பிரஜா சக்தியின் முன்மொழிவுகள் அபிவிருத்திகளாக மாறுகின்ற தருணம்.
(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
புதிய காத்தான்குடி 167/B கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நூறானியா மையவாடி வீதி முதலாம் குறுக்கு ஒழுங்கை வீதியானது கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் (RRDP) 140 மீட்டர் கொங்கிறீட் வீதியாக தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் தேவை கருதி, மிகவும் அவசியமான வீதிகளை இனங்கண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி செயற்குழுவின் முயற்சியால் குறித்த வீதி தற்போது அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகளைபிரஜா சக்தியின் தலைவர் அல்ஹாபிழ்.MCM.மன்சூர், மூலோபாயக் குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அடுத்த வீதியாக இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் புதிய காத்தான்குடி அன்வர் முன்பள்ளிப் பாடசாலை வீதியும் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரஜா சக்தியின் முன்மொழிவுகள் அபிவிருத்திகளாக மாறுகின்ற தருணம்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 14, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 14, 2026
Rating:













கருத்துகள் இல்லை: