Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග)முஸ்லிம் அரசியல் பிழைத்த இடங்களும்; தேசிய ஒருமைப்பாட்டை நோக்கிய புதிய திசையில் இலங்கை முஸ்லிம் அரசியலும்!


தமிழ் மற்றும் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவையோடு,
சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உருவாகும் புதிய அரசியல் சூழலை விழிப்புடன் கவனித்து, உரிமைகளைப் பாதுகாக்கும் ஜனநாயக மாற்றங்களில் பங்களிக்க வேண்டும். அச்சமின்றி சமத்துவத்துடன் வாழக்கூடிய கொள்கை அடிப்படையிலான தேசிய அரசியல் பங்கேற்பே முஸ்லிம் அரசியலின் உண்மையான வெற்றியாகும்.


இலங்கையின் முஸ்லிம் அரசியல் வரலாறு இன்று ஆழமான விமர்சனங்களுக்கும் சுயபரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அபிலாஷைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புகள் உண்மையில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளன என்ற கேள்வி தற்போது பல தரப்பினராலும் எழுப்பப்படுகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் உத்திகள் எங்கு பலவீனமடைந்தன? சமூகத்தின் அரசியல் பலம் எவ்வாறு சிதைவடைந்தது? தனித்துவக் கட்சிகள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன? இவை அனைத்தும் இன்று முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தீவிரமாக ஆராய வேண்டிய விடயங்களாகும்.

இலங்கை முஸ்லிம் அரசியலின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்றாகக் கருதப்படுவது, ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் அரசியல் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் அரசியல் கலாசாரமாக இருக்கின்றது. ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அதிகாரத்தில் பங்கெடுப்பதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுவகாண முடியும் என்ற அரசியல் மாயை (நம்பிக்கை) பல தசாப்தங்களாகத் மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த அணுகுமுறை முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தரமான அரசியல் பாதுகாப்பையோ, கொள்கை ரீதியான உரிமைகளையோ பெற்றுக்கொடுத்ததா என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அமைச்சுப் பதவிகள் கிடைத்தன; அரசியல் அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்பட்டது; சில தனிநபர்களின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்தது. ஆனால், சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் இந்த அரசியல் எவ்வளவு வெற்றியடைந்தது?

இதுவே முஸ்லிம் அரசியல் சுய பரிசோதனையின் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர், முஸ்லிம் அரசியலில் காணப்பட்ட தலைமைத்துவ ஒருமைப்பாடு படிப்படியாகச் சிதைவடைந்தது. தனிநபர் அரசியல் விருப்பங்கள், பிராந்திய அதிகாரப் போட்டிகள், தலைமைத்துவ முரண்பாடுகள் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகள் காரணமாக முஸ்லிம் அரசியல் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டது.

ஒரு சமூகத்தின் அரசியல் வாக்குப் பலம் அதன் ஒற்றுமையிலும், கொள்கைத் தெளிவிலும், பேச்சுவார்த்தை நடத்தும் திறனிலும் தங்கியுள்ளது. ஆனால், முஸ்லிம் அரசியல் பல கட்சிகளாகவும், தனிநபர் அதிகார மையங்களாகவும் பிரிந்தபோது, அதன் கூட்டு அரசியல் பேரம்பேசும் சக்தியும் பலவீனமடைந்தது.

கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலையைப் போன்றே, பல்வேறு அரசியல் குழுக்களும் தனித்தனி அதிகார மையங்களாக உருவெடுத்தன. சமூகத்தின் பொதுவான அரசியல் இலக்குகளை விடவும், தனிநபர் அரசியல் எதிர்காலமும் பிராந்திய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதுமே சில அரசியல் தலைமைகளின் முன்னுரிமையாக மாறியது என்ற விமர்சனத்தைப் புறக்கணிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தோற்றம் வரலாற்று ரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். ஆனால், தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான அரசியல், ஏனைய சமூகங்களிலிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குச் செல்லும்போது அதன் நோக்கமே கேள்விக்குள்ளாகிறது.


முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் சிங்கள சமூகத்துடனும் தமிழ் சமூகத்துடனும் கொண்டிருக்கும் உறவுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது. இலங்கை என்பது பல இனங்களும் மதங்களும் வாழும் நாடு. எனவே, முஸ்லிம் அரசியலின் வெற்றி என்பது முஸ்லிம் வாக்குகளை மட்டும் ஒருங்கிணைப்பதில் இல்லை; மாறாக, அனைத்து சமூகங்களுடனும் நம்பிக்கையையும் அரசியல் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது.

ஆனால், அடையாள அரசியலின் மிகையான பயன்பாடு சில சந்தர்ப்பங்களில் ஏனைய சமூகங்களுடனான அரசியல் உறவுகளில் இடைவெளிகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல், ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கும் பரந்த ஜனநாயக அரசியலாக வளர்ச்சியடைய வேண்டியிருந்தது.

அளுத்கம, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் முஸ்லிம் அரசியலின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முக்கியமான வரலாற்றுப் பாடங்களாகும்.

குறிப்பாக, கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் எவ்வாறு பாதித்தன என்பதை நாடு மறந்துவிட முடியாது.

இத்தகைய நெருக்கடிகளின்போது அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு அழுத்தமான தேசியத் தீர்மானங்களை உருவாக்கியிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், கட்சி அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகள் காரணமாக ஒருங்கிணைந்த அரசியல் அழுத்தத்தை உருவாக்க முடியாமல் போனமை விமர்சனத்திற்குரியது.

அதேபோன்று, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகங்களும் சமூக நெருக்குவாரங்களும் சுமத்தப்பட்டபோது, தீவிரவாதத்தைத் தெளிவாக எதிர்த்து, நிரபராதி மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பான அரசியல் அணுகுமுறை மிகவும் அவசியமாக இருந்தது.

மதத்தின் பெயரால் உருவாகும் தீவிரவாதப் போக்குகளையும், இனவாத அரசியலையும் ஆரம்பத்திலேயே எதிர்கொள்ளத் தவறுவது இறுதியில் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வரலாற்று ரீதியாகப் பல்வேறு பொதுவான பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் கொண்டுள்ளன. காணி உரிமைகள், கல்வி, பொருளாதார அபிவிருத்தி, நிர்வாக அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை உரிமைகள் போன்ற விடயங்களில் இரு சமூகங்களுக்கும் பல பொதுவான அரசியல் தேவைகள் உள்ளன.

இருப்பினும், கடந்தகால அதிகாரப் போட்டிகள், பிராந்திய முரண்பாடுகள் மற்றும் பரஸ்பர அரசியல் சந்தேகங்கள் இந்த உறவுகளைப் பலவீனப்படுத்தின.

தமிழ்–முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தாண்டி, பொதுவான ஜனநாயக உரிமைகளுக்காக இணைந்து செயற்பட்டிருந்தால் சிறுபான்மை மக்களின் தேசிய அரசியல் பலம் மேலும் வலுப்பெற்றிருக்க முடியும்.

எனவே, எதிர்கால முஸ்லிம் அரசியல் என்பது தனிமைப்படுத்தப்பட்ட அரசியல் அல்ல; பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியலாக இருக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களிடையே புதிய எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.

சட்டத்தின் ஆட்சி, ஊழல் ஒழிப்பு, அரசியல் அதிகாரத்தின் பொறுப்புக்கூறல், அரச நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள் போன்ற கொள்கைகள் நாட்டின் அரசியல் மறுசீரமைப்பில் முக்கியமானவையாகும்.

கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்ததன் விளைவாகவே சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டன என்ற விமர்சனம் உள்ளது. எனவே, சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதும், இனவாத மற்றும் மதவாத வன்முறைகளில் ஈடுபடுவோர் அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் அவசியமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மதச் சுதந்திரம், ஆடை நடைமுறைகள், கலாசார அடையாளங்கள் மற்றும் மத உரிமைகள் தொடர்பான நிர்வாகச் சிக்கல்களும் அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளின் அடிப்படையில் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்பதிலும்,  சமூகங்களுக்கு இடையே விரிசல் ஏற்படாதவாறு முறையாகப் புரிந்துகொண்டு தீர்க்கப்பபட வேண்டும் என்ற பார்வையில் NPP அரசாங்கம் இருக்கின்றது. சமூகங்களுக்கிடையில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையில் பரஸ்பர புரிதலுடன் இவற்றை தீர்ப்பதே அரசாங்கத்தின் பார்வையாகும்

அதேவேளை, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முயற்சி, பிராந்திய அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகத்தில் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளாகவும் பார்க்கின்றது.

தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் புதிய அரசியல் கலாசாரத்தின் உண்மையான வெற்றி மற்றும் கொள்கை ரீதியான நடைமுறைகள் சரியாகா நிறைவேற்றப்படுகின்ற அதே இடத்தில், வாக்குறுதிகளும்,நடைமுறைச் செயற்பாடுகளும்சரியான அளவுகோலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான அரசியல் கேள்வி, பழைய அரசியல் தலைமைகளையும் அவற்றின் அதிகாரப் போட்டிகளையும் தொடர்வதா அல்லது கொள்கை, சமத்துவம், சமூக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பதாகும்.

அரசியல் கட்சிகள் சமூகத்தின் நிரந்தரமான பாதுகாவலர்கள் அல்ல. அவை மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மட்டுமே. எனவே, எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் செயற்பாடுகள் மக்களின் நலன்களுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்பட வேண்டும்.

முஸ்லிம் புத்திஜீவிகள், இளைஞர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்த மாற்றத்திற்கான விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். தனிநபர் அரசியல் நலன்களுக்காக சமூகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இலங்கையின் எதிர்காலம் இனங்களுக்கிடையிலான போட்டியிலோ, மத அடிப்படையிலான அச்ச அரசியலிலோ கட்டியெழுப்பப்பட முடியாது. அது சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே உருவாக வேண்டும்.

கடந்தகால அரசியல் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய அரசியல் வாய்ப்புகளைப் பொறுப்புடன் மதிப்பிட வேண்டிய காலம் இது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை மக்கள் விழிப்புடன் கண்காணிப்பதுடன், அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அரசியல் மாற்றங்களுக்கு ஜனநாயக ரீதியாகப் பங்களிக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியலின் வெற்றி என்பது அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையிலோ, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலோ அளவிடப்படக்கூடியதல்ல. ஒரு முஸ்லிம் குடிமகன் அச்சமின்றி வாழ்வதும், தனது மதத்தைப் பின்பற்றுவதும், தனது உரிமைகளைப் பாதுகாப்பதும், ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்துடன் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதுமே அதன் உண்மையான வெற்றியாகும்.

அந்த இலக்கை அடைவதற்கான அரசியல் பாதை, பழைய அதிகாரப் பேரம்பேசல்களிலிருந்து வெளியேறி, கொள்கை அடிப்படையிலான தேசிய அரசியல் பங்கேற்பை நோக்கி நகர்வதாக இருக்க வேண்டும்.

அஹமட் இர்ஷாட்.
09-11-2026

ශ්‍රී ලාංකීය මුස්ලිම් දේශපාලනය ජාතික සමගිය දෙසට නව මගකට; මුස්ලිම් දේශපාලනය බේරුණු තැන්! 

දෙමළ සහ අනෙකුත් ප්‍රජාවන් සමඟ සුහදතාවය සහ අන්‍යෝන්‍ය විශ්වාසය ගොඩනගා ගැනීමේ අවශ්‍යතාවය සමඟ,
නීතියේ ආධිපත්‍යය, සමාජ සාධාරණත්වය සහ ජාතික සමගිය මත නව දේශපාලන මාවතක් තෝරා ගැනීමට බලකෙරේ. 

ජාතික ජන බලය රජය යටතේ මතුවන නව දේශපාලන පරිසරය විමසිලිමත් විය යුතු අතර අයිතීන් සුරැකෙන ප්‍රජාතන්ත්‍රවාදී ප්‍රතිසංස්කරණ සඳහා දායක විය යුතුය. මුස්ලිම් දේශපාලනයේ සැබෑ සාර්ථකත්වය වන්නේ බියෙන් තොරව සමානාත්මතාවයෙන් ජීවත් විය හැකි මූලධර්ම මත පදනම් වූ ජාතික දේශපාලන සහභාගීත්වයයි.
++++++++++++++++++

ශ්‍රී ලංකාවේ මුස්ලිම් දේශපාලන ඉතිහාසය අද වන විට ගැඹුරු විවේචනයක් සහ ස්වයං විමර්ශනයක් ඉල්ලා සිටින තීරණාත්මක අවධියකට පැමිණ තිබේ. විශේෂයෙන්ම, පසුගිය දශක හතරක කාලය තුළ මුස්ලිම් ප්‍රජාවගේ දේශපාලන අයිතිවාසිකම්, ආරක්ෂාව, අධ්‍යාපනය, ආර්ථික ප්‍රගතිය සහ සමාජ අභිලාෂයන් වෙනුවෙන් නිර්මාණය වූ දේශපාලන ව්‍යුහයන් කෙතරම් දුරට සාර්ථක වී තිබේද යන ප්‍රශ්නය බොහෝ පාර්ශ්වවලින් මතුවෙමින් තිබේ.

මුස්ලිම් දේශපාලන නායකයන්ගේ උපාය මාර්ග අසාර්ථක වූයේ කොතැනද? සමාජයේ දේශපාලන ශක්තිය පිරිහුණේ කෙසේද? පුද්ගලවාදී පක්ෂ බිහිකිරීමේ සැබෑ අරමුණු කොතෙක් දුරට ඉටු වූවාද? මේ සියල්ල අද මුස්ලිම් බුද්ධිමතුන්, දේශපාලන විශ්ලේෂකයින් සහ සමාජ ක්‍රියාකාරීන් බැරෑරුම් ලෙස ගවේෂණය කළ යුතු ප්‍රශ්න වේ.

ශ්‍රී ලංකා මුස්ලිම් දේශපාලනයේ ඇති ලොකුම දුර්වලතාවක් නම් ඇමති ධුර සහ දේශපාලන සහන ලබා ගැනීම සඳහා ආණ්ඩු කරන ආණ්ඩු සමඟ හවුල් වීමේ දේශපාලන සංස්කෘතියයි. බලයේ සිටින කවුරුන් හෝ සමඟ බලය බෙදාගැනීමෙන් සමාජයේ ප්‍රශ්න සම්පූර්ණයෙන් විසඳිය හැකි බවට දශක ගණනාවක් තිස්සේ දේශපාලන මිත්‍යාව (විශ්වාසය) ජනතාව ඉදිරියේ දශක ගණනාවක් තිස්සේ පැවතුණි.

නමුත් වැදගත්ම ප්‍රශ්නය වන්නේ මෙම ප්‍රවේශය මුස්ලිම් ප්‍රජාවට ස්ථිර දේශපාලන ආරක්ෂාවක් හෝ ප්‍රතිපත්තිමය අයිතිවාසිකම් ගෙන දී තිබේද යන්නයි. ඇමති තනතුරු තිබුණා; දේශපාලන බලය බෙදී යයි; ඇතැම් පුද්ගලයන්ගේ දේශපාලන බලපෑම ද වැඩි විය. එහෙත් සමාජයේ දීර්ඝ කාලීන ගැටලු සඳහා තිරසාර විසඳුම් නිර්මාණය කිරීමේදී මෙම දේශපාලනය කෙතරම් සාර්ථක වී තිබේද?

මෙය මුස්ලිම් දේශපාලන ස්වයං විමර්ශනයේ ආරම්භක ලක්ෂ්‍යය විය යුතුය.

මුස්ලිම් කොංග්‍රසයේ ආරම්භක සභාපති එම්.එච්.එම්. අෂ්රෆ්ගේ මරණයෙන් පසු මුස්ලිම් දේශපාලනයේ දක්නට ලැබුණු නායකත්ව එකමුතුව ක්‍රමක්‍රමයෙන් බිඳ වැටුණි. තනි පුද්ගල දේශපාලන මනාප, කලාපීය බල අරගල, නායකත්ව ගැටුම් සහ දේශපාලන බලපෑම රැකගැනීමේ උත්සාහයන් හේතුවෙන් මුස්ලිම් දේශපාලනය ඛණ්ඩනය විය.

ප්‍රජාවක දේශපාලන ඡන්ද බලය රඳා පවතින්නේ එහි එකමුතුකම, ප්‍රතිපත්ති පැහැදිලිකම සහ සාකච්ඡා කිරීමේ හැකියාව මතය. එහෙත් මුස්ලිම් දේශපාලනය බහු පක්ෂ සහ පුද්ගල බල කේන්ද්‍ර ලෙස ඛණ්ඩනය වූ විට එහි සාමූහික දේශපාලන කේවල් කිරීමේ බලය දුර්වල විය.

දඩයක්කාරයාගේ තත්ත්‍වයට සමානව විවිධ දේශපාලන කණ්ඩායම් වෙනම බල කේන්ද්‍ර ලෙස මතු විය. සමාජයේ පොදු දේශපාලන අරමුණු සහ පුද්ගල දේශපාලන අනාගතයට වඩා කලාපීය බලය රඳවා ගැනීම ඇතැම් දේශපාලන නායකයින්ගේ ප්‍රමුඛතාවය බවට පත්ව ඇති බවට විවේචන නොසලකා හැරිය නොහැකිය.

මුස්ලිම් ප්‍රජාවගේ සුවිශේෂී අනන්‍යතාවයන් සහ අයිතීන් ආරක්ෂා කිරීම සඳහා ගොඩනැගුණු දේශපාලන පක්ෂ බිහිවීම ඓතිහාසිකව වටහා ගත හැකිය. එහෙත් පුද්ගලත්වය රැක ගැනීමේ දේශපාලනයේ අරමුණම එය වෙනත් සමාජයන්ගෙන් දේශපාලන හුදකලා වන තැනට ගමන් කරන විට ප්‍රශ්නයට ලක් වේ.

මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන අනාගතය සිංහල හා දෙමළ ප්‍රජාවන් සමඟ ඇති සබඳතාවලින් වෙන් කළ නොහැක. ශ්‍රී ලංකාව බහු වාර්ගික සහ බහු ආගමික රටකි. එබැවින් මුස්ලිම් දේශපාලනයේ සාර්ථකත්වය මුස්ලිම් ඡන්ද තහවුරු කිරීම පමණක් නොවේ; ඒ වෙනුවට, එය රඳා පවතින්නේ සියලු ප්‍රජාවන් සමඟ විශ්වාසය ගොඩනැගීම සහ දේශපාලන සහයෝගීතාව මත ය.

නමුත් අනන්‍යතා දේශපාලනයේ අධික ලෙස භාවිතා කිරීම සමහර අවස්ථාවලදී අනෙකුත් ජන කොටස් සමඟ දේශපාලන සබඳතාවල හිඩැස් ඇති කර තිබේ. මුස්ලිම්වරුන්ගේ අයිතිවාසිකම් සුරැකීමේ දේශපාලනය අනෙකුත් ජන කොටස්වල අයිතිවාසිකම්වලට ද ගරු කරන පුළුල් ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලනයක් බවට පරිණාමය වීමට සිදු විය.

අලුත්ගම, මහනුවර ආදී ප්‍රදේශවල මුස්ලිම් ප්‍රජාවට එරෙහි ප්‍රචණ්ඩත්වය, වෛරී ප්‍රකාශ සහ ආගමික පදනම් වූ තර්ජන මුස්ලිම් දේශපාලනයේ සඵලතාවය තක්සේරු කිරීමට වැදගත් ඓතිහාසික පාඩම් වේ.

විශේෂයෙන්ම බලහත්කාරයෙන් ජනාසා ගිනි තැබීම වැනි සිදුවීම් මුස්ලිම් ප්‍රජාවගේ ආගමික හැඟීම්වලට සහ මූලික අයිතිවාසිකම්වලට බලපෑ ආකාරය රටට අමතක කළ නොහැක.

මෙවැනි අර්බුද පවතින විට දේශපාලන නායකත්වය එකතු වී ශක්තිමත් ජාතික යෝජනා සකස් කිරීම අවශ්‍ය වෙනවා. කෙසේ වෙතත්, පක්ෂ දේශපාලනය සහ බල අරගල ඒකාබද්ධ දේශපාලන පීඩනය ඇති කිරීමට නොහැකි වීම විවේචනයට තුඩු දී ඇත.

එලෙසම, 2019 පාස්කු ප්‍රහාරයෙන් පසු සමස්ත මුස්ලිම් ප්‍රජාව කෙරෙහිම සැකයන් සහ සමාජ ආතතීන් ඇති වූ විට, අන්තවාදයට එරෙහිව පැහැදිලිවම අහිංසක මිනිසුන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කරන වගකිවයුතු දේශපාලන ප්‍රවේශයක් අවශ්‍ය විය.

ආගමේ නාමයෙන් ගෙන යන අන්තවාදී ප්‍රවනතාවයන්ට සහ ජාතිවාදී දේශපාලනයට මුලදී මුහුණ දීමට අපොහොසත් වීම අවසානයේ සමස්ත සමාජයටම බලපාන බව මෙම අත්දැකීම් වලින් පෙනේ.

උතුරු හා නැඟෙනහිර පළාත්වල දෙමළ සහ මුස්ලිම් ප්‍රජාවන් ඓතිහාසික වශයෙන් බොහෝ පොදු ප්‍රශ්න සහ අභිලාෂයන් බෙදාගෙන ඇත. ඉඩම් අයිතිය, අධ්‍යාපනය, ආර්ථික සංවර්ධනය, පරිපාලන බලය බෙදාගැනීම සහ සුළුතර අයිතිවාසිකම් වැනි ක්ෂේත්‍රවල පොදු දේශපාලන ඉල්ලීම් රාශියක් ප්‍රජාවන් දෙකට තිබේ.

කෙසේ වෙතත්, පසුගිය බල අරගල, කලාපීය ගැටුම් සහ අන්‍යෝන්‍ය දේශපාලන සැකයන් මෙම සබඳතා දුර්වල කළේය.

දෙමළ-මුස්ලිම් දේශපාලන නායකයන් මතභේද දුරලා පොදු ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතීන් වෙනුවෙන් එක්ව කටයුතු කළේ නම් සුළු ජාතික ජනතාවගේ ජාතික දේශපාලන ශක්තිය ශක්තිමත් කළ හැකිව තිබුණි.

එබැවින් අනාගත මුස්ලිම් දේශපාලනය හුදකලා දේශපාලනයක් නොවේ; එය අන්‍යෝන්‍ය ගෞරවය, සමානාත්මතාවය සහ ජාතික සමගිය මත පදනම් වූ දේශපාලනයක් විය යුතුය.

මෙවන් පසුබිමක ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවේ දේශපාලන ප්‍රවේශයන් ශ්‍රී ලංකාවේ සුළුතර ප්‍රජාවන් අතර නව අපේක්ෂාවන් සහ වාද විවාද ඇති කර තිබේ.

නීතියේ ආධිපත්‍යය, දූෂණය පිටුදැකීම, දේශපාලන බලය පිළිබඳ වගවීම, රාජ්‍ය ආයතනවල ස්වාධීනත්වය, සියලු ජනතාවට සමාන අයිතිවාසිකම් වැනි මූලධර්ම රටේ දේශපාලන ප්‍රතිව්‍යුහගතකරණයේදී වැදගත් වේ.

පසුගිය කාලයේ නීතියේ ආධිපත්‍යය දුර්වල වීම හේතුවෙන් සුළු ජාතික ප්‍රජාවන් විවිධ ආරක්‍ෂක තර්ජනවලට මුහුණ දුන් බවට විවේචන එල්ල වී තිබේ. එබැවින් නීතිය සැමට එක හා සමානව ක්‍රියාත්මක වීම සහ ජාතිවාදී සහ ආගම්වාදී ප්‍රචණ්ඩත්වයට සම්බන්ධ අපරාධකරුවන් ඔවුන්ගේ දේශපාලන බලපෑම් නොසලකා නීතිය ඉදිරියට ගෙන ඒම අත්‍යවශ්‍ය වේ.

මුස්ලිම් ප්‍රජාවගේ ආගමික නිදහස, ඇඳුම් පැළඳුම්, සංස්කෘතික අනන්‍යතා සහ ආගමික අයිතිවාසිකම් සම්බන්ධ පරිපාලන ගැටලු ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් සපයා ඇති අයිතිවාසිකම් මත සාධාරණ ලෙස ප්‍රවේශ විය යුතු අතර ප්‍රජාවන් අතර විරසකයක් ඇති නොවන පරිදි නිසි ලෙස අවබෝධ කර ගෙන විසඳිය යුතු බව NPP රජයේ අදහසයි. ජාතීන් අතර විරසකයක් ඇති නොවන පරිදි අන්‍යෝන්‍ය අවබෝධයෙන් මේවා විසඳා ගැනීම රජයේ දැක්මයි.

මේ අතර අධ්‍යාපනය, රැකියා, ව්‍යවසායකත්වය, ප්‍රාදේශීය සංවර්ධනය සහ රාජ්‍ය පරිපාලනය යන ක්ෂේත්‍රවල සමාන අවස්ථා සහතික කිරීම රජයේ ප්‍රධාන වගකීම් ලෙස සැලකේ.

ජාතික ජන බලවේගය ඉදිරිපත් කරන නව දේශපාලන සංස්කෘතියේ සැබෑ සාර්ථකත්වය සහ ප්‍රතිපත්තිමය භාවිතයන් නිසි ලෙස ක්‍රියාත්මක වෙමින්, පොරොන්දු සහ ප්‍රායෝගික ක්‍රියාමාර්ග නිසි පියවරක් ලෙස සිදුවෙමින් පවතී.

ඒ අනුව අද මුස්ලිම් ප්‍රජාව මුහුණ දෙන වැදගත්ම දේශපාලන ප්‍රශ්නය වන්නේ පැරණි දේශපාලන නායකත්වයන් සහ ඔවුන්ගේ බල අරගල දිගටම කරගෙන යනවාද නැතහොත් ප්‍රතිපත්තිමය, සමානාත්මතාවය, සමාජ සාධාරණත්වය සහ ජාතික සමගිය මත පදනම් වූ නව දේශපාලන මාවතක් තෝරා ගැනීමයි.

දේශපාලන පක්ෂ යනු සමාජයේ ස්ථිර ආරක්ෂකයින් නොවේ. ඒවා ජනතාවගේ අයිතිවාසිකම් සහ අභිලාෂයන් නියෝජනය කිරීම සඳහා නිර්මාණය කරන ලද ප්‍රජාතන්ත්‍රවාදී ආයතන පමණි. ඒ නිසා ඕනෑම පක්ෂයක ක්‍රියාකාරකම් ඇගයීමට ලක් කළ යුත්තේ ජනතා අවශ්‍යතාවලට එරෙහිවයි.

මුස්ලිම් බුද්ධිමතුන්, තරුණයන්, උගතුන්, සමාජ සංවිධාන, දේශපාලන ක්‍රියාකාරීන් මේ වෙනස සඳහා වූ සාකච්ඡාවලට සක්‍රීයව සහභාගි විය යුතුයි. පුද්ගලික දේශපාලන අවශ්‍යතා වෙනුවෙන් සමාජයේ අනාගතය උකස් කරන දේශපාලන සංස්කෘතිය අවසන් විය යුතුය.

ශ්‍රී ලංකාවේ අනාගතය වාර්ගික එදිරිවාදිකම් මත හෝ ආගම පදනම් වූ බිය දේශපාලනයෙන් ගොඩනැගිය නොහැක. එය සමානාත්මතාවය, නීතියේ ආධිපත්‍යය, ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතීන් සහ අන්‍යෝන්‍ය විශ්වාසය මත පදනම් විය යුතුය.

අතීත දේශපාලන වැරදිවලින් පාඩම් ඉගෙන ගැනීමටත්, නව දේශපාලන අවස්ථා වගකීමෙන් යුතුව තක්සේරු කිරීමටත් කාලයයි මේ. ජාතික ජනබල රජය ඉදිරිපත් කරන ප්‍රතිපත්ති ප්‍රායෝගිකව ක්‍රියාත්මක වන ආකාරය ජනතාව ක්‍රියාකාරීව නිරීක්ෂණය කළ යුතු අතර සියලු ජන කොටස්වල අයිතිවාසිකම් සුරැකෙන දේශපාලන වෙනස්කම් සඳහා ප්‍රජාතන්ත්‍රවාදීව දායක විය යුතුය.

මුස්ලිම් දේශපාලනයේ සාර්ථකත්වය ඇමති ධුර සංඛ්‍යාවෙන් හෝ පාර්ලිමේන්තු මන්ත්‍රී සංඛ්‍යාවෙන් මනින්න බැහැ. එහි සැබෑ සාර්ථකත්වය වන්නේ මුස්ලිම් පුරවැසියකු බියෙන් තොරව ජීවත් වෙමින් තම ආගම අදහමින් තම අයිතීන් සුරකිමින් අනෙකුත් ජන කොටස් සමඟ සමානාත්මතාවයෙන් රටේ අනාගතය ගොඩනඟා ගැනීමයි.

එම ඉලක්කය සපුරා ගැනීමේ දේශපාලන මාවත විය යුත්තේ පැරණි බල ගනුදෙනුවලින් ඉවත් වී ප්‍රතිපත්ති මත පදනම් වූ ජාතික දේශපාලන සහභාගීත්වය කරා ගමන් කිරීමයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන්, 
09-11-2026
සිංහල පරිවර්තනය සමග)முஸ்லிம் அரசியல் பிழைத்த இடங்களும்; தேசிய ஒருமைப்பாட்டை நோக்கிய புதிய திசையில் இலங்கை முஸ்லிம் அரசியலும்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.