Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) மக்கள் சக்தியின் நீண்ட பயணம்: பிரேசில், கியூபா முதல் இலங்கை வரை – இடதுசாரிச் சிந்தனையின் வெற்றியும் தியாகங்களின் வரலாறும்!



பிரேசிலின் லூலா, கியூபாவின் சேகுவேரா, இலங்கையின் ரோஹண விஜேவீர போன்றோரின் இடதுசாரிச் சிந்தனைகளும் தியாகப் பயணங்களும் உலகளாவிய சமூக மாற்றத்திற்கான வரலாற்றுத் தூண்டுகோல்களாக விளங்குகின்றன.

குடும்ப அரசியல், ஊழல், மோசடி மற்றும் இனவாதத்திற்கு எதிரான மக்களின் தீர்ப்பாக அமைந்துள்ள இந்த ஆட்சி, அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையையும் சமூக நீதியையும் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

​கடந்தகாலத் தவறுகளைத் தவிர்த்து, பொருளாதாரச் சமத்துவம், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மனிதக் கண்ணியத்தைப் பாதுகாத்து நாட்டை முன்னேற்றுவது அரசாங்கத்தின் மிக முக்கிய வரலாற்றுப் பொறுப்பாகும்.

ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வெறுமனே தேர்தலில் வெற்றிபெறுவதுடன் முடிந்து விடுகின்ற காரியமல்ல. பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் வேரூன்றிய சிந்தனைகள், எண்ணற்ற போராட்டங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான உறுதியான நம்பிக்கைகள் ஒன்றிணையும் போதுதான் ஒரு புதிய அரசியல் சக்தி வரலாற்றில் இடம் பிடிக்கின்றது. 

குறிப்பாக, இடதுசாரிச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள், பொருளாதார சமத்துவம், சமூக நீதி, இன நல்லிணக்கம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றை முன்னிறுத்தும் அரசியல் இயக்கங்கள் ஆட்சியைப் பிடிப்பதும், அந்த மக்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பதும் மிகப்பெரிய வரலாற்றுச் சவாலாகும்.

அரசியல் அதிகாரம் என்பது ஒரு சில குடும்பங்களுக்கோ, செல்வந்தர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ சொந்தமானதல்ல; அது உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் சாதாரண குடிமக்களுக்கும் உரியது என்ற சிந்தனையே இடதுசாரி அரசியலின் அடிப்படைத் தத்துவமாகும். 

இடதுசாரி அரசியல் சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதும், அதனைத் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு நீண்டகாலம் நல்வாட்சியை வழங்குவதும் சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இந்தச் சிந்தனை உலகின் பல நாடுகளில் வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களில் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது.


பிரேசிலின் அண்மைய அரசியல் வெற்றி இதற்கு மற்றுமொரு முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, நீண்டகால அரசியல் போராட்டங்களையும், தோல்விகளையும், வெற்றிகளையும் கடந்து, 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 

ஒரு ஏழைத் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பிரேசிலை வறுமையிலிருந்து மீட்டு உலகளவில் முன்னிலைப்படுத்தியவர் லூலா,  தீவிர முதலாளித்துவ மற்றும் ஊழல் சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நான்காவது முறையாகவும் அவர் பெற்ற வெற்றி, இடதுசாரி சிந்தாந்தம் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது.

மேலும், அவர் 64 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார். இது ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தும் அரசியல் சிந்தனைகள் ஜனநாயகத்தின் ஊடாகத் தொடர்ந்து மக்கள் ஆதரவைப் பெற முடியும் என்பதற்கான முக்கியமான அரசியல் செய்தியாகும். 

அதேபோன்று, கியூபாவின் புரட்சிகர வரலாறும் உலக இடதுசாரி அரசியலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து சேகுவேரா முன்னெடுத்த புரட்சிகரப் பயணம், அந்நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. 

மருத்துவம், கல்வி, சமூக நலன், தேசிய இறையாண்மை ஆகியவற்றை முன்னிறுத்திய கியூபாவின் வரலாறு, ஒரு நாட்டின் வளங்களும் வாய்ப்புகளும் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையை உலகளாவிய ரீதியில் விவாதமாக்கியது. சேகுவேராவின் வாழ்க்கை, தனிப்பட்ட வசதிகளையும் அதிகாரத்தின் சலுகைகளையும் விட சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு முக்கியமானது என்பதை நினைவூட்டும் வரலாற்றுச் சின்னமாக இன்றும் பார்க்கப்படுகின்றது.

இத்தகைய சர்வதேச அரசியல் வரலாற்றுடன் இலங்கையின் இடதுசாரி அரசியல் பயணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி உருவான காலத்திலிருந்து அதன் அரசியல் வளர்ச்சி வரை எண்ணற்ற தடைகளும், அடக்குமுறைகளும், துயரங்களும் நிறைந்திருக்கின்றன. 

றோஹண விஜேவீர தலைமையில் உருவான மக்கள் விடுதலை முன்னணி, பாரம்பரிய அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை முன்னிறுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், அரசியல் அதிகாரத்தின் குவிப்பையும் கேள்விக்குட்படுத்திய அந்த இயக்கம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு இடதுசாரி அரசியல் சக்தியாக வளர்ந்தது. 

இலங்கையின் தியாக வரலாறும் புதிய அரசியல் அத்தியாயமும்:-
***********************
றோஹண விஜேவீரவின் அரசியல் வாழ்க்கை இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயமாகும். 1971ஆம் ஆண்டின் அரசியல்  கிளர்ச்சியும், 1987–1989 காலப்பகுதியின் அரசியல் அடக்குமுறைகளும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தின. 

அந்தக் காலகட்டங்களில் உயிரிழந்த இளைஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் உயிரிழப்புகளையும், துயரங்களையும் மறந்துவிட முடியாது. அரசியல் வேறுபாடுகள் எவ்வாறிருந்தாலும், மனித உயிர்களின் பெறுமதியை மதிப்பதே நாகரிகமான அரசியலின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

விஜேவீரவின் மரணத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரவில்லை. மாறாக, அந்த இயக்கம் தனது கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்படியாக அரசியல் பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஜனநாயகத் தேர்தல் அரசியலின் ஊடாகப் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. 

இதுவே இலங்கையின் சமகால அரசியலில் மிக முக்கியமான மாற்றமாகும். கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு துன்பங்களையும் இழப்புகளையும் சந்தித்த இயக்கம், இன்று மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பது வரலாற்றின் மிக முக்கிய திருப்பமாகும்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உருவான அரசியல் வெற்றியும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற 159 நாடாளுமன்ற ஆசனங்களும் இந்த மாற்றத்தின் வலிமையை வெளிப்படுத்தின. 

குறிப்பாக, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் புதிய அரசியல் மாற்றத்திற்குத் தமது ஆதரவை வழங்கியமை இலங்கையின் எதிர்காலத்திற்கான முக்கியமான நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வெற்றியை வெறுமனே ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய குடும்ப அரசியல், அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நடைபெற்ற சலுகை அரசியல், ஊழல், மோசடி, அரச வளங்களின் துஷ்பிரயோகம் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் போட்டிகளுக்கு எதிராக மக்கள் வழங்கிய மாற்றத்திற்கான தீர்ப்பாகவே அரசியல் அவதானிகளின் பார்வையாக உள்ளது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னிறுத்தும் அரசியல் தத்துவத்தின் மிக முக்கியமான அம்சம், இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடோ, தமிழர்களுக்கு மட்டும் உரிய நாடோ அல்லது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய நாடோ அல்ல; இந்த நாட்டில் வாழும் சகல இன, மத மக்களுக்கும் சமமான உரிமைகளும் கண்ணியமும் இருக்க வேண்டிய பொதுவான தாயகம் என்பதாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் பணம் படைத்தவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்கக்கூடாது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என எந்தப் பிரதேசமாக இருந்தாலும் அபிவிருத்தி வாய்ப்புகள் சமமாகச் சென்றடைய வேண்டும். இதுவே உண்மையான இடதுசாரிச் சிந்தனையின் சமூகப் பெறுமதியாகும்.

பல தசாப்தங்களாக இனவாதத்தையும், மதவாதத்தையும் தேர்தல் வெற்றிக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்திய அரசியல் தரப்புகளுக்கு, இனங்களைக் கடந்து மக்கள் ஒன்றிணையும் புதிய அரசியல் சூழல் சவாலாக அமைந்துள்ளது. அதனால் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் திரிபுபடுத்துதல், மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துதல், பழைய அரசியல் உணர்வுகளை மீண்டும் தூண்டுதல் போன்ற முயற்சிகளை எதிர்த்தரப்பினர் கையிலெடுத்துள்ளனர்.

பிரேசிலின் லூலா, கியூபாவின் சேகுவேரா, இலங்கையின் றோஹண விஜேவீர ஆகியோரின் அரசியல் வாழ்க்கைகள் வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களையும், வெவ்வேறு போராட்டப் பாதைகளையும் கொண்டவை. அவர்களை ஒரே அரசியல் அளவுகோலில் வைத்து மதிப்பிட முடியாது. ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான அரசியல் சிந்தனை, தனிப்பட்ட வாழ்க்கையைவிடப் பொதுவான சமூக மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்த அர்ப்பணிப்பு, அதிகாரக் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் என்ற உறுதி போன்ற சில வரலாற்றுத் தொடர்புகள் அவர்களின் பயணங்களில் காணப்படுகின்றன.

அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முன்னோர்களின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்வதோடு,  அவர்களின் அரசியல் போராட்டங்களின் அடிப்படை நோக்கங்களான சமூக நீதி, சமத்துவம், மனித கண்ணியம், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேவேளை, கடந்த காலத்தின் வன்முறைகளையும் தவறுகளையும் மீண்டும் நிகழவிடாமல் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் வெற்றி என்பது எதிர்க்கட்சிகளின் தோல்வியால் மட்டும் அளவிடப்பட முடியாது. வறுமையிலிருந்து விடுபடும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும், வேலைவாய்ப்பைப் பெறும் ஓர் இளைஞனின் எதிர்காலத்திலும், தரமான கல்வியைப் பெறும் ஒரு கிராமப்புறக் குழந்தையின் முன்னேற்றத்திலும், இன வேறுபாடின்றி நீதியைப் பெறும் ஒரு சாதாரண குடிமகனின் நம்பிக்கையிலும் அந்த வெற்றி அளவிடப்பட வேண்டும்.

ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் தேர்தல் வெற்றியுடன் முடிவடையும் பயணமல்ல. அது பல தசாப்தங்களாக ஊழலாலும், அதிகார அரசியலாலும், இனவாதத்தாலும் பாதிக்கப்பட்ட இலங்கையைப் புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நீண்ட வரலாற்றுப் பொறுப்பாகும்.

பிரேசிலில் லூலாவின் நான்காவது தேர்தல் வெற்றி இடதுசாரி அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியான மக்கள் ஆதரவுக்கான சான்றாக அமைந்துள்ள அதேவேளை, கியூபாவின் புரட்சிகர வரலாறும் இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட போராட்ட வரலாறும் சமூக மாற்றத்திற்கான அரசியல் உறுதியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. இலங்கையில் அந்த வரலாற்றுப் பொறுப்பை இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுள்ளது.

மக்களின் இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட கடந்தகால அரசியல் வரலாறு, இனி மக்களின் நம்பிக்கையாலும் சமத்துவத்தாலும் நீதியாலும் எழுதப்பட வேண்டும். அதிகாரம் சிலருக்கான சலுகையாக அல்லாமல், சகல மக்களுக்குமான சேவையாக மாற வேண்டும்.

அதுவே மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால அரசியல் பயணத்திற்கும், தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய ஆட்சிக்கும் உண்மையான வரலாற்றுப் பெறுமதியை வழங்கும்.  அடுத்த தலைமுறையினர் பெருமையுடன் வாழக்கூடிய ஊழலற்ற, இன நல்லிணக்கமிக்க, சமூக நீதியும் பொருளாதாரச் சமத்துவமும் நிறைந்த ஒரு புதிய இலங்கையை உருவாக்குவது எதிர்காலத் தேர்தல் வெற்றிகளைவிடவும் முக்கியமானதாக உள்ளது.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தேசிய மக்கள் சக்தி தனது மக்கள் நம்பிக்கையைப் பாதுகாத்து, ஜனநாயக வழியில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதே நாட்டின் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்ப உள்ளது.

அதனடிப்படையில், தோழர் சே குவேரா மற்றும் தோழர் ரோஹண விஜேவீர போன்ற வரலாற்று நாயகர்களின் ஒப்பற்ற தியாகங்களின் வெளிச்சத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையை வெற்றிப் பாதையில் தொடர்ச்சியாக அழைத்துச் செல்லும். இந்த மக்கள் புரட்சியானது வெறும் சில ஆண்டுகளுக்கானது அல்ல; பல தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாக்கும் ஒரு நீடித்த அரசாங்கமாக வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதே நிரூபிக்கப்படவுள்ள உண்மையாக உள்ளது.

அஹமட்  இர்ஷாட்,
08-11-2026

ජන බලයේ දිගු ගමන: බ්‍රසීලයේ, කියුබාවේ සිට ශ්‍රී ලංකාව දක්වා – වාම චින්තනයේ ජයග්‍රහණයේ සහ පරිත්‍යාගයේ ඉතිහාසයක්!

බ්‍රසීලයේ ලූලා, කියුබාවේ සේගුරා, ශ්‍රී ලංකාවේ රෝහණ විජේවීර වැනි අයගේ වාමාංශික අදහස් සහ කැපකිරීම් ගෝලීය සමාජ වෙනස සඳහා ඓතිහාසික උත්ප්‍රේරක වේ.

පවුල් දේශපාලනයට, දූෂණයට, වංචාවට, ජාතිවාදයට එරෙහි ජනතා තීන්දුවක් ලෙස මේ පාලනය සියලු ජාතීන්ට අයත් ජනතාවට සමාන අයිතිවාසිකම් සහ සමාජ සාධාරණත්වය ලබාදීම මත පදනම් වේ.

ආර්ථීක සමානාත්මතාවය, දූෂණයෙන් තොර පාලනයක් සහ මානව ගරුත්වය රැක ගනිමින් අතීතයේ සිදු වූ වැරදි මගහැර රට ඉදිරියට ගෙන යාම රජයේ වැදගත්ම ඓතිහාසික වගකීමකි.
+++++++++++++++++++

රටක දේශපාලන බලය අල්ලා ගැනීම මැතිවරණ ජයග්‍රහණයක් පමණක් නොවේ. දශක ගණනාවක් තිස්සේ ජනතාව තුළ මුල් බැසගත් අදහස්, අසංඛ්‍යාත අරගල, කැපකිරීම්, කැපවීම් සහ සමාජ වෙනසක් සඳහා වූ දැඩි බලාපොරොත්තු එක් වූ විට පමණක් නව දේශපාලන බලවේගයක් ඉතිහාසය තුළ ස්ථානගත වේ. 

විශේෂයෙන්ම කම්කරු පන්තියේ අයිතීන්, ආර්ථික සමානාත්මතාව, සමාජ සාධාරණත්වය, වාර්ගික සංහිඳියාව සහ මානව ගරුත්වය වෙනුවෙන් පෙනී සිටින වාමාංශික මතවාදය මත පදනම් වූ දේශපාලන ව්‍යාපාර බලය ලබා ගනිමින් එම ජනතාවගේ විශ්වාසය අඛණ්ඩව ආරක්ෂා කිරීම විශාලතම ඓතිහාසික අභියෝගයයි.

දේශපාලන බලය පවුල් කිහිපයකට, ධනවතුන්ට හෝ පාලක පන්තියට අයත් නොවේ; වාමාංශික දේශපාලනයේ මූලික දර්ශනය වන්නේ එය අයිති වැඩ කරන ජනතාවට, පීඩිත ජනතාවට, අනාගතය දෙස බලා සිටින සාමාන්‍ය පුරවැසියන්ටය යන අදහසයි. 

වාමාංශික දේශපාලන බලවේග බලය ලබාගෙන පසුව ජනතා සහයෝගය ඇතිව දිගුකාලීන යහපාලනයක් ලබා දෙන බව ජාත්‍යන්තරව ඔප්පු කර ඇති සත්‍යයකි. මෙම චින්තනය ලෝකයේ බොහෝ රටවල විවිධ ඓතිහාසික සන්දර්භයන් තුළ දේශපාලන වෙනස්කම්වලට තුඩු දී ඇත.

බ්‍රසීලයේ මෑතකාලීන දේශපාලන ජයග්‍රහණය මෙයට තවත් වැදගත් උදාහරණයකි. දීර්ඝ කාලීන දේශපාලන අරගල, පරාජයන්, ජයග්‍රහණ මැදින් දේශපාලන ගමන ආරම්භ කළ ලූයිස් ඉනාසියෝ ලූලා ද සිල්වා මහතා 2026 ඔක්තෝබර් 25 වැනිදා පැවැති ජනාධිපතිවරණයෙන් ජයග්‍රහණය කර සිවුවැනි වරටත් ජනාධිපතිවරයාගේ වගකීම භාර ගනිමින් ඉතිහාසගත වාර්තාවක් තබා ඇත. 

දුප්පත් කම්කරුවෙකු ලෙස ජීවිතය ආරම්භ කර බ්‍රසීලය දරිද්‍රතාවයෙන් ගෝලීය ප්‍රසිද්ධියට ඔසවා තැබූ ලූලා, අන්ත ධනේශ්වර සහ දූෂිත බලවේගවල කූටෝපායන් නොතකා සිව්වන වරටත් ජයග්‍රහණය කිරීම පෙන්නුම් කරන්නේ වාමාංශික මතවාදය කෙරෙහි ජනතාවගේ අචල විශ්වාසයයි.

එපමණක් නොව ලක්ෂ 64කට අධික ඡන්ද සංඛ්‍යාවක් ලබා ගනිමින් ඔහු තම දේශපාලන බලය යළිත් වරක් ඔප්පු කර ඇත. එය පුද්ගලයෙකුගේ සාර්ථකත්වය පමණක් නොවේ; කම්කරු පන්තියේ අයිතීන්, සමාජ සුබසාධන වැඩසටහන් සහ සමානාත්මතාවය ප්‍රවර්ධනය කරන දේශපාලන අදහස් ප්‍රජාතන්ත්‍රවාදය හරහා ජනතා සහයෝගය දිගටම ලබා ගත හැකි බව වැදගත් දේශපාලන පණිවිඩයකි.

එසේම කියුබාවේ විප්ලවවාදී ඉතිහාසයට ගෝලීය වාම දේශපාලනයේ සුවිශේෂී ස්ථානයක් හිමිවේ. ෆිදෙල් කැස්ත්‍රෝ සමඟ සේගුරාගේ විප්ලවීය ගමන රටේ දේශපාලන හා සමාජ ව්‍යුහයේ දැවැන්ත වෙනස්කම්වලට තුඩු දුන්නේය. 

වෛද්‍ය විද්‍යාව, අධ්‍යාපනය, සමාජ සුබසාධනය සහ ජාතික ස්වෛරීභාවය ප්‍රවර්ධනය කිරීමේ කියුබාවේ ඉතිහාසය, රටක සම්පත් සහ අවස්ථාවන් මහජන යහපත සඳහා යෙදවිය යුතුය යන අදහස විශ්වීය වශයෙන් විවාදයට ලක් කර ඇත. පුද්ගලික සැනසීම සහ බලයේ වරප්‍රසාදවලට වඩා සමාජ වෙනසක් සඳහා කැපවීම වැදගත් බව ඓතිහාසික මතක් කිරීමක් ලෙස සේගුරාගේ ජීවිතය අදටත් දක්නට ලැබේ.

ශ්‍රී ලංකාවේ වාමාංශික දේශපාලන ගමන සංසන්දනය කිරීමට සිදුව ඇත්තේ එවැනි ජාත්‍යන්තර දේශපාලන ඉතිහාසයක් සමඟය. ශ්‍රී ලංකාවේ මහජන විමුක්ති පෙරමුණ පිහිටුවීමේ සිට එහි දේශපාලන වර්ධනය දක්වා වූ බාධා කිරීම්, මර්දනයන් සහ ඛේදවාචකයන් අප්‍රමාණයි. 

රෝහණ විජේවීරගේ නායකත්වයෙන් යුත් මහජන විමුක්ති පෙරමුණ සාම්ප්‍රදායික දේශපාලන බල ව්‍යුහයන්ට විකල්පයක් ලෙස වැඩකරන ජනතාවගේ, ගොවීන්ගේ, ශිෂ්‍යයන්ගේ සහ තරුනයන්ගේ දේශපාලන සහභාගීත්වය වෙනුවෙන් පෙනී සිටියේය. එකල පැවති සමාජ-ආර්ථික උස් පහත්වීම් සහ දේශපාලන බලය සංකේන්ද්‍රණය වීම ප්‍රශ්න කරමින් එම ව්‍යාපාරය ශ්‍රී ලංකා දේශපාලන ඉතිහාසයේ නව වාමාංශික දේශපාලන බලවේගයක් දක්වා වර්ධනය විය.

ශ්‍රී ලංකාවේ ප්‍රාණ පරිත්‍යාග ඉතිහාසය සහ නව දේශපාලන පරිච්ඡේදය:-
****************************
රෝහණ විජේවීරගේ දේශපාලන ජීවිතය ශ්‍රී ලංකා වාමාංශික ව්‍යාපාරයේ ඉතිහාසයේ මග හැරිය නොහැකි පරිච්ඡේදයකි. 1971 දේශපාලන පෙරළිය සහ 1987-1989 දේශපාලන මර්දනයන් දහස් ගණනක පවුල්වල ජීවිතවල සුව නොකළ කැළැල් ඉතිරි කළේය. 

එම කාල වකවානුවේදී මියගිය තරුණයන්, දේශපාලන ක්‍රියාකාරීන්, සිවිල් වැසියන් ආදී බොහෝ පාර්ශ්වයන්ගේ මරණ සහ ඛේදවාචකයන් අපට අමතක කළ නොහැක. දේශපාලන භේදයකින් තොරව මනුෂ්‍ය ජීවිතයේ වටිනාකමට ගරු කිරීම ශිෂ්ට දේශපාලනයේ පදනම විය යුතුය.

විජයවීරගේ මරණයෙන් ජනතා විමුක්ති පෙරමුණේ දේශපාලන ගමන අවසන් වූයේ නැත. ඒ වෙනුවට ව්‍යාපාරය ක්‍රමක්‍රමයෙන් සිය අතීත අත්දැකීම්වලින් දේශපාලන පාඩම් ඉගෙන ගනිමින් ප්‍රජාතන්ත්‍රවාදී මැතිවරණ දේශපාලනය හරහා නව මාවතක ගමන් කිරීමට පටන් ගත්තේය. 

මෙය ශ්‍රී ලංකාවේ සමකාලීන දේශපාලනයේ වැදගත්ම වෙනසයි. පසුගිය කාලයේ දේශපාලන බලය ලබා ගැනීම සඳහා විවිධ දුෂ්කරතා හා අලාභයන්ට මුහුණ දුන් ව්‍යාපාරයක් අද ජනතාවගේ ප්‍රජාතන්ත්‍රවාදී තීන්දුව හරහා රට පාලනය කිරීමේ වගකීම භාර ගැනීම ඉතිහාසයේ ඉතා වැදගත් සන්ධිස්ථානයකි.

2024 ජනාධිපතිවරණයේ දී අනුරකුමාර් දිසානායක ලැබූ දේශපාලන ජයග්‍රහණයත්, ඉන් අනතුරුව පැවැති මහ මැතිවරණයේදී ජාතික ජන බලවේගය දිනාගත් පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආසන 159ත් මේ වෙනසේ ශක්තිය පෙන්නුම් කළේය. 

විශේෂයෙන්ම වාර්ගික, ආගම්, භාෂා භේදයකින් තොරව විවිධ ජන කොටස්වල පිරිස් නව දේශපාලන වෙනස සඳහා සහයෝගය ලබා දීම ශ්‍රී ලංකාවේ අනාගතය පිළිබඳ වැදගත් බලාපොරොත්තුවක් ලෙස සැලකේ.

ජාතික ජන බලවේගයේ දේශපාලන ජයග්‍රහණය පක්ෂයක මැතිවරණ ජයග්‍රහණයක් ලෙස සරලව දැක්විය නොහැක. දශක ගණනාවක් ශ්‍රී ලාංකේය දේශපාලනය ආධිපත්‍යය දැරූ පවුල් දේශපාලනයට, බලය බෙදීමේ නාමයෙන් කරන සහන දේශපාලනයට, දූෂණයට, වංචාවට, රාජ්‍ය සම්පත් අවභාවිතයට, ජනවාර්ගිකත්වය මුල්කරගත් බල අරගලවලට එරෙහිව ජනතාව විසින් වෙනස් කිරීමේ තීන්දුවක් ලෙස දේශපාලන නිරීක්ෂකයෝ දකිති.

අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ආණ්ඩුවේ දේශපාලන දර්ශනයේ වැදගත්ම අංගය වන්නේ ශ්‍රී ලංකාව සිංහලයාගේ රටක්, දෙමළ ජනයාගේ රටක් හෝ මුස්ලිම් ජනතාවගේ රටක් නොවන බවයි; ඒ කියන්නේ මේ රටේ ජීවත් වන සෑම ජාතියකටම සහ ආගමකටම අයත් මිනිසුන්ට සමාන අයිතිවාසිකම් සහ ගෞරවය හිමි විය යුතු පොදු නිජභූමියක්.

කම්කරු පන්තියේ ශ්‍රමයට නිසි වටිනාකමක් දිය යුතුයි. ගොවීන්ගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවිය යුතුයි. ධීවරයන්ගේ ජීවනෝපාය ආරක්ෂා කළ යුතුයි. තරුණ තරුණියන්ට රැකියා උත්පාදනය කළ යුතුයි. අධ්‍යාපනය, සෞඛ්‍ය, ආර්ථික අවස්ථා ධනවතුන්ට පමණක් අයත් නොවිය යුතුයි. උතුර, නැඟෙනහිර, දකුණ, කඳුකර ප්‍රදේශවලට සංවර්ධන අවස්ථා සඳහා සමාන ප්‍රවේශයක් තිබිය යුතුය. සැබෑ වාම චින්තනයේ සමාජ වටිනාකම මෙයයි.

දශක ගණනාවක් මැතිවරණ ජයග්‍රහණය සඳහා කුලවාදය සහ ආගම්වාදය ආයුධ කරගත් දේශපාලන පක්‍ෂවලට කුල භේද ඉක්මවා ජනතාව එක්වන නව දේශපාලන පරිසරය අභියෝගයකි. එබැවින් ආණ්ඩුවේ සෑම ක්‍රියාවක්ම විකෘති කර ජනතාව තුළ බියක් සැකයක් ඇති කර පැරණි දේශපාලන හැඟීම් යළි ඇති කිරීමට විරුද්ධ පක්ෂ උත්සාහ ගෙන ඇත.

බ්‍රසීලයේ ලූලාගේ, කියුබාවේ සේගුරාගේ සහ ශ්‍රී ලංකාවේ රෝහණ විජේවීරගේ දේශපාලන ජීවිතය එකිනෙකට වෙනස් ඓතිහාසික සන්දර්භයන් සහ විවිධ අරගල මාර්ග ඇත. ඔවුන් එකම දේශපාලන පරිමාණයෙන් විනිශ්චය කළ නොහැක. එහෙත් සමාජ අසමානතාවයට එරෙහි දේශපාලන චින්තනය, පුද්ගල ජීවිත කෙරෙහි පොදු සමාජ වෙනසකට කැපවීම, බල ව්‍යුහයන් වෙනස් කිරීමට අධිෂ්ඨාන කිරීම වැනි ඇතැම් ඓතිහාසික සම්බන්ධතා ඔවුන්ගේ ගමන් බිමන් තුළ සොයා ගත හැකිය.

ඒ ආකාරයට ජාතික ජන බලවේගය රජය තම මුතුන් මිත්තන්ගේ අරගල ඉතිහාසය සිහිපත් කර ඔවුන්ගේ දේශපාලන අරගලවල මූලික අරමුණු වන සමාජ සාධාරණත්වය, සමානාත්මතාවය, මානව ගරුත්වය, දූෂණයෙන් තොර පාලනය, වාර්ගික සහජීවනය වැනි අරමුණු ක්‍රියාත්මක කළ යුතුය. එමෙන්ම අතීතයේ සිදු වූ ප්‍රචණ්ඩත්වය සහ වැරදි නැවත සිදු නොකර ප්‍රජාතන්ත්‍රවාදය සහ මානව හිමිකම් ආරක්ෂා කිරීම ද එහි අරමුණයි.

විපක්ෂයේ පක්ෂ අසාර්ථක වීමෙන් පමණක් ආණ්ඩුවේ සාර්ථකත්වය මනින්න බැහැ. ඒ සාර්ථකත්වය මැනිය යුත්තේ දරිද්‍රතාවයෙන් මිදුණු පවුලක සතුට, රැකියාවක් ලබන තරුණයකුගේ අනාගතය, ගුණාත්මක අධ්‍යාපනයක් ලබන ග්‍රාමීය දරුවෙකුගේ ප්‍රගතිය, කුල භේදයකින් තොරව යුක්තිය ඉටුවන සාමාන්‍ය පුරවැසියකුගේ අපේක්ෂාවයි.

එබැවින් ජාතික ජන බලවේගයේ දේශපාලන ගමන මැතිවරණ ජයග්‍රහණයෙන් අවසන් වන ගමනක් නොවේ. දශක ගණනාවක දූෂණයෙන්, බල දේශපාලනයෙන් සහ ජාතිවාදයෙන් පසු නව සමාජ ගිවිසුමක් මත පදනම්ව ශ්‍රී ලංකාව යළි ගොඩනැගීම දිගු ඓතිහාසික වගකීමකි.

බ්‍රසීලයේ ලූලාගේ සිව්වැනි මැතිවරණ ජයග්‍රහණය වාමාංශික දේශපාලන චින්තනයට අඛණ්ඩව ලැබෙන ජනතා සහයෝගය පිළිබඳ සාක්ෂියක් වන අතර, කියුබාවේ විප්ලවවාදී ඉතිහාසය සහ ශ්‍රී ලංකා මහජන විමුක්ති පෙරමුණේ දීර්ඝ අරගලයේ ඉතිහාසය සමාජ වෙනසක් සඳහා දේශපාලන කැපවීමේ වැදගත්කම අපට මතක් කර දෙයි. අද ශ්‍රී ලංකාවේ එම ඓතිහාසික වගකීම අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය භාරගෙන තිබෙනවා.

ජනතාවගේ ලෙයින් කඳුළින් ලියැවුණු අතීත දේශපාලන ඉතිහාසය දැන් ලිවිය යුත්තේ ජනතාවගේ විශ්වාසය, සමානාත්මතාවය සහ යුක්තිය ඇතිවයි. බලය සුළු පිරිසකගේ වරප්‍රසාදයක් නොව සැමට සේවයක් විය යුතුය.

එපමණකින්ම මහජන විමුක්ති පෙරමුණේ දීර්ඝ දේශපාලන ගමනට සහ ජාතික ජන බලවේගයේ වත්මන් පාලනයට සැබෑ ඓතිහාසික වටිනාකමක් ලැබෙනු ඇත.  දූෂණයෙන් තොර, වාර්ගික සංහිඳියාවෙන් පිරි, සමාජ සාධාරණත්වය සහ ආර්ථික සමානාත්මතාවයෙන් පිරි, මතු පරපුරට අභිමානයෙන් ජීවත් විය හැකි නව ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීම අනාගත මැතිවරණ ජයග්‍රහණවලට වඩා වැදගත් ය.

එම අරමුණ කරා යන ගමනේදී ජාතික ජන බලවේගය තම ජනතා විශ්වාසය ආරක්ෂා කර ගනිමින් ප්‍රජාතන්ත්‍රවාදී මාවතේ අඛණ්ඩ ජයග්‍රහණ අත්කර ගත යුතු බව රටේ ප්‍රගතිශීලී දේශපාලන චින්තකයන්ගේ අපේක්ෂාවයි.

ඒ අනුව චේගුවේරා සහෝදරයා, රෝහණ විජේවීර සහෝදරයා වැනි ඉතිහාසගත වීරයන්ගේ අනුපමේය කැපකිරීම් හමුවේ අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය අඛණ්ඩව ශ්‍රී ලංකාව ජයග්‍රාහී මාවතට ගෙන යනු ඇත. මේ ජනතා විප්ලවය වසර කිහිපයකට පමණක් නොවේ; එය දශක ගණනාවක් ශ්‍රී ලංකාවේ සමානාත්මතාවය සහ යුක්තිය ආරක්ෂා කළ චිරස්ථායී රජයක් ලෙස ඉතිහාසයට එක්වන බව ඔප්පු වූ සත්‍යයකි.

අහමඩ් ඉර්ෂාඩ්,
දිනකරන් වරමංජරී වෙනුවෙන්
08-11-2026
සිංහල පරිවර්තනය සමග) மக்கள் சக்தியின் நீண்ட பயணம்: பிரேசில், கியூபா முதல் இலங்கை வரை – இடதுசாரிச் சிந்தனையின் வெற்றியும் தியாகங்களின் வரலாறும்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.