Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மனக்கவலைகளுக்குச் செவிசாய்க்க மக்களின் வீடுகளை நாடிச் செல்லும் உளசமூக ஆதரவு அமைப்பு!


மனக்கவலைகளுக்குச் செவிசாய்க்க மக்களின் வீடுகளை நாடிச் செல்லும் உளசமூக ஆதரவு அமைப்பு!

மாவடி வேம்புவில் மனநலம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

மனக்கவலைகளை மனதிற்குள் அடக்கி வைத்திருப்பது ஒருவரின் மனநலத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே, மனக்கவலைகளை நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் மனம் திறந்து பகிர்ந்துகொள்வது அவசியம் என கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு, மாவடி வேம்பு ஜெப மத்திய ஸ்தலத்தில் இன்று (11.11.2026) நடைபெற்ற மனநலம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாவடி வேம்பு பிரதேசத்தில் உளசமூக ஆதரவு அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களால் அடையாளம் காணப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


உளசமூக ஆதரவு மையத்தின் தன்னார்வத் தொண்டர்களான ஈ. நேமிக்கா, எம்.ஏ. சாலியா, எம். நசீஹ், டி. கமலவதனி மற்றும் எம்.எம்.கே. திலகா ஆகியோரின் ஒழுங்கமைப்பில், மாவடி வேம்பு ஜெப மத்திய ஸ்தலத்தின் ,அருட்பணியாளர் எஸ். மோகனதாஸ் அவர்களின் வழிகாட்டலில், மட்டக்களப்பு சர்வதேச உளவியல் சார்புகள் நிலையத்தின் பணிப்பாளரும், உளசமூக ஆதரவு அமைப்பின் தலைவியுமான தேவரஞ்சனி பிரான்சிஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி எஸ். பிரான்சிஸ், பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மனக்கவலைகளையும் எதிர்கொள்ளும் பலர் அவற்றை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்திருப்பதால் தங்களது இயல்பான மகிழ்ச்சியையும் வாழ்க்கை நிம்மதியையும் இழக்கின்றனர். இத்தகையவர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தேவையான விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்குவது அவசியமாகும். அத்துடன், அவர்களது பிரச்சினைகளை உரிய அரச திணைக்களங்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும் உளசமூக ஆதரவு அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.


இப்பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், மக்களின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கிழக்கு மாகாண கௌரவ  ஆளுநர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் மக்களின் பிரச்சினைகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

நிகழ்வில்  அருட்பணியாளர் எஸ். மோகனதாஸ், அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 


ஒரு பிரச்சினையைக் கையாளும்போது அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளும் அறிவும் ஆரோக்கியமான மனப்பாங்கும் அவசியம் என்றார். இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற வழிகாட்டல்களை வழங்குவதுடன், நம்பிக்கையையும் மனவலிமையையும் ஏற்படுத்த முடியும். உளசமூக ஆதரவு அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் மக்களுக்குத் துணையாக நின்று அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பது பாராட்டத்தக்க பணியாகும். இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்திலும் எமது பிரதேசத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


மக்களின் மனக்கவலைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களது வீடுகளுக்கே சென்று பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தேவையான வழிகாட்டல்களையும் உரிய உதவிகளையும் பெற்றுக்கொடுக்கும் இத்தகைய உளசமூக ஆதரவு நடவடிக்கைகள் கிராமம் தோறும் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

மனக்கவலைகளுக்குச் செவிசாய்க்க மக்களின் வீடுகளை நாடிச் செல்லும் உளசமூக ஆதரவு அமைப்பு! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.