மையான அரசியல் மறுமலர்ச்சி உருவாகிறது. 

அந்த வகையில், கடந்த 2026 நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா, இலங்கையின் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கும் புதிய அரசியல் அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பேசுவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக மாறியுள்ளது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதாஉல்லா கேட்போர் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இவ்விழாவில், இலங்கைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் திருமதி ஏ.எல். நஸீபா இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் உரையாற்றியதுடன், தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். 


பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, முத்துரத்வத்த, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எட்டு தசாப்தகால கல்விப் பயணத்தையும், வரலாற்றுச் சாதனைகளையும், சமூகப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரலாற்று விழாவில், நாட்டின் பெண் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தது. 

குறிப்பாக, கல்லூரியின் வரலாற்றில் முதல் பெண் அதிபராக திருமதி நஸீபா இக்பால் பொறுப்பேற்ற பின்னணியில், நாட்டின் பெண் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஒருவர் குறித்த விழாவில் கலந்துகொண்டமை கல்வி, பெண்களின் தலைமைத்துவம் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றை ஒரே மேடையில் பிரதிபலிக்கும் அடையாளமாகவும் அமைந்தது.

எனினும், இவ்விழாவுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விடயம் பாடசாலையின் கல்விச் சாதனைகளோ, மாணவர்களின் வெற்றிகளோ, பிரதமரின் வருகையோ அல்ல. மாறாக, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு அணிவிக்கப்பட்ட அதிகளவான மாலைகளே விவாதப் பொருளாக மாறியுள்ளன. 

பிரதமருக்கும் ஏனைய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தலா ஒரு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான அதாஉல்லாவுக்கு மட்டும் பல மாலைகள் அணிவிக்கப்பட்டமை தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்பி அதற்கான தகுந்த விடையினை தேடும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர். 

இதற்கு ஆதரவாக அதாஉல்லாவின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. அக்கரைப்பற்று என்றால் அது ஏ.எல்.எம். அதாஉல்லாதான் என்றும், பாடசாலையின் கேட்போர் கூடம் உள்ளிட்ட பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாகவே இவ்வாறான வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

ஒருவரின் கடந்தகாலப் பங்களிப்புகளை நினைவுகூருவதும், அவருக்கு நன்றியுணர்வுடன் மரியாதை செலுத்துவதும் தவறானதல்ல. ஆனால், அந்த மரியாதை எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த அளவில், எவ்வாறான அரசியல் பண்பாட்டுடன் வெளிப்படுத்தப்படுகிறது என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வியாகும்.


அக்கரைப்பற்றுக்கெனத் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ இல்லாத சூழ்நிலையில், ஒரு பாடசாலையின் 80 ஆவது ஆண்டு விழாவுக்காக நாட்டின் பிரதமர் நேரில் வருகை தந்தமை பழைய அரசியல் நடைமுறைகளிலிருந்து மாறுபட்ட ஒரு முக்கியமான அரசியல் அணுகுமுறையாகும். 

அதிகாரம், பதவி, அரசியல் பேரம்பேசல் ஆகியவற்றைத் தாண்டி மக்களை நேரடியாகச் சந்திப்பதும், அவர்களது கல்வி மற்றும் சமூகத் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.

இதற்குப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், ஜே.வி.பி. தலைமையிலான அரசியல் இயக்கத்திற்கும், அக்கரைப்பற்று ஜே.வி.பி. தோழர்களுக்கும், குறிப்பாகத் தோழர் ரமேஷ் மற்றும் தோழர் ஷாஹித் ஆகியோருக்கும் முக்கிய பங்குள்ளதாகப் பிரதேசத்தில் பேசப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

அக்கரைப்பற்றின் அரசியல் வரலாற்றில் இதுவரை ஒரு பாடசாலை நிகழ்வில் பிரதமர் ஒருவர் இவ்வாறு நேரடியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய மக்கள் அணுகுமுறையும், கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும், அரசியல் அதிகாரத்தை மக்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்பாகப் பார்க்கும் சிந்தனையும் புதிய தலைமுறையினரிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. 

இந்த மாற்றத்தை விரும்பாதவர்களுக்கும், மீண்டும் பழைய அரசியல் கலாச்சாரத்தை நிலைநாட்ட நினைப்பவர்களுக்கும் இவ்வாறான நிகழ்வுகளானது அரசியல் ஆதங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதும் பொதுவாகச் சிந்திக்கும் மக்களால் முன்வைக்கப்படும் கருத்தாகும்.ஆனால், இங்கு எழுப்பப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான கேள்வி, அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட ஒருவர் தனது அனுபவத்திற்கேற்ற அரசியல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டாமா என்பதாகும்.

ஒரு பாடசாலை நிகழ்வில் நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும் வரவேற்பு, மரியாதை மற்றும் கௌரவத்தைவிடத் தனக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடப்பது உண்மையிலேயே கவலைக்குரியது. மாலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு ஒருவருடைய அரசியல் அந்தஸ்தை அளவிட முடியாது. மக்கள் வழங்கும் நம்பிக்கையும், சமூகத்திற்குச் செய்த சேவையும், அதிகாரத்தில் இருக்கும்போதும் இல்லாதபோதும் வெளிப்படுத்தும் பணிவுமே ஒருவரின் உண்மையான அரசியல் உயரத்தைத் தீர்மானிக்கின்றன.


கடந்த காலத்தில் பிரதமரை முன்னிறுத்தியே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தவர்கள் இன்று இறைவனின் நாட்டத்தினால் பிரதமராகியுள்ளார்கள் என்ற கருத்தை அதாஉல்லா வெளிப்படுத்தியதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் அரசியலில் எதுவுமே நிரந்தரமல்ல என்பதை அரசியல் வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு காலத்தில் அரசியல் அதிகாரத்தின் மையத்தில் இருந்தவர்களின் நிலையும் காலப்போக்கில் மாறுகின்ற விடயமாகின்றமையினை கண்கூடாக பார்க்கின்றோம்.

இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவரது அரசியல் சிஷ்யராகக் கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமான்லெப்பே மேலிடத்தில் அமர்ந்திருக்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநகர சபை முதல்வருமான அதாஉல்லா கீழே அமர்ந்திருக்கும் காட்சியும் அரசியலில் பதவிகளும் அதிகாரங்களும் எவ்வளவு நிலையற்றவை என்பதை நினைவூட்டுகின்றது. இதனையும் இறைவனின் நாட்டத்தையும் காலத்தின் மாற்றத்தையும் உணர்த்தும் ஓர் அரசியல் பாடமாகவே பார்க்க வேண்டும்.

இங்கு நாம் மறந்துவிடக் கூடாத உண்மை என்னவென்றால், அரசியல் என்பது தனிமனிதர்களின் கௌரவப் போட்டியல்ல; அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பொதுச் சேவையாகும். குறிப்பாக, மாணவர்களும் இளைஞர்களும் முன்னிலையில் நடைபெறும் கல்வி நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள் தங்களது பணிவையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்த வேண்டிய இடங்களாகும். 

அங்கு மாலைகளின் எண்ணிக்கை, அமரும் இடங்களின் முக்கியத்துவம், அல்லது யார் யாருக்கு அருகில் அமர்வது போன்ற விடயங்கள் விவாதப் பொருளாக மாறுவது கல்வி நிகழ்வின் உண்மையான நோக்கத்தையே பின்னுக்குத் தள்ளிவிடுகின்றது.

இதில் முக்கியமான ஒன்றாக, பாடசாலையைப் பார்வையிட பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ வந்த நேரம், மண்டபத்தில் இருந்த அக்கரைப்பற்று மேயரின் புகைப்படத்தைக் காட்டி ‘ இதை நாங்கள் அகற்றவா என்று கேட்டார்’ ஆசிரியர் ஒருவர். அதற்கு வஸந்த அவர்கள்’ இந்தக் கட்டடத்தை அவர் கட்டி இருக்கிறார்.

ஆனால், புகைப்படம் வைக்கக் கூடாது என்று அமைச்சரவைத் தீர்மானம் வரும் வரைக்கும் நாம் இதை விட்டு விடுவோம் என்று கூறிவிட்டார். ‘ஆம் அதை அகற்றுங்கள் என்றிருந்தால்,விழா இடம்பெற்ற அன்னு மேயரின் புகைப்படம் அங்கு இருந்திருக்காது’.ஆனால் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பண்பாடே மூக்கியம்  என்பதற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ நடந்து கொண்ட விதம் சிறந்த முன்மாதிரியாகும்.

சிரேஷ்ட அரசியல்வாதி என்பவர் அதிகமான மாலைகளால் அலங்கரிக்கப்படுபவர் அல்ல. அதிகமான அரசியல் அனுபவங்களுக்குப் பின்னரும் பணிவுடன் நடந்துகொள்ளத் தெரிந்தவரே உண்மையான அரசியல் முதிர்ச்சியைக் கொண்டவர். வயதும் அனுபவமும் ஒருவரை முதிர்ச்சியடையச் செய்யலாம். ஆனால் பணிவும் நாகரிகமும் இல்லாதபோது அந்த அனுபவத்தின் மதிப்பே கேள்விக்குறியாகிவிடுகின்றது.

தனது அனுபவத்தின் மூலம் எதிர்காலச் சந்ததியினருக்கு அறிவையும் தூய அரசியல் கலாச்சாரத்தையும் வழங்க முடியாத ஒருவர், தனது சமூகத்தை எவ்வாறு சகோதர சமூகங்களுடன் இன நல்லிணக்கத்தின் பாதையில் வழிநடத்த முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

மாலைகளின் எண்ணிக்கையில் தங்களது அந்தஸ்தைத் தேடும் மனப்பான்மை, பழைய அரசியல் கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அந்தத் தன்மையைத் தேசிய அரசியல் கலாச்சாரமாக்கிய தருணமாக குறித்த நிகழ்வு அமைந்துவிட்டதா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகின்றது. 

வக்கிரப் புத்திக்கு உதாரணம் சொல்ல மாலைகளே போதுமானவை என்ற கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களின் அடிப்படையில் தனிநபர்களை அவமதிப்பது நோக்கமல்ல; மாறாக, பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்பட வேண்டிய அரசியல் பண்பாடு குறித்த சமூகத்தின் எதிர்பார்ப்பை வலியுறுத்துவதே அவசியமாகும்.

இதேவேளை, இந்நிகழ்வில் அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு பிரதமருக்கு அருகில் யார் அமர்வது என்ற போட்டியும் சர்ச்சையும் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பணபலமோ அரசியல் பலமோ இல்லாத ஓர் ஏழைத் தாயின் மகனுக்குப் பிரதமருக்கு அருகில் அமர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை கல்வியின் உண்மையான மகிமையை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்ததாகவும் பேசப்படுகின்றது.

ஒருவரின் குடும்பப் பின்னணியோ, பொருளாதார வசதியோ, அரசியல் செல்வாக்கோ ஒருவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியதல்ல. மாறாக, கல்வியும், திறமையும், பன்பாடு மட்டுமே உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்சென்று மக்களின் உள்ளங்களில்லபதிய வைக்கும் என்பது புதிய மாற்றத்தை நோக்கிய இலங்கையின் அடிப்படைச் சிந்தனையாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் ஓர் ஊரின் தலையெழுத்தைத் தங்களது தனிப்பட்ட விருப்பங்களாலும் அதிகாரப் போட்டிகளாலும் தீர்மானிக்க நினைத்தால் அங்கு குழப்பமும் கூச்சலுமே மிஞ்சும். ஆனால் கல்வி, சமத்துவம், சமூக நீதி, இன நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றை முன்னிறுத்தும் அரசியல் சிந்தனையே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றக் கூடியது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80 ஆவது ஆண்டு விழா, மாணவர்களின் சாதனைகளையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்த வேண்டிய நிகழ்வாக இருந்தது. அது மாலைகளின் எண்ணிக்கையையும் அரசியல் அந்தஸ்துக்கான போட்டியையும் விவாதிக்கும் நிகழ்வாக மாறியிருப்பது நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய விடயமாகும்.

தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் அரசியல் மாற்றம் என்பது வெறுமனே ஆட்சியில் புதிய முகங்களைக் கொண்டுவருவது அல்ல. பழைய அதிகார மனப்பான்மையை மாற்றி, மக்களை மதிக்கும் பண்பாட்டையும், பதவியைச் சலுகையாக அல்லாமல் பொறுப்பாகக் கருதும் சிந்தனையையும், கல்வியை அரசியல் செல்வாக்குக்கு மேலாக மதிக்கும் சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குவதாகும். அந்த மாற்றத்தை மாணவர்களும் இளைஞர்களும் தங்களது வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, ஒரு தலைவருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் சில மணிநேரங்களில் வாடிவிடும். ஆனால் அவர் வெளிப்படுத்தும் பணிவும், மக்களுக்குச் செய்த சேவையும், எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் முன்மாதிரியும் வரலாற்றில் நிலைத்திருக்கும். 

எனவே, அரசியலில் மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்துடன் முடிந்துவிடக் கூடாது; அரசியல் கலாச்சாரமும் மாற வேண்டும். அது மாலைகளின் எண்ணிக்கையால் அல்ல, மக்களின் மனங்களில் பெற்றிருக்கும் இடத்தினால் அரசியல் தலைவர்கள் மதிப்பிடப்படும் புதிய இலங்கையை உருவாக்குவதே காலத்தின் கட்டாயமாகும்!

அஹமட் இர்ஷாட்
தினகரன் பத்திரிக்கு எழுதிய கட்டுரைக்கான மேலதீக விளக்கம்,
20-11-2026.

මල්මාලා ගණනද, නැතිනම් ජන හදවත් දිනාගන්නා සංස්කෘතියක්ද? - අක්කරපත්තු මධ්‍ය මහා විද්‍යාලයේ 80 වැනි සංවත්සරය සහ නව දේශපාලන වෙනස!

දේශපාලන තරාතිරම සොයා යන පැරණි සංස්කෘතිය සහ ශාස්ත්‍රීය වේදිකාවල මල්මාලා ගණන වර්තමාන නව දේශපාලන පරිවර්තනයට පෙර පසුබෑමකට ලක්ව ඇත. අක්කරෙයිපත්තු මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලයේ 80 වැනි සංවත්සර උත්සවයෙන් කියාදෙන දේශපාලන හා සමාජීය පාඩම මෙයයි!

උත්කර්ෂවත් පිළිගැනීම් සහ බල අරගලවලින් ඔබ්බට, නායකයෙකුගේ සැබෑ උස තීරණය කරන්නේ මිනිසුන්ට ගරු කරන නිහතමානිකම සහ දේශපාලන ශිෂ්ටත්වයයි. මූල්‍ය බලයට වඩා අධ්‍යාපනය සහ සංස්කෘතිය පුද්ගලයෙකු උසස් කරයි යන උතුම් සත්‍යය මෙවැනි සිදුවීම් අනාගත පරපුරට පෙන්වා දෙයි.
+++++++++++++++++++

දේශපාලනයේ වෙනසක් යනු පාලකයන් වෙනස් වීම හෝ බලයේ සිටින අය වෙනස් වීම පමණක් නොවේ. සැබෑ දේශපාලන පුනරුදයක් මතුවන්නේ මිනිසුන් ළං වන ආකාරය, පොදු උත්සවවලදී ප්‍රදර්ශනය කරන හැසිරීම්, බලය ක්‍රියාත්මක වන ආකාරය සහ අධ්‍යාපනයට සහ සමාජයට දෙන ගෞරවය යන සෑම දෙයකම වෙනසක් සිදු වූ විට පමණි.

ඒ අනුව බලන කල, 2026 නොවැම්බර් 15 වැනි දින පැවති අක්කරෙයිපත්තු මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලයේ 80 වැනි සංවත්සර උත්සවය ශ්‍රී ලංකාවේ පැරණි දේශපාලන සංස්කෘතිය සහ නව දේශපාලන ප්‍රවේශයක් අතර ඇති වෙනස්කම් සාකච්ඡා කිරීමට වැදගත් අවස්ථාවක් බවට පත්ව ඇත.

අක්කරපත්තුව මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලයේ අතාවුල්ලා ශ්‍රවණාගාරයේදී ඉරිදා පෙරවරු 11.00 ට පමණ පැවති මෙම උත්සවයේ ප්‍රධාන ආරාධිතයා ලෙස ශ්‍රී ලංකා අග්‍රාමාත්‍ය හා අධ්‍යාපන අමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය සහභාගී විය. පාසලේ විදුහල්පතිනි ඒ.එල්.නසීබා ඉක්බාල් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම උත්සවයේදී අග්‍රාමාත්‍යවරයා විසින් ජාතික මට්ටමේ තරඟවලින් ජයග්‍රහණ ලැබූ සිසුන් සඳහා පදක්කම් සහ සහතිකපත් ප්‍රදානය කිරීමද සිදු කරන ලදී.

නියෝජ්‍ය අමාත්‍ය වසන්ත පියතිස්ස, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන අබුබකර් අඩම්බාව, මුතුරත්වත්ත, අක්කරපත්තුව මහ නගර සභාවේ නගරාධිපති සහ හිටපු අමාත්‍ය ඒ.එල්. එම්. අතාවුල්ලා, අම්පාර දිස්ත්‍රික් දිසාපති අනුපමා මංගල වික්‍රමාරච්චි ඇතුළු දේශපාලන ප්‍රභූහු සහ අධ්‍යාපන නිලධාරීහු ද මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

දශක අටක අධ්‍යාපන චාරිකාව, ඓතිහාසික ජයග්‍රහණ සහ සමාජ මෙහෙවර සැමරීම සඳහා සංවිධානය කරන ලද මෙම ඓතිහාසික උත්සවයේ ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස මෙරට අග්‍රාමාත්‍යවරිය සහ අධ්‍යාපන අමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය පැමිණීම විශේෂත්වයක් විය.

විශේෂයෙන්ම, නසීබා ඉක්බාල් මහත්මිය විද්‍යාල ඉතිහාසයේ පළමු විදුහල්පතිනිය ලෙස වැඩ භාරගත් පසුබිමක, රටේ අගමැතිනිය සහ අධ්‍යාපන ඇමතිවරියගේ උත්සවයට පැමිණීම අධ්‍යාපනය, කාන්තා නායකත්වය සහ සමාජ පරිවර්තනය එකම වේදිකාවක පිළිබිඹු කරන සංකේතයක් විය.

කෙසේ වෙතත්, මෙම සිදුවීමෙන් පසු සමාජ මාධ්‍ය තුළ වඩාත් පුළුල් ලෙස කතාබහට ලක්වූ කාරණය වූයේ පාසලේ අධ්‍යයන ජයග්‍රහණ, සිසුන්ගේ ජයග්‍රහණ හෝ අගමැතිතුමාගේ සංචාරය නොවේ. ඒ වෙනුවට අක්කරපත්තුව මහ නගර සභාවේ නගරාධිපති ඒ.එල්.එම්.ට පිරිනැමූ මල්මාලා විශාල ප්‍රමාණයක්. අතාවුල්ලා සාකච්ඡාවට බඳුන් වී ඇත.

මෙය සනාථ කරමින් අටහුල්ලාගේ ආධාරකරුවන් ඉදිරිපත් කරන තර්ක ද අවධානයට ලක්විය යුතුය. අක්කරපත්තුව කියන්නේ ඒ.එල්.එම්. අටාහුල්ලා මහතා, පාසල් ශ්‍රවණාගාරය ඇතුළු ප්‍රදේශයේ විවිධ සංවර්ධන කටයුතු සඳහා ඔහු කළ දායකත්වය නිසා මෙවැනි පිළිගැනීමක් ලැබුණු බවත්ය.

පුද්ගලයෙකුගේ අතීත දායකත්වයන් සිහිපත් කිරීම සහ ඔවුන්ට කෘතවේදීව උපහාර දැක්වීම වරදක් නොවේ. කෙසේ වෙතත්, මෙහි වැදගත් ප්‍රශ්නය වන්නේ එම ගෞරවය ප්‍රකාශ වන්නේ කුමන සන්දර්භයක, කුමන ප්‍රමාණයකට සහ කුමන ආකාරයේ දේශපාලන සංස්කෘතියක් සමඟද යන්නයි.

අක්කරපත්තුවට දැනට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයකු හෝ ඇමැතිවරයකු නොමැති තත්ත්වයක් තුළ පාසලක 80 වැනි සංවත්සර උත්සවයට රටේ අගමැතිවරයා පෞද්ගලිකව පැමිණීම පැරණි දේශපාලන භාවිතයන්ගෙන් වෙනස් වූ වැදගත් දේශපාලන ප්‍රවේශයකි.

බලය, නිලය, දේශපාලන කේවල් කිරීම්වලින් ඔබ්බට ගොස් සෘජුවම ජනතාව හමුවෙමින් ඔවුන්ගේ අධ්‍යාපනික හා සමාජීය අවශ්‍යතාවලට මුල්තැන දෙමින් මහජන විමුක්ති පෙරමුණ ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවේ නව දේශපාලන ප්‍රවේශය පිළිබිඹු කරයි.

ජනතා විමුක්ති පෙරමුණ ප්‍රමුඛ දේශපාලන ව්‍යාපාරය වන අගමැති හරිනි අමරසූරිය සහ අක්කරපත්තුවේ ජනතා විමුක්ති පෙරමුණේ සහෝදරවරුන් ප්‍රමුඛ රමේෂ් සහෝදරයා සහ ෂාහිඩ් සහෝදරයා මේ සඳහා වැදගත් කාර්යභාරයක් ඉටු කර ඇති බව ද කලාපයේ කතාබහට ලක්ව තිබේ.

අක්කරෙයිපත්තුවේ දේශපාලන ඉතිහාසයේ පළමු වතාවට අගමැතිවරයකු පාසලක උත්සවයකට මේ ආකාරයෙන් සෘජුව සහභාගි වී තිබීම විශේෂත්වයකි. එවැනි ජනතාවාදී ප්‍රවේශයක්, අධ්‍යාපනයට ලබා දී ඇති වැදගත්කම සහ දේශපාලන බලය ජනතාවට සේවය කිරීම වගකීමක් ලෙස සලකන මානසිකත්වය තරුණ පරම්පරාව තුළ නව බලාපොරොත්තුවක් ඇති කරයි.

මේ වෙනසට අකමැති අය සහ පැරණි දේශපාලන සංස්කෘතිය යළි ස්ථාපිත කිරීමට බලාපොරොත්තු වන පිරිස් අතර මෙවැනි සිදුවීම් දේශපාලන අමනාපයක් ඇති කිරීමට හේතු විය හැකි බව කල්පනාකාරී මිනිසුන්ගේ පොදුවේ තර්කයකි. කෙසේ වෙතත් මෙහිදී මතුවිය යුතු තවත් වැදගත් ප්‍රශ්නයක් නම් දේශපාලනයේ වසර ගණනාවක් පළපුරුද්දක් ඇති අයෙකු එම අත්දැකීමට උචිත දේශපාලන සභ්‍යත්වය සහ සංස්කෘතිය ප්‍රදර්ශනය නොකළ යුතුද යන්නයි.

පාසල් උත්සවයකදී රටේ අගමැතිවරයාට ලැබෙන පිළිගැනීමට, ගෞරවයට හා ගෞරවයට වඩා තමාට වැඩි වැදගත්කමක් දිය යුතු බවට හැඟීමක් ඇති වන ආකාරයෙන් හැසිරෙන විට එය ඇත්තෙන්ම කනස්සල්ලට කරුණකි. මල්මාලා ගණනින් පුද්ගලයකුගේ දේශපාලන මට්ටම මනින්න බැහැ. ජනතාව විසින් ලබා දෙන විශ්වාසය, සමාජයට කරන සේවය සහ බලයෙන් සහ බලයෙන් බැහැරව දක්වන නිහතමානිකම කෙනෙකුගේ දේශපාලන ස්ථාවරය සැබවින්ම තීරණය කරයි.

කලක් අගමැතිතුමා ඉදිරියෙන් සිටි මන්ත්‍රීවරුන් තිදෙනෙකු අද දෙවියන්ගේ කැමැත්තෙන් අගමැති වී ඇති බවට අතාවුල්ලාගේ මතය ප්‍රකාශ කිරීම සම්බන්ධයෙන් විවේචන මතුව තිබේ.

කෙසේ වෙතත්, දේශපාලනයේ කිසිවක් ස්ථිර නොවන බව දේශපාලන ඉතිහාසය නැවත නැවතත් ඔප්පු කර ඇත. කලක් දේශපාලන බල කේන්ද්‍රයේ සිටි අයගේ තත්ත්වය ද කාලයත් සමඟ වෙනස් වන බව අපට පැහැදිලිව දැකගත හැකිය.

අද දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු රැස්වීමේ දී ඔහුගේ දේශපාලන ගෝලයා ලෙස සැලකෙන පාර්ලිමේන්තු මන්ත්‍රී උතුමාන් ලෙබ්බේ ඉහළ අසුනේ වාඩි වී සිටින අතර, හිටපු අමාත්‍ය වත්මන් නගර සභා පුරපති අතාවුල්ලා මහතා පහත අසුන්ගෙන සිටින අයුරු ද දේශපාලනයේ අස්ථාවර තනතුරු සහ බලය කෙතරම් අස්ථාවරද යන්න සිහිපත් කරන්නකි. මෙය ද දෙවියන්ගේ කැමැත්ත සහ කාලය විසින් ගෙන එන වෙනස්කම් පිළිබිඹු කරන දේශපාලන පාඩමක් ලෙස සැලකිය යුතුය.

මෙහිදී අප අමතක නොකළ යුතු කරුණ නම් දේශපාලනය යනු පුද්ගලික අභිමානය සඳහා වන තරගයක් නොවන බවයි; එය ජනතාවගේ ජීවිත වැඩිදියුණු කිරීම අරමුණු කරගත් රාජ්‍ය සේවයකි. විශේෂයෙන්ම ශිෂ්‍යයන් සහ තරුණ තරුණියන් ඉදිරියේ පැවැත්වෙන අධ්‍යාපනික උත්සව දේශපාලන නායකයන් තම නිහතමානී බව සහ ශිෂ්ටත්වය ප්‍රදර්ශනය කළ යුතු අවස්ථා වේ.

මල්මාලා ගණන, ආසන සැකසීමේ වැදගත්කම හෝ අසල වාඩි වී සිටින්නේ කවුරුන්ද යන්න වැනි කරුණු විවාදයේ විෂයයන් බවට පත් වූ විට, අධ්‍යාපනික ඉසව්වේ සැබෑ අරමුණ පසුබිමට තල්ලු වේ.

මෙහි එක් වැදගත් කරුණක් නම් වසන්ත පියතිස්ස නියෝජ්‍ය අමාත්‍යවරයා පාසලට පැමිණීමට පැමිණි අවස්ථාවේදී ශාලාවේ තිබූ අක්කරපත්තුව නගරාධිපතිවරයාගේ ඡායාරූපය පෙන්වා ‘මේක අයින් කරමුද?’ යැයි ගුරුවරයකු ඇසූ විට එයට වසන්ත පැවසුවේ ‘මේ ගොඩනැගිල්ල හැදුවේ මෙයා’ යනුවෙනි.

කෙසේ වෙතත් ඡායාරූප ප්‍රදර්ශනය නොකළ යුතු බවට අමාත්‍ය මණ්ඩලය තීරණයක් ගන්නා තුරු අපි එය එතැනින් තබන බවද ඔහු කියා සිටියා. ‘ඔව් ඒක අයින් කරන්න කිව්වා නම් උත්සවය පැවැත්වෙන ස්ථානයේ නගරාධිපතිවරයාගේ ඡායාරූපය නැහැ.’ එහෙත් වෙනසක් කරා යන ගමනේදී නියෝජ්‍ය ඇමැති වසන්ත පියතිස්ස හැසිරුණු ආකාරය සංස්කෘතියේ වැදගත්කමට කදිම නිදසුනකි.

ජ්‍යෙෂ්ඨ දේශපාලනඥයා යනු බොහෝ මල්මාලාවලින් සැරසුණු අයකු නොවේ. පුළුල් දේශපාලන අත්දැකීම්වලින් පසුව වුවද නිහතමානීව හැසිරිය යුතු ආකාරය දන්නා පුද්ගලයා සැබෑ දේශපාලන පරිණතභාවයට පත්වේ. වයස සහ අත්දැකීම් පුද්ගලයෙකු පරිණත විය හැක. නමුත් නිහතමානීකම සහ ශිෂ්ටත්වය නැති වූ විට, එම අත්දැකීමේ වටිනාකමම ප්රශ්නයක් බවට පත්වේ.

තමාගේම අත්දැකීම් තුළින් අනාගත පරපුරට දැනුම සහ පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් ලබා දීමට නොහැකි කෙනෙකුට තම ප්‍රජාව සහෝදර ප්‍රජාවන් සමඟ වාර්ගික සහජීවනයේ මාවතට යොමු කරන්නේ කෙසේද යන ප්‍රශ්නය ද මෙයින් මතු වේ.

මල්මාලා ගණනින් තම තත්ත්‍වය සෙවීමේ ප්‍රවණතාව පැරණි දේශපාලන සංස්කෘතියේ ප්‍රකාශනයක් ලෙස සැලකේ. එම ප්‍රවණතාවය ජාතික දේශපාලන සංස්කෘතියක් බවට පත් කරන මොහොත බවට ඉහත කී සිදුවීම පත්ව තිබේද යන ප්‍රශ්නයද සමාජ මාධ්‍ය තුළ මතුවෙමින් තිබේ.

විකෘති මානසිකත්වයක් පෙන්නුම් කිරීමට මල්මාලා පමණක් ප්‍රමාණවත් බව පවසමින් දැඩි විවේචන ද එල්ල වෙමින් තිබේ. එවැනි විවේචනවල අරමුණ පුද්ගලයන්ට අවමන් කිරීම නොවේ; ඒ වෙනුවට ප්‍රසිද්ධ උත්සවවලදී ප්‍රදර්ශනය කළ යුතු දේශපාලන ආචාරශීලීත්වය පිළිබඳ සමාජයේ අපේක්ෂාව අවධාරණය කිරීම අවශ්‍ය වේ.

මේ අතර දේශපාලන බලතල දරමින් අගමැතිවරයා අසල අසුන් ගන්නේ කවුරුන්ද යන්න පිළිබඳ තරගයක් සහ මතභේදාත්මක තත්ත්වයක් මෙම අවස්ථාවේදී ඇති වූ බවද පැවසේ. ඒ අතරම මුල්‍ය බලයක් හෝ දේශපාලන බලයක් නොමැති දුප්පත් මවකගේ පුතෙකුට අගමැතිවරයා අසල අසුන් ගැනීමට අවස්ථාවක් ලබාදීම අධ්‍යාපනයේ සැබෑ මහිමය හෙළි කරන සංකේතයක් ලෙසද කතාබහට ලක්වේ.

පුද්ගලයකුගේ පවුල් පසුබිම, ආර්ථික ක්‍රම හෝ දේශපාලන බලපෑම්වලට කෙනෙකු උසස් තත්ත්වයකට ගෙන යා නොහැක. ඒ වෙනුවට, අධ්‍යාපනය, දක්ෂතාවය සහ චරිතය පමණක් පුද්ගලයෙකුට උසස් ස්ථානයකට ඔසවා තැබිය හැකි අතර මිනිසුන්ගේ හදවත් තුළ සදාකාලික හැඟීමක් ඉතිරි කළ හැකිය. නව පරිවර්තනයක් කරා ගමන් කරන ශ්‍රී ලංකාවේ මූලික අදහස මෙය විය යුතුය.

දේශපාලකයන් තම පෞද්ගලික මනාපයන් සහ බල අරගල හරහා නගරයක ඉරණම තීරණය කිරීමට උත්සාහ කරන්නේ නම්, එහි ඉතිරි වන්නේ ව්‍යාකූලත්වය සහ ඝෝෂාව පමණි. නමුත් අධ්‍යාපනය, සමානාත්මතාවය, සමාජ සාධාරණත්වය, වාර්ගික සහජීවනය සහ මනුෂ්‍යත්වයට ප්‍රමුඛත්වය දෙන දේශපාලන චින්තනය සමාජයක අනාගතය පරිවර්තනය කළ හැක්කේ ය.

අක්කරපත්තුව මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලයේ 80 වැනි සංවත්සර උත්සවය සිසුන්ගේ ජයග්‍රහණ සහ අධ්‍යාපනයේ වැදගත්කම ඉස්මතු කළ අවස්ථාවක් විය යුතුව තිබුණි. ඒ වෙනුවට එය මල්මාලා සංඛ්‍යාව සහ දේශපාලන තත්ත්වය සඳහා තරගයක් සාකච්ඡා කරන සිදුවීමක් බවට පත්ව තිබීම නිසැකවම නැවත සිතා බැලිය යුතු කරුණකි.

ජාතික ජන බලවේගය විසින් ගෙන යන දේශපාලන වෙනස ආණ්ඩුවට අලුත් මුහුණු ගෙන ඒම පමණක් නොවේ. පැරණි බල මානසිකත්වය වෙනස් කිරීම, ජනතාවට ගරු කරන සංස්කෘතියක් ඇති කිරීම, තනතුර වරප්‍රසාදයක් ලෙස නොව වගකීමක් ලෙස සලකන මානසිකත්වයක් ඇති කිරීම සහ දේශපාලන බලපෑමට වඩා අධ්‍යාපනය අගයන සමාජ ව්‍යුහයක් ගොඩනැගීමයි. ශිෂ්‍යයන් සහ තරුණ තරුණියන් එම වෙනස තම ජීවිතයේ මාර්ගෝපදේශක මූලධර්මයක් ලෙස ගත යුතුය.

අන්තිමට නායකයෙක්ට දාපු මල්මාලා පැය කිහිපයකින් මැලවෙනවා. නමුත් ඔහු දක්වන නිහතමානීකම, ජනතාව වෙනුවෙන් කරන සේවය, අනාගත පරපුරට ඔහු තබන ආදර්ශය ඉතිහාසගත වෙනවා.

එබැවින් දේශපාලනයේ වෙනසක් ආණ්ඩු මාරුවෙන් අවසන් නොවිය යුතුය; දේශපාලන සංස්කෘතිය ද වෙනස් විය යුතුය. දේශපාලන නායකයන් මල්මාලා ගණනින් නොව, ජනතා හදවත් තුළ ඔවුන් දරන තැන අනුව විනිශ්චය කරන නව ශ්‍රී ලංකාවක් නිර්මාණය කිරීම යුගයේ අවශ්‍යතාවයයි!

අහමඩ් ඉර්ෂාඩ්
දිනකරන් දිනපතා පුවත් පත විසින් ලියන ලද ලිපියක් පිළිබඳ සවිස්තරාත්මක විස්තරයක්.
20-11-2026
සිංහල පරිවර්තනය සමග) மாலைகளின் எண்ணிக்கையா, மக்கள் மனங்களை வெல்லும் பண்பாடா? - அக்கரைப்பற்று மத்திய கல்லூரி 80 ஆவது ஆண்டு விழாவும் புதிய அரசியல் மாற்றமும்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.